News
Loading...

விசித்திரமான தீம் பார்க்குகள்

தீம் பார்க்குகள்னா தண்ணீரில் வழுக்கிக்கிட்டே போய் தரையில் விழுறதும், ரோலர் கோஸ்டரில் உட்கார்ந்து குய்யோ முய்யோனு கத்திக்கிட்டே சுத்திவர்றது மட்டும்தான்னு நினைச்சீங்களா? சில விசித்திரமான தீம் பார்க்குகளும் இருக்கு மகாஜனங்களே...

கிட்ஸானியா

கிட்ஸானியா

கிட்ஸானியா:

உலகின் 16 இடங்களில் செயல்பட்டுவரும் ‘கிட்ஸானியா’ தீம் பார்க் பிரத்யேகமாகக் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. சிறுவர்களுக்கு தாம் எப்போது பெரியவர்களாவோம் என்கிற ஏக்கம் இருக்கும். அந்த ஐடியாவை அப்படியே எக்ஸிகியூட் செய்து பெரியவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் பொடுசுகளை வைத்தே செய்யச்சொல்லி அதற்கு சம்பளம் (செல்லாத காசுதான் பாஸ்) கொடுப்பது போலவும் இந்த தீம் பார்க் செயல்படுகிறுது. உதாரணமாகத் தீயணைப்பு வேலைகள், ஆம்புலன்ஸ், ஆபீஸ், மருத்துவமனை, கோர்ட் என எல்லாவற்றையும் மினியேச்சராக உருவாக்கி சிறுவர்களுக்கான உலகமாய் காட்சியளிக்கிறது கிட்ஸானியா. சின்ன மேட்டர்; பெத்த லாபம்!

க்ரக்கோசாரஸ் காவ்

க்ரக்கோசாரஸ் காவ்

க்ரக்கோசாரஸ் காவ்:

ஆஸ்திரேலியாவின் டார்வின் சிட்டியில் அமைந்திருக்கும் இந்த `க்ரக்கோசாரஸ் காவ் பார்க்' கொஞ்சம் விசித்திரமானது. உள்ளே நுழைந்ததும் ஸ்விம்மிங் சூட் வழங்கப்படுவதைப் பார்த்தெல்லாம் மிரண்டுவிடக் கூடது. அப்புறமும் ஆச்சர்யங்கள் முதலை வடிவில் காத்திருக்கின்றன. உங்களுக்கென பிரத்யேகமாக ஒரு கண்ணாடிக் கூண்டு வழங்கப்பட்டு, அதற்குள் இருந்தபடி முதலைகளுக்குப் பக்கத்தில் உலவித் திரியலாம். ராட்சதக் குளத்தில் வளர்க்கப்படும் முதலைகளுக்கு மிக அருகில், தண்ணீருக்குள்ளேயே போய் டாட்டா காட்டிவிட்டு வரலாம். தீம் பார்க், முதலை வளர்ப்புப் பண்ணை என டபுள்டக்கராய் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாக்காரர்கள். முதலை மூளைக்காரய்ங்க!

டிக்கர்லேண்ட்

டிக்கர்லேண்ட்

டிக்கர்லேண்ட்:

இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ‘டிக்கர்லேண்ட் தீம் பார்க்’கில் எல்லாமே வித்தியாசம்தான். உள்ளே நுழையும்போதே ஏதோ மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைபெறும் பகுதியோ எனச் சந்தேகம் வரும் அளவுக்கு மஞ்சள் கலரில் இருக்கும் இரும்புத் தண்டவாளங்களும், வாகனங்களும் வரவேற்கின்றன. பொக்லைன், ஜே.சி.பி போன்ற வாகனத்தில் பொருத்தப்பட்ட சிறிய விளையாட்டுகளும், பெரிய க்ரேனில் அமர்ந்தபடி தனியாகப் பயணிக்கும் ரோலர் கோஸ்டரும் இருக்கின்றன. பொக்லைனில் குழிதோண்டி விளையாடும் விளையாட்டு இங்கு ரொம்பவே ஸ்பெஷல். கீழே உட்கார்ந்து கையால் மண்ணைத் தோண்டுற பிள்ளைகளை பொக்லைனில் தோண்ட வெச்சு அழகு பார்க்கிறார்கள் பிரிட்டிஷ் பெற்றோர்கள். உங்க ஆசையைக் குழிதோண்டிப் புதைங்க!

லவ் லேண்ட், ஜேஜு தீவு

லவ் லேண்ட், ஜேஜு தீவு:

தென்கொரியாவில் இருக்கும் இந்த `லவ் லேண்ட் தீம் பார்க்'கின் தீம் பற்றிக் கேட்டாலே ஆச்சர்யப்படுவீர்கள். பாலியல் தொடர்பான விஷயங்களை ஊக்கப்படுத்துவதற்காகச் செயல்படும் இந்த பார்க்கில், பரங்கிமலை ஜோதி தியேட்டர் வகையறா படங்களும் ஒளிபரப்பப் படுகின்றனவாம். கொரியப் போருக்குப் பின் இந்த இடம் ஹனிமூன் தலமாகப் பயன்பட்டுவந்தது. அதை அப்படியே காசாக்கிவிடலாம் என யோசித்தவர்கள் பூங்கா முழுவதும் கண்ணை மூடிக்கொள்ளும் அளவுக்கு ‘அந்த மாதிரி’ சிற்பங்களைத் தத்ரூபமாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனையும் ‘ச்சீ’ ரகம். இந்த செக்‌ஷனுக்குள்  18 வயதானவர்களுக்கு மட்டுமே அனுமதி. சிறுவர்கள் குச்சிமிட்டாயைச் சப்பிக்கொண்டே விளையாட்டுப் பகுதியில் இருக்கும் சறுக்குமரத்தில் வழுக்கி விளையாடலாம். டிக்கிலோனா விளையாட்டு இருக்குதா பாஸ்..?

சோவியத் பங்கர்

சோவியத் பங்கர்:

ஐரோப்பாவில் இருக்கும் ‘சோவியத் பங்கர்’ எனும் தீம் பார்க்கில் 1980-ல் குடிமக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கிட்டத்தட்ட அப்படியே வாழ்ந்து பார்க்கலாம். மூச்சுவிடக்கூட முடியாத இடத்தில் ஏர் மாஸ்க் அணிந்தபடி, அதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு ராணுவப் பயிற்சிக்குப் பழகுவார்கள். ராணுவப் பயிற்சி மையத்தில் எப்படிப்பட்டச் சூழல் நிலவுமோ அதை அப்படியே அச்சுப்பிசகாமல் இங்கே அனுபவிக்கலாம். இந்த பார்க்கில் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரும் உண்மையிலேயே சோவியத் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். திடீர் திடீரென சத்தங்களும் எழுப்பி மக்களைப் பயமுறுத்துவதால் இதயம் பலவீனமானவர்களுக்கு இங்கே அனுமதி இல்லையாம். சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்கிறதுனா இதுதானா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.