
மதுரை: நாளை முதல் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுவதாக அம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் மருது சகோதரர்களின் குருபூஜை அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல், வருகிற 30-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
நாளை (அக்.23-ம் தேதி) முதல் அக்.31-ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.