News
Loading...

மறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்

மறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்

விவாகரத்து ஆன முஸ்லீம் பெண் மறுமணம் செய்ய வேண்டுமானால் ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும் என வர்புறுத்தப்படுகிறாள். வெளியே கூறினால் கொலை செய்யப்படுவாள் என மிரட்டப்படுகிறாள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற பெயரில் தனது மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மீது மருமகள் அளித்த புகாரின் பெயரில் பரேலி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது.

பரேலியின் கேலா பாக் பகுதியைச் சேர்ந்தவர் பேபி என்ற சபீனா. அதே நகரின் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜமீல் உசைன் மகன் வசீம் உசைனுக்கும் சபீனாவுக்கும் கடந்த ஜூலை 5, 2009-ல் நிக்காஹ் (திருமணம்) நடைபெற்றது. மது அருந்தும் வழக்கம் உடைய வசீம், போதையில் சபீனாவை அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 7, 2011-ல் சபீனாவிடம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டார் வசீம்.

பிறகு சபீனாவை மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், அவரை நிக்காஹ் ஹலாலா செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இந்த நடைமுறையை பூர்த்தி செய்ய தனது தந்தை ஜமீல் உசைனை மணமுடிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு சபீனா மறுத்து விட்டார். எனினும், அவருக்கு போதை மருத்து ஊசி செலுத்தி டிசம்பர் 11, 2011-ல் நிக்காஹ் செய்துள்ளார் ஜமீல்.

இதையடுத்து, நிக்காஹ் ஹலாலாவை பூர்த்தி செய்வதற்காக ஜமீல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரேலி காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி சபீனா புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், ஜமீல் மீது போலீஸார் நேற்று முன்தினம் பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சபீனா ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “எனது இயலாத நிலை மற்றும் சமூக அவமரியாதையை கருத்தில்கொண்டு இந்த விவகாரம் குறித்து நான் அப்போது புகார் செய்யவில்லை. அதன் பிறகு மீண்டும் என்னை நிக்காஹ் செய்த வசீம், 2-வது முறையாக ஜனவரி 4, 2017-ல் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இந்த முறை அவரது மூத்த சகோதரரான ஜாவீத் உசைனுடன் நிக்காஹ் ஹலாலா செய்யுமாறு வற்புறுத்தினர். இவருக்கு இன்னும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். எனவே, வேறு வழியின்றி இப்போது எனது மாமனார் மீது புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.

வரதட்சணை புகார்

மேலும் சபீனா தனது மாமியார் ஷஹானா பேகம், மைத்துனர்களான ஜாவீத் உசைன், நசீம் உசைன், அமீர் உசைன் மற்றும் நாத்தனார் சாந்தினி ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். இரண்டாவது நிக்காஹ் ஹலாலாவுக்கு பயந்து கடந்த மே 13, 2017-ல் தனது தாய் வீட்டுக்குச் சென்ற சபீனா, அங்கேயே இருந்து வருகிறார்..

நிக்காஹ் ஹலாலா என்பது விவாகரத்து செய்த தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் முறையாகும். இதில், பெண் மட்டும் வேறு ஒருவரை மணம் புரிந்து வாழ்ந்த பின், அவரால் உடனடியாக விவாகரத்து செய்யப்பட்ட பிறகே மீண்டும் தனது கணவரை மணம் செய்ய முடியும்.

நிக்காஹ் ஹலாலா சம்பவங்கள் பலவும் உ.பி.யில் நடைபெற்றுள்ளன. ஆனால், சபீனாவுடன் நடந்தது போல் மாமனாரே மணமுடித்த சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. நிக்காஹ் ஹலாலா சம்பவத்தில் ஒருவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகி இருப்பதும் இதுவே முதன் முறை ஆகும்.

Source : https://www.news18.com/news/india/woman-forced-to-sleep-with-father-in-law-under-nikah-halala-faces-death-threats-for-speaking-out-1813621.html

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.