News
Loading...

பச்சமுத்து... பாரிவேந்தர்... 7 ரூபாய் to 15 ஆயிரம் கோடி!

பச்சமுத்து... பாரிவேந்தர்...

30 ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த கிராமமான சேலம் தாண்டவராய​புரத்தில் இருந்து வெறும் ஏழு ரூபாயுடன் சென்னைக்கு வந்தார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர். இப்போது அவர், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி. 130 நாடுகளில் தொழில் சாம்ராஜ்ஜியம் நடத்தும் பச்சமுத்து, வெறும் 72 கோடி ரூபாய் புகாரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் என்ற குக்கிராமம்தான், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் சொந்த ஊர். தயார் வள்ளியம்மை. தந்தை ராமசாமி. ஆத்தூர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பச்சமுத்து, திருச்சியில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் முதுகலையும் படித்தார். டுடோரியல் கல்லூரிகள் மற்றும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆசிரியராக பகுதிநேர வேலை செய்தார்.

திருப்புமுனை...

சில கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளிகளைத் தவிர, முறையாக ஆங்கிலம் கற்றுத்தர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி, 12 ஆண்டு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. அந்த நேரத்தில், தமிழகத்தில் கல்லூரிகள் நடத்தும் பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைத்தது, எம்.ஜி.ஆர் அரசு. அதில் ஜாக்பாட் அடித்தது பச்சமுத்து வுக்கு. 1984-ம் ஆண்டு பாலிடெக் னிக், 1985-ல் இன்ஜினீயரிங் கல்லூரி என திறந்தார். பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்தது. 1990-களின் தொடத்தில், தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவாக (Sri Ramasamy Memorial) எஸ்.ஆர்.எம் குழுமத்தை உருவாக் கினார்.

பச்சமுத்து... பாரிவேந்தர்...

பிறகு, ஆண்டுக்கு ஒரு கல்லூரி,  ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார். ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. சில ஆண்டுகளில், ஒரே ஆண்டில் மூன்று கல்லூரி களைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். பின்னர், பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகத் துறையில் நுழைந்த பச்சமுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினார். 

மதன் அத்தியாயம்...

இந்தக் காலக்கட்டத்தில், குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த மதன் என்பவருடன் பச்சமுத்து நெருக்கமாக இருந்தார். எஸ்.ஆர்.எம். குழுமக் கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாக இருந்தார். ஒரு கட்டத்தில், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஒட்டுமொத்த சீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்கு நிலைமை போனது. அதன் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு, வேந்தர் மூவிஸை மதன் தொடங்கினார். அதில், பெரும் நஷ்டம். சினிமா தயாரிப்புகளுக்கு செலவழித்த  பணம் எல்லாம், மாணவர்களிடம் சீட் வாங்கிக் தருவதாகச் சொல்லி வாங்கிய பணம். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் சீட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். கடந்த ஆறு மாதங்களாக பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

பச்சமுத்து... பாரிவேந்தர்...
பச்சமுத்து... பாரிவேந்தர்...

தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கி​யதை பச்சமுத்துவின் மகன்கள் ரவியும், சத்ய நாராயணனும் விரும்பவில்லை. அவர்கள் மதனை கண்டித்ததுடன், தொடர்பைத் துண்டித்துக்கொள்ளவும் வற்புறுத்தினர். இந்த நிலையில்தான், ‘கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மதன் தலைமறைவானார். அதில், ‘எல்லா பணமும் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டேன்’ என்றும் சொல்லி இருந்தார். இதையடுத்து, மாணவர்கள் சார்பில் பணத்தைக் கேட்டு புகார்கள் வந்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பச்சமுத்துவை விசாரிக்காமல், மதனை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்... இப்படி மெத்தனமாக இருந்தால், நாங்கள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவோம்” என்று போலீஸுக்கு கண்டனம் தெரிவித்தது. அதையடுத்து வேகமெடுத்த போலீஸ் பச்சமுத்துவைக் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளது.


பாரிவேந்தர்... பல புகார்கள்!

 எஸ்.ஆர்.எம்.கல்லூரி அருகே உள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு.

 ஐ.ஜே.கே கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திலகவதி கொடுத்த பாலியல் தொடர்பான புகார். 

 சென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு. 

 அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள 5 ஏக்கர் நிலத்தை போலி பட்டா மூலம் ரவி பச்சமுத்து ஆக்கிரமித்​துக் கொண்டதாக டெய்சி ராணி என்பவர் கொடுத்த புகார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.