News
Loading...

மூன்று கனவுகள்... மூன்று உயிர்கள்... ஒரு தண்ணீர் லாரி!

மூன்று கனவுகள்... மூன்று உயிர்கள்... ஒரு தண்ணீர் லாரி!

ஆஷா ஸ்ருதி, காயத்ரி, சித்ரா ஆகியோர் யார்? இவர்களின் கனவு என்ன?

மூன்று கனவுகள்... மூன்று உயிர்கள்... ஒரு தண்ணீர் லாரி!

ஆஷா ஸ்ருதி: ‘‘டாடி.. கவலைப்படாதீர்கள். சி.ஏ படித்துவிட்டால் எனக்கு நல்ல வேலையும் சம்பளமும் கிடைக்கும். அதன்மூலம் உங்களுக்கு காரும் எப்போதும் நீங்கள் அண்ணாந்து பார்ப்பீர்களே அந்த பிளாட்டும் வாங்கி தருகிறேன்.’’ ஆஷா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆஷா ஸ்ருதி நல்ல அறிவாளி. தைரியசாலி. ஆசிரியைகளிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பாள். ‘‘பாதியில் விட்டுவிட்டு வேறு பாடத்துக்கு ஏன் செல்கிறீர்கள். முழுமையாக முடித்துவிட்டு சந்தேகங்களை சரி செய்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள்’’ என ஆசிரியர்களிடம் ஆஷா ஸ்ருதி கேட்பதை பார்த்து சக மாணவிகள் ஆச்சர்யப்பட்டுப் போவார்கள். வெஜ் ரைஸ் என்றால் ஆஷா ஸ்ருதிக்கு அவ்வளவு ஆசை. கல்லூரிக்குப் போகும் அவசரத்தில் பல நேரங்களில் அம்மா டெல்பியே ஆஷா ஸ்ருதிக்கு ஊட்டிவிடுவார். ஆஷா ஸ்ருதியின் தந்தை கிருஸ்துராஜ் கார் டிரைவர். நடுத்தரக் குடும்பம் என்பதை வீட்டின் சூழல்கள் சொல்லியது.

மூன்று கனவுகள்... மூன்று உயிர்கள்... ஒரு தண்ணீர் லாரி!

காயத்ரி: ‘‘ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகப் போகிறேன். தேர்வில் வென்று நல்ல பொறுப்புக்கு வருவேன். அப்போது அப்பா வாங்கிய கடனை எல்லாம் அடைப்பேன். திருமணம் முடிந்தாலும் அப்பா அம்மாவை என்னுடனே வைத்துக் கொள்வேன். அம்மா, அப்பா இருவரையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்.’’ - இது காயத்ரியின் கனவு. காயத்ரி தைரியமானவள். அப்பா கடன் வாங்கித்தான் படிக்கி வைக்கிறார் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தினாள் காயத்ரி. அவள் முன்பு யாரும் அழக்ககூடாது. அப்படியிருந்தால் அந்த இடத்தையே மகிழ்ச்சி ஆக்கி விடுவாள் காயத்ரி. தந்தை முருகேசன், அம்மா செல்வி இருவரும் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்திதான் காயத்ரியை படிக்க வைத்தார்கள்.

மூன்று கனவுகள்... மூன்று உயிர்கள்... ஒரு தண்ணீர் லாரி!

சித்ரா: “அப்பா... புத்தகம் வாங்க காசில்லை... எதற்கு பொரியும் ஸ்வீட்டும் வாங்கி வந்தீர்கள்.‘‘ ஆயுத பூஜை அன்று பொறுப்புள்ள பெண்ணாக தனது தந்தையிடம் கேட்டிருக்கிறாள் சித்ரா. ‘‘டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று அரசு உயர் பதவிக்குப் போக வேண்டும். இன்னும் கொஞ்ச நாள்தான். படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்றால் வீட்டுக் கவலைகள் எல்லாம் தீர்ந்து விடும். நீங்கள் கவலைப் படாதீர்கள்.’’ அடிக்கடி சித்ரா சொல்லும் வார்த்தைகள் இவை. குருவிகள் தங்கும் வீடும் போலத்தான் இருக்கிறது சித்ரா வாழ்ந்த வீடு. சித்ராவின் தந்தை லோகநாதன் தனியார் கம்பெனியில் நாலாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார். தாய் கலாவதி கற்பூர கம்பெனியில் வேலை பார்க்கிறார். சித்ராவின் தங்கை திவ்யா. விடுமுறையில் பகுதி நேர வேலைக்குப் போவாள் சித்ரா. அதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் படிப்பு செலவை சமாளித்திருக்கிறாள்.   

சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகியோரின் கனவுகளைத் கடந்த 13-ம் தேதி TN20 BT 8622 பதிவெண் கொண்ட தண்ணீர் லாரி மோதி கொன்றுவிட்டது. சென்னை செல்லம்மாள் கல்லூரி வாசலில் கனவுகளும் உயிர்களும் புதைந்து போயின.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.