News
Loading...

அஞ்சல் துறை தேர்வில் ஹரியாணாவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்: சிபிஐ விசாரணை

அஞ்சல் துறை பணிக்கான தேர்வில் ஹரியாணாவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்: சந்தேகத்தில் சிபிஐ விசாரணை

ஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்துக்கான அஞ்சல்காரர் மற்றும் அஞ்சல் பாதுகாவலர் பணிக்கான நேரடி எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்தது. பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் என 4 தாள்கள் இடம்பெற்றன.

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஹரியாணாவைச் சேர்ந்த பலரும் மகாராஷ்டிரா, பஞ்சாபைச் சேர்ந்த சிலரும் தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் துறை கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில், “அஞ்சல்காரர் பணிக்கான தேர்வில் பெயர் தெரியாத விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். குறிப்பாக, ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் தமிழ் பாடத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஹரியாணா மாநில கல்வி வாரிய பாடதிட்டத்தின் கீழ் படித்த அவர்கள் தமிழில் அதிக மதிப் பெண் பெற வாய்ப்பு இல்லை” என கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...