News
Loading...

அமேஸான் ஆன்லைன் நிறுவனத்தால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு – அதிபர் டிரம்ப்

அமேஸான் ஆன்லைன் நிறுவனத்தால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு – அதிபர் டிரம்ப்

அமேஸான் ஆன்லைன் நிறுவனத்தால் சில்லறை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பிஸோஸ் ((Jeff Bezos)) க்கு, டிரம்ப் நேரடியாக அனுப்பியுள்ள ட்விட்டர் தகவலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமேஸான் நிறுவனத்தால் அமெரிக்காவின் பெரும்பாலான சிறுவர்த்தகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமேஸான் நிறுவனம் ஒழுங்கான முறையில் வரி செலுத்துவதில்லை என்று ஏற்கனவே டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


டிரம்ப் மாதிரி ஒருத்தர் இந்தியாவுக்கு பிரதமரா வந்தா, இந்தியாவ எவனாலும் அசைக்க முடியாது. மோடி தவறான பொருளாதார கொள்கை கொண்டுள்ளார். உலகிலையே மக்கள்த் தொகை அதிகம் உள்ள இந்தியாவில், மனித சக்தியை சரியாக பயன்படுத்தி சிறுவணிகத்தை ஊக்குவித்தாலே இந்தியா வல்லரசு ஆகிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...