News
Loading...

ஹிலரி... அம்மா... ஒற்றுமை!

ஹிலரி... அம்மா... ஒற்றுமை!

‘‘அம்மாவைச் சந்தித்துவிட்டுப் போன ஹிலரிதான் அமெரிக்க அதிபராகிறார்’’ என்று ஆர்ப்பரித்தன ரத்தத்தின் ரத்தங்கள். நீர்ச்சத்துக் குறைப்பாட்டால் ஹிலரி மருத்துவமனைக்குப் போக, இங்கே அம்மாவுக்கும் அதே பிரச்னை. அங்கே அதிபர் தேர்தல்... இங்கே உள்ளாட்சித் தேர்தல். அமெரிக்காவிலும் தமிழகத்திலும் சேம் சீக்வன்ஸ்.

அமெரிக்க அதிபர் யார் என்பதை முடியு செய்ய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் புதிய தலைவலியாகியுள்ளது அதிபர் வேட்பாளர் ஹிலரியின் உடல்நிலை. சென்ற வாரம் 9/11 தாக்குதல் நினைவுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த ஹிலரி, மேடையில் இருந்து பாதியில் வெளியேறினார். அவரை ரகசியமாக சில பாதுகாவலர்கள் கைதாங்களாக வாகனத்தில் ஏற்றிவிட்டனர். இது அங்கு இருந்த கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ காட்சிகள்தான் ஜனநாயக கட்சிக்கு தலைவலியாகியுள்ளது.

ஹிலரி கடந்த சில கூட்டங்களில் பேசியபோது லேசான இருமல் இருந்தது. அவர் அதனை சமாளித்துதான் பிரசாரம் செய்கிறார் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணமே இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அவர் 10 நாட்களுக்கு எந்தப் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார். ஆனால், ஹிலரி தனது பிரசாரங்களை தொடர்ந்து வந்தார். அது அவரை நீர்ச்சத்துக் குறைபாட்டுக்குத் தள்ளிவிட்டது. அதனால் தான் பிரசாரத்தின் நடுவே சோர்வடைந்து திரும்பினார் என்று அவரது தனிப்பட்ட மருத்துவரும், மவுன்ட் கிஸ்கோ மருத்துவக் குழுவின் தலைவருமான டாக்டர் லிசா பார்டேக்.

இந்த நிலையில், 14-ம் தேதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கடந்த ஜனவரி-மாதம் 2016-ல் மருத்துவமனயில் சிகிச்சை பெற்ற ஹிலரிக்கு சைனஸ் பிரச்னை இருப்பது தெரியவந்தது. அதற்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் முதல்வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹிலரிக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தினோம். ஆனால், 9/11 தாக்குதல் நினைவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹிலரி  டி-ஹைட்ரேட் காரணமாகக் கூட்டத்தில் இருந்து வீடு திரும்பினார்.

தற்போது அவரது உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. அவர் நலமாகதான் இருக்கிறார். அவருக்கு ஓய்வும், ஆன்டிபயாடிக் மருந்துகளும்தான் தேவை, என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் மட்டும் ஓய்வெடுத்த ஹிலரி மீண்டும் பிரசாரத்தில் களமிறங்கினார். வட கரோலினா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஹிலரி ஆரோக்கியத்துடன் காணப்பட்டார். 

இருந்தாலும் ஹிலரி ஓய்வில்லாமல் பிரசாரம் செய்வது உடலுக்கு நல்லதல்ல என மருத்துவமனை வலுயுறுத்துகிறது. இன்னொரு பக்கம் 100 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின்றன. முதல் பெண் அதிபரைத்தான் அமெரிக்கா விரும்புகிறது என்ற அலை இருக்கும் அமெரிக்காவில், ஹிலரியின் உடல் நிலை ஜனநாயகக் கட்சிக்கு லேசான சறுக்கலை தரலாம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது பிரசாரத்துக்கு திரும்பி இருப்பது ஜனநாயக கட்சிக்கு லேசான ஆறுதலை தந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.