News
Loading...

அஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு சிலை வைக்கப்பட்டது

கும்பகோணத்தில் இன்று திறக்கப்பட உள்ள நடிகர் அஜித்குமாரின் ஃபைபர் கிளாஸ் சிலைக்கு இறுதிவடிவம் கொடுக்கிறார் திம்மக்குடி சிற்பசாலையின் ஹரிபாபு.

திரைப்பட நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவருக்கு கும்பகோணத்தில் சிலையொன்று வடிவமைக்கப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திம்மக்குடியில் ரூ.1 லட்சம் செலவில் அஜித் சிலை வடிவமைக்கப்பட்டு இன்று திறக்கப்படவுள்ளது. கும்பகோணத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோரின் ஏற்பாட்டில், அவர் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு சுமார் 4 அடி உயரம், 20 கிலோ எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களாக இரவு பகலாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலை, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் இன்று திறக்கப்படவுள்ளது. அஜித் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ’விவேகம்’ திரைப்படத்தின் வரும் கதாபாத்திரத்தைப்போல இந்த சிலையை திம்மக்குடியில் உள்ள சிற்ப சாலையைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் வடிவமைத்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...