News
Loading...

சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்

சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி ஹாரூணின் சகோதரர்களுக்கு போலீஸார் சம்மன்

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஹாரூணின் சகோதரர்களுக்கு ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஹாரூன் ரஷீத் என்பவரை, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.

சென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ள ஹாரூன் ரஷீத், யானைகவுனியில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.

அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பியதால் ராஜஸ்தான் போலீஸார், ஹாரூணின்  வங்கிப் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஹாரூணின் சகோதரர்களான, மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர் ஆகியோருக்கு, ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளார்.

அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாரூணின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிப்பதற்காக அவரது சகோதரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...