News
Loading...

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக கட்சியின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை நீக்கி இணைந்திருக்கிறார்கள். இந்த அரசியல் மாற்றம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: சின்மயி

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவமானப்படுத்த நினைக்கும் நம் மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். நாட்டை ஆள்கிறவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியவில்லையாம், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளரைத் திருத்தி, அவமானப்படுத்துவதில் என்ன பயன்?

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...