News
Loading...

அன்னை(?) தெரசாவின் மறுபக்கம் : பாகம் -4

The Missionary Position: Mother Teresa in Theory and Practice

#அன்னை_தெரசா கூறியது;

"ஏழைகள் துன்பப்படுவது என்பது மிகவும் அழகானது. அதை #கிறிஸ்துவும் அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்கிறார். ஏழைகளின் துன்பம்தான் உலகத்துக்கு உதவுகிறது"
("There is something beautiful in seeing the poor accept their lot, to suffer it like Christ’s Passion. The world gains much from their suffering,” )
அவரது இந்தக் கொள்கை காரணமாக நோயாளிகள் pain killers (வலியை மறக்கச்செய்யும்) மருந்துகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அவர்கள் வலியால் துடிப்பதை விரும்பியவர் #தெரசா.

அவரது இல்லத்தில் கடுமையான வலியில் துடிதுடிக்கும் நோயாளிகளுக்குக் கூட வலிமரப்புக்கு மாத்திரைகள் தரப்படுவதில்லை- மாத்திரைகள் இல்லாததால் அல்ல, 

#மதர்_தெரசாவின் கொள்கையின் காரணமாக.
”#கிறிஸ்துவின் வலியில் பங்கு பெறுவதென்பதே ஒருவருக்கு தரப்படும் மிக அழகிய பரிசு ஆகும்” என்றார் மதர் தெரசா.

ஒருமுறை வலியில் கதறிக்கொண்டிருந்த நோயாளி ஒருவரிடம் மென்மையாக “நீ வலியில் துடிக்கிறாய் என்றால், #ஏசு உன்னை முத்தமிடுகிறார் என்று பொருள்” என்றார்.
அதைக்கேட்ட நோயாளி “அப்படியென்றால் உங்கள் ஏசுவை என்னை முத்தமிட வேண்டாமென்று சொல்லுங்கள்” என்று கோபத்தில் கத்தினார்.

ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

(நண்பர்களே! சுவாமி #விவேகானந்தர் கூறியதை படித்துப்பாருங்கள் "எவனுடைய இதயம் பிறரின் துன்பம் கண்டு ரத்தம் வடிக்கிறதோ அவனே #மகாத்மா")
உலகப்புகழ் பெற்ற மருத்துவர் - டாக்டர் ராபின் பாக்ஸ்.

அவர் உலகப்புகழ் பெற்ற மருத்துவ இதழான 'தி லான்ஸெட் 'பத்திரிக்கையில்1994.இல் தெரசாவின் 'மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி ' யில் நடக்கும் கொடுமைகள் பற்றி தான் கண்ட அனுபவங்களை ஒரு அறிக்கையாக வெளியிட்டார்.

The Missionary Position: Mother Teresa in Theory and Practice

இதோ டாக்டர் பாக்ஸின் 17.செப்டம்பர் 1994 தேதியிட்ட அறிக்கையிலிருந்து,

" மருத்துவர்கள் எப்போதாவது வந்து போனவாறு உள்ளனர். ஆனால் அங்கேயே இருப்பவர்கள் மிஷினரியின் ஊழியர்கள்தான்.
(இவர்களில் சிலரே மருத்துவ பயிற்சி உடையவர்கள்)
ஒரு சிறுவன் வெகு அதிக காய்ச்சலுடன் மிகமோசமான நிலையில் கொண்டு வரப்பட்டான்.

அவனுக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகள் டெட்ராசைக்ளினும் பராசெட்டமாலும்.
இறுதியில் ஒரு மருத்துவர் வந்து மலேரியாவாக இருக்கலாம் என்று க்ளோரோகியூனை அளிக்கிறார்.

குறைந்த பட்சம் இரத்த பரிசோதனையாவது செய்து குணப்படுத்த முடிந்த நோயா இல்லையா என்பதையாவது கண்டுபிடிக்கலாமில்லையா.
ஆனால் நோய் பரிசோதனைகள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

சகோதரிகளுக்காவது எளிமையான மருத்துவ பயிற்சிகள் அளிக்கலாமில்லையா. அதற்கும் அனுமதியில்லை.

அன்னையினை பொறுத்தவரையில் இவை அவரது நம்பிக்கையின் விதிகளுக்கு விரோதமானது.

மருத்துவ திட்டமிட்ட அணுகுமுறையை காட்டிலும் இறைநம்பிக்கையே அவரது பற்றுக்கோல்.

இல்லாவிடில் பொருள்முதல்வாதப் போக்கிற்கு அது வழிவகுத்துவிட கூடும்....

இங்கு ஊழியம் புரியும் அருட் சகோதரிகளின் ஆன்மிக குணமாக்கும் திறனைப்பற்றி எனக்கு தெரியவில்லை.

ஆனால் எளிமையான ஆனால் ஜெஸிக்கள் கூட இல்லை.

சரியான நோயறிதல் முறைகள் இல்லை.
அன்னையின் நிறுவன வழிமுறைகள் முறையான ஹாஸ்பைஸ் வழிமுறைகள் அல்ல.
எனக்கு நோய் வந்தால் நான் எதை விரும்புவேன் என்பதில் குழப்பமில்லை. '

பல மிஷினரி ஆஃப் சாரிட்டி ஊழியர்கள் இதே குறையினை கூறுகின்றனர்.
வரும் நன்கொடைகள் வங்கிகளில் முடக்கப்படுகின்றனவே தவிர நோயாளிகளின் உடல்உபாதையை குறைக்க பயன்படுத்தப்படுவதில்லை.
ஏன் ? தெரசா துன்பப்படுவதை இறை வாய்ப்பாக கருதுகிறார்.

தெரசாவிற்கு அவர் நோயாளிகளிடன் காட்டும் கருணை என்பது அவர்கள் நோயை துடைப்பதல்ல.

மாறாக ஒரு விபரீத மத நம்பிக்கை. இந்த விபரீத நம்பிக்கையின் விளைவுகள் பயங்கரமானவை.
நான் மேலே குறிப்பிட்ட அச்சிறுவன் விரைவில் இறந்துவிடுவான்.

அவனை பார்த்த அமெரிக்க டாக்டர் என்னிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்

, 'உண்மையில் அந்த சிறுவனை குணப்படுத்தியிருக்கலாம்.
அது எளிய சிறுநீரக நோயாகத்தான் இருந்தது.
சிறிய அறுவை சிகிச்சை போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால் மிஷினரிகள் அறுவை சிகிச்சைக்கு வெளியே எடுத்துசெல்ல அனுமதிக்கவில்லை.
' 'ஏன் ஒரு காரை பிடித்து கொண்டு செல்ல வேண்டியதுதானே ' என்றேன்.

டாக்டர் கூறினார், 'அதை அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனெனில் ஒருவனுக்கு செய்வதை அவர்கள் அனைவருக்கும் செய்யவேண்டும் என்பார்கள் '
ஆனால் அச்சிறுவனின் வயது பதினைந்து!"

( இவ்வாறு தி லான்ஸெட் 'பத்திரிக்கையில் டாக்டர் பாக்ஸ் தனது அறிக்கையில் தெரேசாவின் இல்லத்தில் நடக்கும் கொடுமைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினர்)

புகழ்பெற்ற அமெரிக்க புலனாய்வு எழுத்தாளர் christopher hitchens எழுதிய The Missionary Position: Mother Teresa in Theory and Practice என்ற நூலில் இருந்து..(இவர் அன்னை தெரேசாவின் கொடூரமான மறுபக்கத்தை உலகத்திற்கு
வெளிப்படுத்தியவர். 

அன்னை தெரேசாவின் முகத்திரையைக் கிழிக்கும் 'நரகத்தின் தேவதை' ( HELLS ANGEL) என்ற ஆவணப்படத்தை எடுத்து உலகப்புகழ் பெற்ற ஊடகமான CHENNEL 4 இல் வெளியிட்டவர். 

வாடிகன் சென்று போப்பாண்டவரிடம் பல ஆதாரங்களை அளித்து தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கக் கூடாது என்று வாதிட்டவர்)
(அவரது புகைப்படம் மற்றும் அவரது புத்தகத்தின் அட்டைப்படத்தின் புகைப்படமும் இணைக்கப் பட்டுள்ளது)
(தொடரும்)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.