News
Loading...

4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்

4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்

4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம் - இந்திய சட்டத்திற்கும் மேலானவையா கிருஸ்துவ தேவாலயங்கள் ? 
#SexForSilence #MalankaraOrthodoxChurch #ChurchRape

டந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில், கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், 39 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் தற்போது சில திடிக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு, அந்த பெண்ணின் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக தேவாலயத்தில் உள்ள தனது அலுவலகத்திலற்கு அழைத்துள்ளார், பாதிரியார் பின்னு ஜார்ஜ். கற்பழிப்பு சம்பவம் நடந்த போது அவர், மலங்கரா ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தின் கீழ் இயங்கும், செயிண்ட் மேரிஸ் ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்துள்ளார். மலங்கரா ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தில் தான், ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து, ஒரு பெண்ணை பாலியல் இரையாக்கினர் என்பது குறிப்பிடித்தக்கது.

தற்போது பாதிக்கப்பட்ட 39 வயது பெண்ணிற்கு திருமணமாகி 2 குழைந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. காவல் துறையினரிடம் அந்த பெண் அளித்துள்ள புகாரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் தனது கணவருக்கும் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி, தேவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தன்னை கற்பழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட குற்றவியல் பிரிவு DSP திரு. சிவபிரசாத், தி நியூஸ் மினிட் இணையதள செய்தியிடம் கூறுகையில், “2014 ஆம் ஆண்டே, பாதிக்கப்பட்ட பெண் தேவாலயத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் ஒருவரையும், தேவாலய அதிகாரிகளை வைத்துக் கொண்டும் அந்த பெண்ணிடம் சமாதானம் பேசி, குற்றம் புரிந்த பாதிரியாரை ரன்னியில் உள்ள தேவாலயத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டனர்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பணியிட மாற்றம் செய்வதற்கே 3 ஆண்டுகள் ஆகியுள்ளது என அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த கற்பழிப்பிற்கு, 2017 ஆம் ஆண்டு தான் பாதிரியார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பாதிரியார் பின்னு ஜார்ஜ்ஜின் கொடுமைகள் அத்துடன் நின்று விடவில்லை. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும், அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் என காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு ஆபாச புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார் பாதிரியார். 

அந்த பெண்ணை குறித்து அவதூறான கருத்துகளை அனைவரிடமும் பரப்பி அந்த பெண்ணை அவமானப் படுத்தியுள்ளார். தேவாலயத்தில் சுவிசேஷ கூட்டத்தின் போது கூட அந்த பெண்ணை பற்றி அவதூறு பரப்பியதால் தான், அந்த பெண் காவல் நிலயத்தை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. 

ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து, ஒரு பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமையில் கூட, இதே தேவாலயம் தான், விசாரணை நடத்துவதாக கூறி, குற்றம் புரிந்த பாதிரியார்களுக்கு உதவி வந்தது. பாதிரியார்களுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை தான் தண்டனையாக  கிடைத்தது. பிறகு, ஊடகங்களால் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, வேறு வழி இல்லாமல், ஒரு பாதிரியார், காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

மத சார்பற்ற இந்திய நாட்டில் காவல்துறை, சட்டம், நீதிமன்றம் என அனைத்தும் இருக்கும் போது, கிறிஸ்துவ நாடுகளை போன்று தேவாலயங்கள் எதற்காக விசாரணை நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுவதற்கு முன்பு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதற்காக தேவாலயங்களை நாடுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தேவாலயத்தை தான் அணுக வேண்டும் என்ற அளவிற்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்களா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுகின்றன. ஆனால், இறுதியாக நீதி கிடைக்க வேண்டுமானால், அவர்கள் இந்திய சட்டத்தை தான் நாட வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது இந்த சம்பவங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.