News
Loading...

அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார்: திமுக எம்எல்ஏ மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார்: திமுக எம்எல்ஏ மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி “அனிதாவின் மரணம் தன்னிச்சையானது அல்ல. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீட் தோல்வியால்தான் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோரோ, காவல்துறையோ கூறவில்லை. அனிதா சுயமாக முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக கருதமுடியாது. தூண்டிவிடப்பட்டதாலேயே அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். உச்சநீதிமன்றம் வரை போராடும் குணம் பெற்ற அனிதாவை யாரோ தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். எனவே, அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர் மரணத்தில் மிகப்பெரிய சதி இருக்கலாம். இது தொடர்பாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திர பாபு ஆகியோரை விசாரிக்க வேண்டும். அனிதாவின் மரணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் முயற்சி தமிழகத்தில் நடக்கிறது. அதேபோல், இதை வைத்து தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது” என தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...