News
Loading...

தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை!

தினகரன் செய்த வடுகபைரவர் பூஜை!

மேலூரில் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த உற்சாகத்துடன், மறுநாள் மனைவி மற்றும் மகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார் தினகரன். கோயில் தக்கார் கருமுத்து கண்ணனும் அதிகாரிகளும் தினகரனை வரவேற்றனர். அதன்பின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள தேனம்மை உடனுறை மங்கைபாகர் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்றார். இங்குள்ள வடுகபைரவர் மிகவும் உக்கிரமானவர். அவருக்குப் பூஜைகள் செய்தால், எதிரிகள் அனைவரையும் அழித்துவிடுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இங்கு வடுகபைரவருக்கு சத்ருசம்ஹார பூஜையும், கோபூஜையும் செய்தார் தினகரன். அடுத்து சில நாள்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் சில பரிகாரக் கோயில்களில் சிறப்பு பூஜைகளை தினகரன் செய்ய உள்ளார். பொதுக்கூட்டங்களுடன் பூஜைகளும் தொடர்ந்து நடக்குமாம். ‘‘தேனி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, கட்சியில் உங்களை எதிர்க்க யாரும் இல்லாதபடி இந்த பூஜைகள் செய்துவிடும்’’ என ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...