News
Loading...

மதத்தை பரப்ப வெறித்தனமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்ஸ்

மதத்தை பரப்ப வெறித்தனமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்ஸ்

பாகிஸ்தானில் மக்கள் தொகையானது ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும்நிலையில் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆண்கள் முனைப்பு காட்டிவரும் தகவலானது வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தானில் நிலவிய நிலையற்ற ஆட்சி மற்றும் ராணுவ ஆட்சியால் கடந்த 19 வருடங்களாக அந்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானில் நிலவும் நிலையான ஆட்சியின் காரணமாக 6-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 1998-ம் ஆண்டுக்கு பின்னர்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு கவலையளிக்கும் விதமாக மக்கள் தொகையானது இருக்கும் என கருதப்படுகிறது. 

தெற்கு ஆசியாவில் அதிகமான பிறப்பு விகிதம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. உலக வங்கி தகலின்படி அந்நாட்டில் ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் என்ற விகிதத்தை காட்டுகிறது, ஆனால் இப்போதைய மக்கள் தொகை முடிவானது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கும், மக்கள் தொகை அதிகரித்து இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 1998 ம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அந்நாட்டில் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 13.5 கோடியாகும். இப்போது எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகையின் முடிவானது ஜூலையில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 முடிவானது 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை காட்டும் என பார்க்கப்படுகிறது.

ஆனால் எதுபற்றியும் கவலைபடாத மத குருமார்கள் மூன்று பேர் 96 குழந்தைகளை பெற்று உள்ளனர், அல்லா பார்த்துக் கொள்வார் என்பதே அவர்களுடைய பதிலாகும். 

குடும்ப கட்டுப்பாட்டிற்கு இஸ்லாம் தடை செய்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டு உள்ள, 36 குழந்தைகளுக்கு தந்தையானது குல்சார் கான் பேசுகையில், “இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை பிறப்பை நான் கட்டுப்படுத்த வேண்டும்?” என பதில் கேள்வியை எழுப்புகிறார். 

பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பழங்குடியின விரோத போக்கானது மக்கள் தொகைக்கு காரணமாக உள்ளது. பன்னு பகுதியில் மூன்று மனைவிகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மூன்றாவது மனைவி இப்போது கர்ப்பமாக உள்ளார்.  23 குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும் போது குல்சார் கான் பேசுகையில், நாங்கள் வலிமையாக வேண்டும், என்னுடைய பிள்ளைகளுக்கு கிரிக்கெட் விளையாட நண்பர்கள் தேவையில்லை என அதிர்ச்சியான பதிலை கொடுத்து உள்ளார். 

பலதார திருமணம் என்பது பாகிஸ்தானில் சட்டப்பூர்வமானது, ஆனால் கான் போன்றோர்களுக்கு விதிமுறை கிடையாது. அவருடைய நம்பிக்கையானது பரவலாக உள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் 10 ஆண்டுகளில் இருந்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது, கடந்த மாதம் இஸ்லாமாபாத் அதன் வளர்ச்சி வரவு செலவு திட்டத்தை 40 சதவிகிதமாக உயர்த்தியது. ஆனால் கண்காணிப்பாளர்கள் இத்தகையை மக்கள் தொகை பெருக்கமானது வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கையை எழுப்பி உள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கு போராடி வருகிறது. சுமார் 60 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.

இவரது அண்ணன் மஸ்தான் கான் வாஸிருக்கும் மூன்று மனைவிகள். இவர்களுக்கு 22 குழந்தைகள் உள்ளனர். கடவுள் உணவையும் வசிப்பதற்கு தேவையான வசதிகளையும் வழங்குவதாக உறுதியளித்து உள்ளார். ஆனால், மக்கள் அவர் மீதான நம்பிக்கையில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று கூறும் மஸ்தான் ‘எங்கள் வீட்டில் குழந்தைகள் விளையாட, வெளியில் செல்ல தேவையில்லை' என்று கூறுகிறார். குயிட்டாவை சேர்ந்த ஜான் முகமது என்பவருக்கு 38 குழந்தைகள் உள்ளது. இவருடைய லட்சியம் எல்லாம் நூறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். 

ஆனால் அவருடைய லட்சியத்தை அடைய 4-வது மனைவியாக பெண்கள்தான் தயாராக இல்லையாம். அது அவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் மேலும் பேசுகையில், ‘இஸ்லாமியர்கள் அதிகரித்தால் அவர்களின் எதிரிகள் பலவீனமடைவார்கள். அதனால் இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார். குடும்ப கட்டுப்பாடு பற்றி இவர்களின் மனைவிகளிடம் பேச கேட்டபோது, அவர்களுடைய் கணவர்கள அனுமதிக்கவில்லை. 

ஐ.நா. மக்கள் தொகை கவுன்சிலுக்கான பாகிஸ்தான் நாட்டிற்கான இயக்குநர் ஜீபா ஏ சாதார் பேசுகையில், மக்கள் தொகை அதிகரிப்பானது சுகாதாரத்தை பாதிக்கும், வளர்ச்சியை பாதிக்கும்.  பாகிஸ்தானில் ஏற்கனவே குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு பரப்பப்படுகிறது, ஒரு குழந்தையை பெற்று கொண்ட பெண் அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள 18 மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார். பாகிஸ்தானில், மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...