News
Loading...

நவீன கருவிகளை இயக்கத்தெரியாமல் திணறிய வீரர்கள்!

நவீன கருவிகளை இயக்கத்தெரியாமல் திணறிய வீரர்கள்!

சென்னை தி.நகர் சென்னை சில்கஸ் கட்டிடத்தின் தீயை அணைக்கக் கொண்டு வரபட்ட ராட்சத ஸ்கை லிப்ட் வாகனத்தை இயக்க முடியாமல் தீயணைப்பு அதிகாரிகள் திணறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளூக்கு இணையாக தமிழக தீயணைப்புத்துறையை மேம்படுத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அதிநவீன உபகரணங்களை தீயணைப்புத்துறைக்கு வழங்கினார். அதில் மிக உயர்ந்த கட்டிடத்தில் ஏற்படும் தீயை ஸ்கை லிப்ட் எனப்படும் மீக நீண்ட உயரத்திற்கு செல்லக்கூடிய இவ்வாகனம், கடந்த இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க கொண்டு வரப்பட்டது. 

இதில் மூன்று வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில், கூடுதல் உயரம் செல்லக்கூடிய மற்றொரு வாகனம் அதிகாலை கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாததால், தி.நகர் பாலத்தின் கீழ்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் கழித்து அவ்வாகனத்திற்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் வரவழைக்கப்பட்டு, அவருடைய உதவியுடன் வாகனம் இயக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

வாகனத்தை இயக்க வந்த ஊழியரும், ஸ்கைப் வழியே தனது நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட தகவல் மூலம் அவ்வாகனத்தை இயக்கினார். பின்னர் தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்திலேயே கற்றுக்கொடுக்கப்பட்டது. ஏற்கனவே தீயை அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிவந்த நிலையில், நவீன கருவிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை இயக்கத் தெரியாமல் ஊழியர்கள் திணறியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...