
இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஜிசாட் 18 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இந்த செயற்கைகோளை விஏ 231 ராக்கெட் மூலம் இன்றுவிண்ணில் வெற்றிகாரமாக ஏவப்பட்டுள்ளது.
இதன் அம்சம்
தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்கும் வகையில் ஜிசாட் 18 செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளை ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதைக்கு வெற்றி கரமாக அனுப்பப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவுதலில் சிக்கல்
நேற்று ஏவுவதாக திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும் அதிக காற்றழுத்தம் இருந்த காரணத்திற்காக 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பணிக்காலம்GSAT-18 successfully launched by Ariane-5 VA-231 from Kourou, French Guianahttps://t.co/2sr09MWd9S pic.twitter.com/jB0mpFKbld— ISRO (@isro) October 5, 2016
தனது சுற்றுவட்ட பாதையை ஜிசாட் 18 செயற்கைகோள் அடைந்ததும் அதை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்படுத்த தொடங்குவர்கள். இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.