News
Loading...

மதுவிற்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய ஏ.டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு

மதுவிற்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய ஏ.டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதில் ஏ.டி.எஸ்.பி மற்றும் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த 21 பேருக்கு எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை கடுமையாக தாக்கிய ஏ.டி.எஸ்.பி பாண்டியாரஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை தாக்கி கடும் விமர்சனத்திற்கு ஆளான திருப்பூர் ஏ.டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...