News
Loading...

சினிமா

பொருத்துக!
சினிமால்ஜித்தின் மைத்துனி ஷாமிலி, ‘வீர சிவாஜி’ படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், கதை கேட்டு கணிக்கத் தெரியாதாம். இதனால் தன் அக்கா ஷாலினியையே கதை கேட்கச் சொல்லிவிட்டாராம். தற்போது அக்கா ஷாலினி மொத்தம் மூன்று கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறாராம். ‘வீர சிவாஜி’ ரிலீஸுக்கு அப்புறம் அவற்றில் நடிக்க ஒப்பந்தம் போடுவாராம். மறந்தும் கூட மைத்துனி விஷயத்தில் தலையிடுவதில்லையாம் அஜித். அந்தக் கோட்டைத் தாண்டி வரமாட்டேன்!

 ரஜினியை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பி.வாசு, கன்னடத்தில் இயக்கிய ‘சிவலிங்கா’ சூப்பர் ஹிட் ஆக, அதே படத்தை ரஜினியை வைத்து இயக்க முயற்சித்து, கடைசியாக ராகவா லாரன்ஸை வைத்து இயக்கும் முடிவுக்கு வந்து விட்டார். வடிவேலு காமெடியனாக நடிக்க, ‘குத்துச்சண்டை’ ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். ‘சந்திரமுகி 2’ எனப் பெயர் வைக்கத் திட்டமிட்ட அவர், ரசிகர்கள் ரஜினியின் சந்திரமுகியை எதிர்பார்த்து வருவார்கள் என்பதால் படத்துக்கு ‘சிவலிங்கா’வையே தலைப்பாக்கி விட்டாராம். அதுலயும் ‘லிங்கா’ இருக்கே!

 எந்த நடிகைக்கும் அவரது உண்மையான வயதைக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். அப்படித்தான், நடிகை சோனம் கபூரின் அப்பா அனில் கபூர் கலந்து கொண்ட ஒரு விருது வழங்கும் விழாவில் உங்கள் வயது என்ன? என கரண் ஜோகரும், ஷாகித் கபூரும் கொஞ்சம் ஜாலியாகக் கேட்டுவிட்டார்களாம். உடனே கோபம் வந்து விறுவிறுவென நடையை கட்டி விட்டார். பொண்ணுங்ககிட்ட வயசைக் கேட்கலாமா?

 பாலிவுட்டில் இப்போ செல்லக்குட்டி அலியாதான். இயக்குநரிலிருந்து ஹீரோ வரை பாராட்டுகிறார்கள். அதனால் தானோ என்னவோ அம்மாவாக நடிக்க தயக்கம் காட்டி வந்த முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித், அலியாவுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கரண் ஜோகர் தயாரிக்க, அர்ஜூன் கபூர், வருண் தவான் நடிக்கும் இந்தப் படத்தில் அலியா பட்டுக்கு அழகான அம்மா மாதுரி தீட்சித் தான். அர்ஜூன் கபூருக்கும் அழகான மாமியார் கிடைச்சாச்சு!


 பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகிய இருவரும் ஹாலிவுட் படங்களில் நடிக்கப்போனது பல பாலிவுட் நாயகிகளைப் பொறாமைத் தீயில் தள்ளியிருக்கிறது. நீங்கள் ஹாலிவுட்டில் நடிக்கலையா? என  அனுஷ்கா ஷர்மாவைக் கேட்க, அந்த அளவு எனக்குத் திறமையில்லை என நக்கலாகவும், அங்கு நம்மை ஊறுகாய் மாதிரிதான் யூஸ் பண்ணுவாங்க, அப்புறம் எதுக்கு அங்கே போய் நடிச்சிக்கிட்டு என்று காட்டமாகவும் அவர்களை சாடியிருக்கிறாராம். பொறுமை, நோ பொறாமை!

 சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை லைவ் ஆக்‌ஷனில் இயக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தனது அக்கா கணவர் தனுஷை வைத்து ஒரு ரொமான்டிக் காமெடி படத்தை இயக்குகிறாராம். தனுஷ் ஓகே சொல்லி, கதை எழுதி முடித்து விட்டாலும் தனுஷ் கால்ஷீட்டுக்காக வெயிட்டிங். அனிமேஷன் படம் எடுத்திடாதீங்க!

 கவர்ச்சி நடிகையாக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஷகீலா, தன் வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதை எழுதியிருக்கிறார். அதைப் படமாக்கப் பலரும் முயற்சிக்க, கடைசியில் இந்தியில் படமாகிறது அவரின் வாழ்க்கை. இந்திரஜித் லங்கேஷ் இயக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். ஏற்கெனவே ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு விருது கிடைத்தது போல, தனக்கும் கிடைக்கும் எனவும் நம்பி இந்தத் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறாராம். தில் லேடி!


 அரை டஜன் படங்களில் நடித்து வரும் அக்‌ஷய் குமார் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘கத்தி’ பட ரீமேக்கில் நடிக்கிறார். முருகதாஸின் உதவியாளர் ஜெகன் சக்தி இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க பாகிஸ்தான் நடிகையும் வீஜேவுமான மாயா அலி என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதனால் பாலிவுட் நடிகைகள் சிலர் கடுப்பில் இருக்கிறார்களாம். நம்ம ஊர்ல ஹீரோயினே இல்லையா பாஸ்?

 தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இதுவரை மீசை வைத்து முழு படத்தில் நடித்ததே இல்லையாம். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அடர்ந்த மீசை மற்றும் தாடியோடுதான் முழு படத்திலும் நடிக்க வைக்கிறாராம். நிச்சயம் தெலுங்கு ரசிகர்கள் புது மகேஷ்பாபுவை பார்ப்பார்கள் என்கிறாராம். ‘இறைவி’ படத்தில் முழுக்க தாடி மற்றும் மீசையுடன் நடித்த எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் தாடி, மீசை இல்லாத ஹைடெக் வில்லனாக நடிக்கிறாராம். வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா!

 திருப்பதி பிரதர்ஸ் படம் தயாரிக்க ஆரம்பித்த நேரத்தில் அந்த நிறுவனத்துக்கு ‘பட்டாளம்’ என்ற பெயரில் குழந்தைகள் படத்தை இயக்கித் தந்தவர் ரோஹன் கிருஷ்ணா. தற்போது தனது பெயரை பிரபு ராதாகிருஷ்ணன் என்று மாற்றிக்கொண்டு ஒரு புதுப்படத்தை இயக்குகிறார். 24ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் ராஜாவே இந்தப் படத்தின் கதை, திரைக்கதையையும் எழுத, பிரபு இயக்குகிறார். தமிழிலும், மலையாளத்திலும் உருவாகும் இந்தப் படத்தில் நிவின் பாலி தான் ஹீரோ!


 ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார் த்ரிஷா. இதனால் தன்னைக் கேட்டுவரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். ‘நாயகி’, ‘மோகினி’ என பேய்ப் படங்களாக தொடர்ந்து நடித்துவரும் த்ரிஷாவை 60 அடி உயரம், 100 அடி உயரம் எனக் கட்டித் தொங்கவிட்டு காட்சிகள் எடுப்பதால் முன்பைவிட ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருப்பதாகப் புலம்புகிறாராம். கண்ணு வேர்க்குது!

 ஜெயம்’ ரவியின் கேரியர்  சரிவில் இருந்த நேரத்தில் அவருக்குக் கைகொடுத்து தூக்கி நிறுத்தியவர்களில் ஒருவர் தான் ‘பூலோகம்’ கல்யாண் கிருஷ்ணன். தன் அண்ணன் ‘ஜெயம்’ ராஜா, ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் ஆகியோருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பை வழங்கிய ஜெயம் ரவி, கல்யாண் கிருஷ்ணனுக்கும் ஒரு படம் கொடுத்திருக்கிறாராம். திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாகி விட்டாராம் கல்யாண்!

அக்கட தேசத்து அழகிகள்!தென்னிந்திய சினிமாக்களின் லேட்டஸ்ட் கவன ஈர்ப்பு அழகிகள் இவர்கள்..!

டோலிவுட் லாரிசா பொனேஸி

பிரேசில்-இந்திய அப்பா அம்மாவின் கூட்டுத் தயாரிப்பு! விளம்பர உலகில் மும்பையில் பிஸியாக இருந்தவர். விவெல் சோப், பிலிப்ஸ், ரேவிஸ், பாண்ட்ஸ் எனப் பல பொருட்களின் விளம்பரங்களில் உலகம் முழுக்கத் தகதகத்தார். 2013-ல் சயிஃப் அலிகானுடன் ‘கோ கோவா கான்’ படத்தில் அறிமுகமானார். சிரஞ்சீவி குடும்பத்து வாரிசுகளில் ஒருவரான சாய் தரம் தேஜுடன் இந்த ஆண்டு டோலிவுட்டில் அறிமுகமான ‘திக்கா’ செமையாய் எட்டுத்திக்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடியதால் பொண்ணுக்கு டோலிவுட்டில் டிமாண்ட்!  

சாண்டல்வுட் சுக்ருதா வகாலே


சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த பெங்களூரு அழகுப்புயல். ‘ஜட்டா’ என்ற படத்தில் அறிமுகமானவருக்கு காமெடிப்படம் ‘ஃப்ளாப்’ நல்ல பெயரை வாங்கித்தந்தது. நடனம், தற்காப்புக் கலைகள் எனப் பட்டையைக் கிளப்பும் சுக்ருதாவுக்கு புனீத் ராஜ்குமாரோடு ஜோடி போட வேண்டும் என்பதுதான் பெரிய கனவு. சீக்கிரமே நிறைவேறும் சுக்கு! 

மல்லுவுட் ரஸ்னா பவித்ரன்


ண்ணூர் பொண்ணு. ஓவியத் தாரகைக்கு பெயின்டிங் என்றால் ஜுஜுபி. இன்டீரியர் டிஸைனிங் பிசினஸ் செய்தவர் மாடலிங்கிற்கு வந்தது அழகிய விபத்து. தமிழில் விஜய் வசந்த்தோடு 2014-ல் ‘தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன்’ படம் தான் அறிமுகம். படம் சுமாராகப் போனாலும் மலையாளத்தில் ரிலீஸான ‘மௌனம்’ படம் ஓரளவு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்போது மலையாள இண்டஸ்ட்ரியில் பொண்ணு பிஸி. ஐ லவ் யூ ரஸ்னா!


“தில்லும் இருக்கு, திகிலும் இருக்கு!”
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆகிறார், மும்பைப் பொண்ணு ஷனயா. அவ்வளவு ஆர்வமாகப் பேசுகிறார்.

‘‘ நடிக்க வர்றவங்களுக்கு  முதல் படத்துலேயே முக்கியத்துவமுள்ள கேரக்டர் கிடைக்குமானு தெரியாது. ஆனா, ‘தில்லுக்கு துட்டு’ல எனக்குக் கிடைச்சிருக்கு. ஹீரோ சந்தானம், டைரக்டர் ராம்பாலா ரெண்டுபேருமே ஏற்கெனவே ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் கலக்கின காம்பினேஷன். கதை சொல்லும்போது, அதுமாதிரிதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அதைவிட ஆயிரம் மடங்கு எனர்ஜியான படம் எடுத்திருக்கிறார். வழக்கமான ஹீரோயினா இல்லாம நிறைய ஸ்பெஷல் இருக்கு.’’

‘‘ட்ரெய்லர்ல சந்தானம் மட்டும்தானே ஸ்கோர் பண்றார்?”

‘‘படத்துக்கு ஹீரோ அவர்தான். அவரை மாதிரி ஒருத்தர்தான் இந்தக் கதைக்கு 100 சதவிகிதம் செட் ஆகமுடியும். ஹாரர் படத்தைப் பயமா எடுக்கலாம். காமெடியா எடுக்கலாம். இந்தப் படத்துல ரெண்டுமே கலந்துகட்டி அடிச்சிருப்போம். ‘தில்லுக்கு துட்டு’ தலைப்புதான், படத்தோட கதை. ஆக்சுவலா, சந்தானம் என்னாலதான் ‘தில்’லா ஒரு முடிவு எடுப்பார். ஸோ, ‘தில்லுக்கு துட்டு’னு அவரை உசுப்பேத்திவிடுறதே நான்தான். என்னை லவ் பண்றதாலதான், பேயோட சண்டை போடுவார் சந்தானம்.’’ 

‘‘படத்துல உங்க கேரக்டர் என்ன?”

‘‘படத்துல ரொம்ப ஹை-கிளாஸ் பொண்ணா நடிச்சிருக்கேன். ஆனா, ‘பணக்காரப் பொண்ணு’னு கெத்து காட்டாம, அனைவரும் சமம்னு பழகுவேன். ஹாரர் சீன்ஸ்ல ரொம்ப ஆர்வமா நடிச்சிருக்கேன். ஆக்டிங், டான்ஸ், பெர்ஃபார்மென்ஸ் சீன்ஸ்னு முதல் படத்துலேயே இத்தனை விஷயங்கள் கிடைக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கலை. தவிர, இங்கே சந்தானம் சாருக்குனு தனி ஆடியன்ஸ் இருக்காங்க. இந்தப் படத்துக்குப் பிறகு, அவங்க என்னையும் ஃபாலோ பண்ணுவாங்கனு நம்புறேன். ஸோ, ஐ ஆம் வெரி ஹாப்பி.’’

‘‘ஷூட்டிங் ஸ்பாட் திகிலா, காமெடியா?”


‘‘திகிலான காட்சிகளைத்தான் எடுத்துக்கிட்டு இருப்போம். ஆனா, அவ்ளோ ஜாலியா இருக்கும். இந்தி நடிகர் சரூப் சுக்லா, என் அப்பாவா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி. படத்துல மட்டுமில்ல, நிஜத்துலகூட அப்பா மாதிரியே பார்த்துக்கிட்டார். படத்துல பெரிய பட்டாளமே இருக்கு. ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கமுத்து, கருணாஸ்னு பல பேர் இருக்காங்க. ஷூட்டிங்ல யாருமே என்னைப் புதுமுக நடிகையா ட்ரீட் பண்ணாம. அவங்க வீட்டுப்பொண்ணைப் பார்த்துக்கிற மாதிரி அவ்ளோ அன்பா இருந்தாங்க.  நடிகர்கள் அப்படினா, கேமராமேன் தீபக் சார், காஸ்ட்யூம் டிசைனர் எல்லோருமே என்னை அழகாக் காட்டுறதுக்கு அவ்ளோ மெனக்கெட்டாங்க. மும்பையில் இருந்து சென்னை வந்தாலும், எங்க வீட்டுல இருந்த மாதிரி அவ்ளோ சந்தோஷமா இருந்தேன்.’’

‘‘பேயைப் பார்த்துப் பயந்த அனுபவம் இருக்கா?”

‘‘பேய்னு ஆரம்பிச்சாலே பயம் வந்துடும். ரோட்டுல தனியா போகும்போதோ, வீட்டுல லைட்டை ஆஃப் பண்ணாலோ ஆட்டோமேட்டிக்கா பயந்துடுவேன். அவ்ளோ ஏன்? ஷூட்டிங்ல முதல்நாளே நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குள்ள கரன்ட் கட் ஆகிடுச்சு. பேய் படத்துல நடிக்கிறதனால இப்படி ஆகுதோ? இல்லை, பேயே என்னை ஃபாலோ பண்ணுதோனு ஏகப்பட்ட கன்ஃபியூஷன். ஆனா, மறுநாள் ஷூட்டிங் போனா அங்க நடக்கிற காமெடியில் எல்லாம் மறந்துடும்.’’

‘‘படத்துல பன்ச் எதுவும் பேசியிருக்கீங்களா?”

‘‘சந்தானம் ‘தில்லுக்கு துட்டுனுதான் நீ நிற்கப்போறியா?’னு பாட, ‘தில்லுக்குத்தான் துட்டு. நிற்கவரியா?’னு நான் பாடுவேன். படத்தில் நான் சொல்ற பன்ச், படத்தோட ஒன்லைன், என்னோட கேரக்டர்... எல்லாமே இந்த ஒருவரிப் பாடலில் அடங்கிடும்!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.