News
Loading...

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

பிரிட்டிஷ்காரர்களின் வாணிபத் தளமாக விளங்கிய கடற்கரையை ஒட்டிய ஊர்தான் கடலூர். நகரமன்ற தலைவர் குமரன், அக்மார்க் அ.தி.மு.க குடும்பம். எம்.ஜி.ஆர். காலத்திலேயே இவரது அப்பா ரகுபதிதான் கடலூர் நகர செயலாளர். ஆனால், குமரன் அதில் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே இருந்தார். அப்பாவின் மறைவுக்குப் பிறகுதான் அரசியல் ஆசை மெல்ல துளிர்விட்டது.

நகர மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடும்போது, “தமிழ் நாட்டிலேயே சிறந்த நகராட்சியாக கடலூர் நகராட்சியை மாற்றுவேன்” என்றார் குமரன். ஆனால், ‘அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை’ என்கிறார்கள் மக்கள்.

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் எஸ்.பி.நடராஜன், ‘‘போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரயில்வே சுரங்கப்பாதை கொண்டுவரப்பட்டது. மழை இல்லாதபோதும் அந்த சுரங்கப்பாதையில் நீர் சுரந்து நிரம்பிவிடுகிறது. இதனால், தினமும் சாக்கடையில் நீந்தித்தான் செல்ல வேண்டி இருக்கிறது. தெருக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் லாரி மூலமாகத் தண்ணீர் கொடுப்பார்கள்.  இப்போது லாரியும் வருவதில்லை.

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

கடலூருக்கு நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. நகராட்சி வரி விதிப்பை சரிசமமாக விதிக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மக்கள் கலையரங்கம் இன்று நகராட்சி லாரிகள் நிறுத்தும் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. நகராட்சி மைதானம் 70 சதவிகிதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், மீதியை நகராட்சி பயன்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால், எப்போதும் அந்த மைதானத்தில் பொருட்காட்சி, சர்க்கஸ் போன்றவற்றை நடத்தி நகராட்சி காசு பார்க்கிறதே தவிர, அதில் விளக்கு எரிகிறதா, இல்லையா என்று பார்ப்பது இல்லை.

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

நகராட்சியில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளத்தில் மிதக்கிறது கடலூர். நகராட்சியில் உள்ள குடிநீர் குழாய்கள் 50 வருடத்துக்கு முன் போடப்பட்டவை. பழைய குழாய் என்பதால் அடிக்கடி ஆங்காங்கே உடைப்பு எடுத்து குடிநீரோடு கழிவுநீர் கலந்துவிடுவதால் இதனை குடித்துவிட்டு மக்கள் நோய்களுக்கு ஆளாகிறார்கள். கால்வாய்கள் திட்டமிட்டு கட்டப் படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. முதுநகர் மற்றும் குப்பங்குளத்தில் உள்ள குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்ற, புகை மண்டலமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

இதுவரைக்கும் நகராட்சி தெருவிளக்கு டெண்டர் 33 லட்சமாகத்தான் இருந்தது. அந்த டெண்டரை மாற்றி, 98 லட்சமாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். எல்.ஈ.டி பல்புகளைப் பயன்படுத்தினால் செலவுகளும் குறையும், மின்சாரமும் சிக்கனப்படுத்தப்படும். ஆனால், இவர்கள் சோடியம் விளக்கைப் பயன்படுத்துகிறார்கள். மழை வெள்ளத்தின்போது இவருடைய வீட்டையே இவரால் காப்பாத்திக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் மக்களை எப்படிக் காப்பாற்றுவார்?” எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நாறும் கடலூர் நகராட்சி... கதறும் மக்கள் மனசாட்சி!

நகரமன்ற தலைவர் குமரன்,“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்தால் நகர் விரிவடைகிறது. அதனால், அதிக அளவு விளக்குகள் தேவைப்படுகிறது. அத்தோடு விலையேற்றத்தையும் கருத்தில் கொண்டுதான் தெருவிளக்குக்காக இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் வாங்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்துவிட்டால் குடிநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். மற்றப்படி நகர சீர்கேடு, தெருவிளக்கு எரியவில்லை என்பது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள்” என்றார்.

‘‘மக்கள் சந்தோஷமா இருக்கிறார்களோ, இல்லையோ. நகரமன்ற தலைவருக்கு சந்தோஷமோ சந்தோஷம். தவளத் நகரில் வீடு வாங்கியாச்சு. கடனில் இருந்த ரைஸ் மில்லை மீட்டாச்சு. தேர்தலில் பட்ட கடனையெல்லாம் அடைச்சாச்சு’’ என முணுமுணுக்கிறார்கள் கடலூர் நகரவாசிகள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.