News
Loading...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சிறப்பு பார்வை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சிறப்பு பார்வை

மறுபடியும் பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கிறார்கள் 
பெட்ரோலுக்கு- 3.38ரூபாய்
டீசலுக்கு- 2.67ரூபாய்

114(7000ரூ) டாலருக்கு கச்சா எண்ணெய் விற்கும்போது 70ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது.

இன்று 55(3500ரூ) டாலருக்கு
கச்சா எண்ணெய் விற்கப்படும் போது
பெட்ரோல் 63ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எல்லா நாடுகளும் இந்த விலைகுறைவின் பலன்களை மக்களுக்கு கொடுக்கிறார்கள்

இந்தியாவில் மட்டும் அயோக்கியர்கள் அரைப்பட்டினியில் வாழும் மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

பொருளாதாரத்தை வளர்க்க வக்கில்லை, 70ஆண்டுகளாக குடிக்க நல்ல தண்ணியைக்கூட தரத் துப்பில்லை. கல்வியில்லை.
வேலைவாய்ப்பில்லை.வீடில்லை.
உணவில்லை,புதிய வேலை வாய்ப்பில்லை, விவசாய வளர்ச்சி இல்லை. மருத்துவ வசதியில்லை
இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி
மக்கள் சிறுதொழில் ,விவசாயத்தை நட்டத்தோடு இழுத்து பறித்து நடத்தி
வந்தால் இந்த பயங்கரவாத இந்தியா
வரிவிதித்தே கொல்கிறது.

எங்கும்வரி,எதிலும்வரி,நின்றால்வரி,
உட்கார்ந்தால்வரி, சிறுநீருக்குவரி, கக்கூசுக்குவரி, எரிபொருளுக்கு 60%வரி. கலால்வரி,சுங்கவரி, வருமான வரி, விற்பனைவரி,வாட்வரி,சேவை வரி,
பசுமைவரி, ரோட்டுவரி, மதிப்புகூட்டுவரி, காப்புரிமைக்குவரி,
என வரிபிடுங்கிகள்
நாட்டை ஆள்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சிறப்பு பார்வை


முதலாளிகளிடம் வரிவசூலிக்க முடியாத ஆளும் அல்லக்கை 
120கோடி மக்களுக்கு நலதிட்டமாக தருவது 4லட்சம் கோடியென்றால்
20கார்ப்பரேட் முதலாளிநாய்களுக்கு மட்டும் 10லட்சம் கோடி வரிச்சலுகை
தந்திருக்கிறார்கள்.

முதலாளிகளின் வராக்கடன் 300000 கோடி, அதைக்கூட வாங்கத்திராணி இல்லை.
இந்தவரிவிதிப்பு மூலம் கிடைத்த பணத்தில் கட்டப்பட்ட பள்ளி எத்தனை?
மருத்துவமனைகள் எத்தனை?
உருவாக்கப்பட்ட விவசாயத் தொழில் நுட்பம் எத்தனை? உருவாக்கப் பட்ட தொழிற்சாலை எத்தனை?

இவ்வளவு விலையை உயர்த்தி
இவ்வளவு வரியை விதித்ததும் போதாதென்று நிலங்களை,நீரை, ரயிலை, காப்பீட்டுத்துறையை தனியாருக்கு கொடுத்து விட்டார்கள்.
மிச்சம்மீதி இருக்கும் பொதுத்துறைகளின் பங்குகளையும் விற்கவும் நட்டத்தில் போட்டு நாசமாக்கும் வேலையும் நடந்து வருகிறது.
இவ்வளவு கொடுமை,அக்கிரமங்கள், அநியாயத்தை கண்டபிறகும் போராடாமல் அல்லாதான் பெரிசு, ராமன்தான் பெரிசு, நாங்க ஆண்ட பரம்பரை என்று சொல்லும் முட்டாக்கழுதையை உப்புக்கண்டம் போட்டலென்ன?

உழைத்தால்தான் கஞ்சி
90%பேருக்கு இதுதான் நிலைமை.
இவர்கள் விவசாயிகளாய்,தொழிலாளி வர்க்கமாக ஒன்று சேராமல் 
ஜாதி,மதமாக பிரிந்து கிடந்தால் 
மோடி,ஜெயா,போன்ற முட்டாள்களெல்லாம் ஆட்சிக்கு வரத்தான் செய்வார்கள்.

முதலாளிகளுக்கு பொற்கால ஆட்சியை தரத்தான் செய்வார்கள்
இந்திய சந்தையின் முதுகெலும்பை உடைக்க வேண்டுமென்றால் எண்ணெயில் அடிக்கும் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும்.
பெட்ரோல்டீசல் விலை நிர்ணயத்தை 
அரசு கைகழுவி விட்டு சர்வதேச நிலவரத்துக்கேற்ப கம்பெனிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாமென முடிவு செய்து இப்போது அப்படிதான் நடக்கிறது
ஏண்டா! பெட்ரோல் விலை உயருதுன்னு கேட்டா சர்வதேச அளவில் கூடிது அதனால கூடுது என்கிறான்
இப்ப ஏண்டா குறைய மாட்டேங்குது என்றால் ஜெட்லி வாயை மூடிக்கிறான்

சர்வதேசப்படிதான் விலை என்றால்
அப்பறம் என்னாத்துக்கு பெட்ரோலுக்கு 60%வரி போடுற
சர்வதேசப்படி விலையை விட வேண்டியதுதானே?
25ரூ.விற்க வேண்டிய டீசலை 45க்கும்
35க்கு விற்க வேண்டிய பெட்ரோலை
63க்கும் விற்கும் அயோக்கியத்தனத்தை என்னவென்பது.?

விலைக்குறைக்கும் போது பெட்ரோலுக்கு 
1.50ம்,டீசலுக்கு 50பைசாவும் குறைப்பாம். இதுக்கு பேரு விலைக்குறைப்பாம்.
விலை ஏற்றும் போது2.00,2,50ஏற்றுகிறார்கள்
யாருக்கு வேண்டும் உன் பிச்சை சலுகை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சிறப்பு பார்வை

பொருளாதாரத்தை வளர்க்க முடியாமல் ஓயின்ஷாப்ப வச்சுதான் வருமானமே என்கிற மானங்கெட்ட அரசு
வீட்டை உழைத்துக் காப்பாற்ற துப்புக் கெட்ட ஊதாரிக் குடும்பத்தலைவன் 
வீட்டில் இருப்பதை பிடுங்கிக் கொண்டுபோய் அடகுவைத்து தின்னுவதைப் போல புரோக்கர் மோடி அரசு.

மக்களோ கூறுகெட்டுப்போய் ஜாதிமதமாக கூறுகூறாக பிரிந்து கிடக்கிறார்கள்.
அதுவரை மோடி,ஜெயா நிம்மதியாக இருக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.