News
Loading...

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல், 7 யாத்ரீகர்கள் பலி

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல், 7 யாத்ரீகர்கள் பலி

காஷ்மீரில் ஆனந்தநாக் மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெஞ்சாலையில் அமர்நாத் யாத்திரை சென்ற பஸ் மீது  இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 யாத்ரீகர்கள் பலியாயினர். 

அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தமான தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், அமர்நாத் நோக்கி, யாத்ரீகர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில், படின்கு பகுதியில், போலீசாரின் பாதுகாப்போடு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது, கண்மூடித்தனமாக தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில், 7 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில், உமர் அப்துல்லா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மோடியிடம் விளக்கியுள்ளார். தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிலைமை குறித்து கேட்டறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்சிங்கிடமும் நிலமை குறித்து விளக்கி வருகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...