News
Loading...

விஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்

விஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்

விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முதலில் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் '96'. படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இந்நிலையில், படத்தோட டீசர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின்  ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இவரது முதல் படைப்பான இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார்.

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதியும் ஜானு என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். 'அசுரவதம்' படத்துக்கு இசையமைத்த கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.