
பெரு நகரங்களில் சொந்த வீடு கட்டுவது என்பது ஒவ்வொரு கட்டமாக கவனத்துடன் காலடி எடுத்து வைத்து செல்ல வேண்டிய பயணம் என்று சொன்னால் அது மிகையல்ல. சொந்த வீட்டை கட்டியவர்கள் பெற்ற அனுபவத்தை நாம் கேட்டோமானால் வீடு கட்டுவது என்பது சாகச பயணம் செய்வது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒருசிலர் அந்த சிரமங்கள் நமக்கெதுக்கு..? சரியான கட்டுனர்களிடம் அல்லது மேஸ்திரிகளிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு மேற்பார்வை செய்வதுதான் நமக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் கட்டுமான செலவுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி இருக்கின்றன. சொந்தவீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு பயன்தரும் விதத்தில், கட்டுமான வல்லுனர்கள் இப்போதைய விலை நிலவரங்கள் என்ன..? என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் 1000 சதுர அடியில் தனி வீடு கட்டுவதற்கு ஆகும் தோராயமான செலவுகள் பற்றியும், ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றியும் பல வருட அனுபவம் பெற்றவர்கள் தரும் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
செலவுகள் விபரம்
1) அஸ்திவாரம் அமைக்க ஆகும் செலவு ரூ.1,02,000
(குழி எடுக்க, மண் நிரப்ப, கான்கிரீட், செங்கல், சிமெண்டு, ஆட்கூலி..)
2) ஈரப்பத பாதிப்புகளை தடுக்கும் டி.பி.சி. கோட்டிங் ரூ.11,000
(சிமெண்டு, தார்பூச்சு, ஜல்லி மணல், ஆட்கூலி..)
3) அஸ்திவார மேல்மட்ட சுவர் அமைக்க செலவு ரூ.1,19,000
(செங்கல், சலித்த மணல், சிமெண்டு, ஆட்கூலி..)
4) கான்கிரீட் கூரையில் ஓடுகள் பதிக்க செலவு ரூ.46,000
(சிமெண்டு, தார்பூச்சு, மணல், மண், ஓடுகள், ஆட்கூலி..)
5) மழை நீர் வடிகால் குழாய்கள் (சி.ஐ பைப்) செலவு ரூ.10,000
(குழாய்கள், அதன் இணைப்புகள், ஆட்கூலி..)
6) இரும்பு கம்பிகளுக்கான செலவு ரூ.1,08,000
(ஒட்டு மொத்த கம்பிகள், கட்டு கம்பிகள், ஆட்கூலி..)
7) கான்கிரீட் அமைக்கும் செலவு ரூ.1,19,000
(சிமெண்டு, மணல், ஜல்லி, முட்டு அடிப்பது, ஆட்கூலி..)
8) சுவர் மற்றும் மேற்கூரை ‘பிளாஸ்டரிங்’ மற்றும்
‘பாயிண்டிங் செலவு ரூ.61,500
(சிமெண்டு, சலித்த மணல், ஆட்கூலி..)
9) தரை தளத்திற்கான சிமெண்டு பூச செலவு ரூ.48,000
(சிமெண்டு, மணல், ஜல்லி, ஆட்கூலி..)
10) ‘பாத்ரூம்’ மற்றும் ‘கிச்சன்’ அறைகளுக்கான ‘டைல்ஸ்’ பதிக்க ரூ.40,000
(டைல்ஸ் மற்றும் அதன் உப பொருட்கள்..)
11) கதவு, ஜன்னல்களுக்கான மரம், கப்போர்டுகள் அமைக்கும் செலவுரூ.2,63,000
(கதவு, ஜன்னல்களுக்கான தேக்குமரம், பிளைவுட் பலகைகள், ஆட்கூலி..)
12) ‘இரும்பு கிரில்’ அமைப்பதற்கான செலவு ரூ.18,000
(‘இரும்பு கிரில்’ டிசைன் மற்றும் எடையை பொறுத்து விலை..)
13) கதவு மற்றும் ஜன்னல்களுக்கான வர்ணம் அடிக்கும் செலவு ரூ.12,500
(‘பெயிண்டு மற்றும் ஆட்கூலி..)
14) மூன்று முறைகள் ‘ஒயிட் வாஷ்’ செய்யும் செலவு ரூ.2,500
(சுண்ணாம்பு மற்றும் ஆட்கூலி..)
15) உட்புறம் மற்றும் வெளிப்புறம் ‘பெயிண்டு’ அடிக்கும் செலவு ரூ.32,000
(‘ஆயில் டிஸ்டெம்பர் மற்றும் சிமெண்டு பெயிண்டு மற்றும் ஆட்கூலி..)
16) மின்சாதனங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் ரூ.2,48,000
(மின்சாதனங்கள், பாத்ரூம் பிட்டிங்ஸ், குழாய்கள், ஆட்கூலி...)
ஆக மொத்தம் 1000 சதுர அடி தனி வீடு அமைக்க தோராயமாக ஆகும் செலவு ரூ.12,73,500
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.