News
Loading...

இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்

இந்து சிலைகளை விற்ற டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்

ருப்புக்கோட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை விற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் டி.எஸ்.பி. காதர் பாட்சாவை கைது செய்ய, சிலைகடத்தல் தடுப்புப் போலீசார் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஆலடிப்பட்டியில் ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தில் கிடைத்த 6 ஐம்பொன் சிலைகளை, அப்போதைய அருப்புக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், அவர்களே கோடிக்கணக்கில் விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரினார். இதன்படி நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை காதர்பாட்சா விற்றது தெரியவந்தது.

இதையடுத்து சிலை விற்பனைக்கு காதர்பாட்சாவின் கூட்டாளியாக செயல்பட்ட தற்போதைய கோயம்பேடு காவல்நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் சுப்புராஜை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருவள்ளூர் டிஎஸ்பி காதர்பாட்சாவையும் கைது செய்ய அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது அவர் மதுரையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காதர்பாட்சாவை கைது செய்ய தனிப்படை போலீசார் துரிதம் காட்டி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...