News
Loading...

மேல்நிலைப்பள்ளி மாணவனை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பங்குத்தந்தை

மேல்நிலைப்பள்ளி மாணவனை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பங்குத்தந்தை

சென்னை திருவொற்றியூரில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பள்ளி மாணவனுக்கு, புதிய உடைகள் வாங்கித் தந்து ஆசை வார்த்தை கூறிய கிறிஸ்தவ பாதிரியார், அவனை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உதவி பெறும் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன், 10-ம் வகுப்பில் அணிந்த பழைய சீருடையை அணிந்து வரவே, அவனை பள்ளியின் உதவி பங்கு தந்தை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது, தனக்கு தந்தை இல்லை எனவும், தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் மாணவன் கூறியுள்ளான். இதையடுத்து, புதிய உடைகள் வாங்க ஆயிரம் ரூபாய் பணம் வழங்கிய பங்குத் தந்தை, அவனை ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைக்கும்படி வற்புறுத்த தொடங்கியுள்ளார்.

மாணவனுக்கு ஹோமோசெக்ஸ் குறித்தும் லெஸ்பியன் குறித்தும் செல்போன் மூலம் வகுப்பு எடுத்த உதவி பங்குத் தந்தை, இது குறித்த வீடியோக்களை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் மன உளைச்சல் தாங்க முடியாத மாணவன், இது குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளான். அதன் பிறகு பங்குத் தந்தை பேசும் ஆபாச அழைப்புகளை செல்போனில் பதிவு செய்த மாணவன், அதை சக மாணவர்களுக்கும் அனுப்பியுள்ளான். மாணவிகளை ஏற்பாடு செய்யும்படியும் உதவி பங்குத் தந்தை வற்புறுத்தியதாக மாணவன் கூறுகிறான்.

உதவி பங்குத் தந்தையின் ஆபாச உரையாடல்கள் மாணவர்கள் மத்தியில் காட்டுத் தீயாய் பரவியதும், பதற்றத்துக்கு ஆளான மாணவிகள், அவரை உடனடியாக பள்ளியைவிட்டு வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பள்ளிக்கு சென்ற போலீசார், மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய பங்குத் தந்தை, ஒழுக்கக் கேடாக நடந்துகொள்வது குறித்து பள்ளிச் சிறுவனுக்கு பாடம் எடுத்தது, பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...