News
Loading...

புரட்டாசி மாத ராசி பலன் - சிம்மம்

புரட்டாசி மாத ராசி பலன் - சிம்மம்

17.9.2016 முதல் 16.10.2016 வரை

மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை

பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம்!

கொள்கைப் பிடிப்போடு மட்டுமல்லாமல் கூடியிருப்பவர்களை தன்வசமாக்கிக் கொள்ளும் ஆற்றலைப் பெற்ற சிம்ம ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்திலும், தனாதிபதி புதன் உங்கள் ராசியிலும் சஞ்சரிக்க பரிவர்த்தனை யோகம் ஏற்படுகின்றது. யோகங்களில் மிகச் சிறந்த யோகம் பரிவத்தனை யோகமாகும். அந்த அடிப்படையில் இந்த மாதம் அற்புதமான பலன்களை அள்ளி வழங்கும் மாதமாகும். அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசிநாதனோடு குரு இணைந்து சஞ்சரிப்பதும் ஒரு யோகம் தான்.

சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாக அமையப் போகின்றது. செல்வநிலை உயரும்.  ஒரு தொழில் செய்வோர், இருதொழில் செய்யும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின்  அனுகூலம் கிடைக்கும். வாகனங்களை வாங்கும் அமைப்பு உண்டு.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் அடிக்கடி ஏற்படலாம். பழைய மருத்துவத்தை மாற்றிப் புதிய மருத்துவத்தைப் பார்ப்பதன் மூலம் உடல் நலன் சீராகும். தாய் வழி ஆதரவு குறையலாம். பூர்வீக சொத்துக் களில் பலமுறை பஞ்சாயத்துக்கள் வைத்தும் முடிவடையாத சூழ்நிலை ஏற்படலாம். ஜென்ம ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் நாக சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது. 

மாதத் தொடக்கத்தில் குடும்ப ஸ்தானத்தில் 3 கிரகங்கள் முற்றுகையிட்டு இருக்கின்றன. இதுபோன்ற காலங்களில் பெண் தெய்வ வழிபாட்டில் அக்கறை செலுத்துவது நல்லது. இந்த மாதம் நவராத்திரி விழா வருகின்றது. 9 நாட்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அம்பிகையை வழிபாடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு சுயதொழில் செய்யும் சூழ்நிலை அமையலாம்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

செப்டம்பர் 19–ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்திற்குச் செல்வது யோகம் தான். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர வர்க்கத்தினரால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண்களின் சுபச்சடங்குகள் இல்லத்தில் நடைபெறலாம்.   பணி நீக்கத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கலாம்.

உச்ச புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 4– ம் தேதி கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகின்றார். தனாதிபதி தன ஸ்தானத்தில் உச்சம்பெறும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உதிரி வருமானங்களும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பும், இருமடங்கு லாபமும் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் உறவுகள் புதுப்பிக்கப்பெறும். கல்யாண யோகம் கைகூடும். நீண்ட நாள் வழக்குகள் சாதகமாக முடியும். 

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 14–ம் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். 3, 10–க்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்களால் லாபம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நிலையத்தை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் நிறைவேறும். தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் அதிகரிக்கும் நேரமிது. இம்மாதம் ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் இருப்பதால் ராகு–கேது வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமை விரதமும் அனுமன் வழிபாடும் சந்தோஷத்தை வழங்கும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இம்மாதம் குருச்சந்திர யோகத்தோடு மாதம் பிறப்பதால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். குழந்தைகளுக்கான மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில் இருந்த தடை அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலங்கள் உண்டு. சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமிது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். பராசக்தி வழிபாடு பண வரவைப் பெருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள் : செப்டம்பர்: 19, 20, 24, 25, 30 அக்டோபர்: 1, 5, 6, 7

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.