News
Loading...

ஆபாசப் படம் எடுத்த பாதிரியார்! - இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!

ஆபாசப் படம் எடுத்த பாதிரியார்! - இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!

நல்ல ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய பாதிரியார் ஒருவர், பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய சம்பவத்தால் நெல்லை வட்டாரமே அதிர்ந்துபோயிருக்கிறது. அந்த பாதிரியாரின் டார்ச்சர் குறித்துப் புகார் செய்வதற்கு காவல் நிலையம் சென்ற இளம்பெண் ஒருவர், அங்கு போலீஸார் பிளாக்மெயில் செய்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட துயரமும் நெல்லை வட்டாரத்தைக் கலங்கவைத்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்தவர், 35 வயதான ஜோஸ்வா இம்மானுவேல்ராஜ். பாதிரியாரான இவர், நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியில் மதப் பிரசங்கம் செய்துவந்துள்ளார். இவர், குடும்பப் பிரச்னை தீரவும், நோய்களில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்த வகையில், பாப்பான்குளத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பி.எட் மாணவியின் குடும்பத்தினருடன் ஜோஸ்வாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. பிரார்த்தனை செய்வதற்காக அடிக்கடி சென்று வந்த அவர், குடும்பத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் பழகியிருக்கிறார். அதன் பிறகுதான், ஜோஸ்வா தன் கைவரிசையைக் காட்டியுள்ளார்.

இது குறித்து அனுசுயாவின் உறவினர்களிடம் பேசினோம். “அனுசுயா குடும்பத்துடன் அந்த பாதிரியார் நெருங்கிப் பழகினார். ஒரு கட்டத்தில் அனுசுயாவை வெளியே அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாசமாகப் படங்களை எடுத்துள்ளார். பிறகு, அந்தப் படங்களை வைத்து பிளாக்மெயில் செய்து, ஆறு சவரன் நகையை அபகரித்துள்ளார். அந்த நகையைக் கேட்டு அனுசுயாவும் அவரது தாயாரும் பலமுறை ஜோஸ்வாவிடம் மன்றாடியுள்ளனர். ஆனால் அவர், தன்னிடம் உள்ள ஆபாசப் படங்களை இணையத்தில் போட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். எனவே, அனுசுயாவும் அவரது குடும்பத்தினரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, ஜோஸ்வா மற்றும் அவரது உதவியாளர் வினோத்குமார் ஆகியோரை தாழையூத்து போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி ரயில் முன் பாய்ந்து அனுசுயா தற்கொலை செய்துகொண்டார்.

அனுசுயாவின் புகாரை முதலில் தாழையூத்து போலீஸார் கண்டுகொள்ளவில்லை. எஸ்.பி-யிடம் முறையிட்ட பின்னரே விசாரணை நடத்தினர். தான் செய்த குற்றங்களையும் அனுசுயாவிடம் இருந்து நகை, பணத்தை அபகரித்ததையும் போலீஸிடம் ஜோஸ்வா ஒப்புக் கொண்டார். அதற்காக, 2 லட்சத்து 10,000 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக ஜோஸ்வா எழுதிக்கொடுத்தார். ஆனால், அந்தப் பணத்தில் இருந்து லஞ்சமாக தங்களுக்கு ஒரு தொகை தரவேண்டும் என அனுசுயாவின் குடும்பத்துக்கு போலீஸார் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதனால், அனுசுயா தற்கொலை செய்துகொண்டார்’’ என்று வேதனையுடன் சொன்னார்கள்.  

தற்கொலைக்கு முன்பாக, ஆறு பக்கங்களுக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார் அனுசுயா. “என் சாவுக்குக் காரணம் உஷா, ஜோஸ்வா, பூரணம், சீமா குமாரி’’ என அந்தக் கடிதம் தொடங்குகிறது. ‘‘நான் என் தம்பியை டியூஷனில் சேர்க்க உஷாவின் வீட்டுக்குப் போனேன். அதற்கு முன்பு, எனக்கு அவளைத் தெரியாது. ஒருநாள் அவ என் தம்பியிடம், ‘நான் 7 லட்சம் ரூபாய் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்துவிட்டேன். அதனால் என்னால் இனிமேல் டியூஷன் எடுக்க முடியாது. உங்க அக்காவை வரச்சொல். அவ டியூஷன் எடுக்கட்டும்’ என்று சொல்லி இருக்கா. நானும் அதை நம்பி அவங்க வீட்டுக்குப் போனேன். அப்போது என்னோட குடும்பச் சூழலைத் தெரிஞ்சுக்கிட்டு, ‘உனக்காக ஜோஸ்வா பிரார்த்தனை செஞ்சா, எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு சொல்லி போன் போட்டு குடுத்துட்டா. அப்போது பேசிய ஜோஸ்வா, ‘உன் வீட்டில் துக்க சம்பவம் நடக்கப் போகுது. நீயும் ஓரிரு நாளில் செத்துடுவ. நான் பிரேயர் செஞ்சு அதை சரிப்படுத்திடுறேன்’னு சொன்னதுடன், என்னோட குடும்பத்தைப் பற்றிய விவரங்களை எல்லாம் சரியாச் சொன்னான்.

ஆபாசப் படம் எடுத்த பாதிரியார்! - இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!

அத்துடன், யூத் பிரேயர் மீட்டிங் நடக்க இருக்கு. அங்கே வந்தால் எல்லாம் சரியாகிடும்னு சொன்னதால் அதை நம்பிப் போனேன். உஷாவின் அம்மா பூர்ணம், எனக்கு 1000 ரூபாய் கொடுத்து பஸ் ஏற்றி அனுப்பினார். மதுரையில் இறங்கியதும் அங்கிருந்து சேலம் பஸ்ஸில் ஏறி கரூருக்கு டிக்கெட் எடுக்கச் சொன்னார்கள். நான் அங்கே இறங்கியதும் ஜோஸ்வா காரில் வந்தான். அதே காரில் உஷா, டிரைவர் ஷாஜஹான் ஆகியோரும் இருந்தாங்க. கரூரில் ஒரு ஹோட்டலில் உள்ள ரூமுக்கு சென்றதும் என்னிடம் இருந்த நகையை பிரேயர் செய்து கொடுப்பதாக ஜோஸ்வா வாங்கிக்கொண்டான்.

அந்த ஹோட்டலில் வைத்து என்னை டிரைவருடன் சேர்ந்து நிற்குமாறு நிறையப் புகைப்படங்கள் எடுத்தாங்க. ஜோஸ்வாவும் என்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை எடுத்தான். நான் சத்தம் போட்டால் அங்கேயே கொலை செய்துவிடுவதாக மிரட்டினாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பி வந்த பிறகு என்னோட நகைகளை கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அதைக் கொடுக்கலை. நான் தொடர்ந்து நகையைக் கேட்டால் ஆபாசப் படங்களை வெளியில் தெரியப்படுத்தி விடுவதாக மிரட்டினாங்க. பயந்து போன நான் இது பற்றி எங்கம்மாவிடம் சொன்னேன். அவங்க ஜோஸ்வாவிடம் கேட்டதற்கும் மிரட்டி அனுப்பினான்.

ஆபாசப் படம் எடுத்த பாதிரியார்! - இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்!

அதனால் தான் போலீஸுக்குப் போனோம். அவன் பணம் தருவதாக எழுதிக் கொடுத்ததும் வீட்டுக்கு வந்துட்டோம். ஆனால், அதில் போலீஸ்காரங்க கமிஷன் கேட்டாங்க. அதைக் கொடுக்காததால் என்னைப் பற்றி பத்திரிகைகளில் மோசமா எழுத வச்சிட்டாங்க. டி.எஸ்.பி பொன்னரசுவும், இன்ஸ்பெக்டர் ஜீன்குமாரும் என்னை அசிங்கமா பேசினாங்க. நான் நடத்தை கெட்டவள் என்று ஏசினாங்க. என்னிடம் கேஸ் எழுதிக் குடுக்கும்படி வற்புறுத்தி வாங்கிட்டு, அதை பத்திரிகைக்கு குடுத்துட்டாங்க. என் போனில் உள்ள கால் ரெக்கார்டில், ஜோஸ்வாவும் உஷாவும் என்னிடம் பேசி ஏமாற்றிய விவரங்கள் இருக்கு. அந்த போன் இப்போது டி.எஸ்.பி ஆபீஸில் இருக்கு. அதைக் கேட்டாலே எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கலாம். என்னை ஏமாற்றி என் வாழ்க்கையைக் கெடுத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கணும்’’ என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளார். 

அனுசுயாவைப் போல பல அபலைப்பெண்களை ஜோஸ்வா ஏமாற்றியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் சொல்கிறார்கள். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.