News
Loading...

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரயலகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் புதராஜூ கிருஷ்ணா. பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கிருஷ்ணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுதாராணி  விபசார தொழில் செய்து வந்து உள்ளார். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணா தனது 14 வயது மகளை சுதாராணியிடம் விலை பேசி உள்ளார்.

10 ஆயிரம் விலைபேசிய சுதாராணி  ரூ. 3 ஆயிரம் முன்பணம் கொடுத்து உள்ளார். பின்னர் தனது வாடிக்கையாளர்கள் பவன்,ஜவஹர்,முகமது வாகித் ஆகியோரிடம் ரூ. 5 ஆயிரம் பெற்று கொண்டு சிறுமியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கிருஷ்ணா தனது மகளை சுதாராணிடம் ஒப்படைத்து உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களுடன் சிறுமியை அழைத்து கொண்டு ஒருகாரில் தேவரகொண்டா என்ற இடத்திற்கு சென்று உள்ளார். நடு வழியில்  மதுபானம் வாங்கியவர்கள் சுதாராணிக்கு கொடுத்து உள்ளனர். பின்னர் சிறுமியை மது அருந்துமாறு வற்புறுத்தி உள்ளனர். 

கார் சென்று கொண்டு இருக்கும் போது சிறுமியின் தந்தை கிருஷ்ணா சுதாராணியிடம் மீதி பணம் கேட்டு உள்ளார். சுதாராணி தனது வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவையும் காரில் இருந்து  இறக்கி விட்டனர். பின்னர் சிறுமியை வைத்து கொண்டு இரண்டுவாரம் காரிலேயே சுற்றி உள்ளனர்.

இந்த நிலையில் பணம் கிடைக்காததால் தனது மகளை கடத்தியதாக கிருஷ்ணா போலீசில் புகார் செய்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணா மாவட்டத்தில் வைத்து சுதாராணியை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும்  சிறுமியின் தந்தை உள்பட 3  பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிறுமி நலகொண்டா பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...