News
Loading...

பைரவா ஸ்பாட்டில் மனம் உருகிய விஜய்!

பைரவா ஸ்பாட்டில் மனம் உருகிய விஜய்!

இது சதீஷுக்கு ரொம்பவே ஸ்பெஷல் சீஸன். நவராத்திரியில் ரிலீஸான ‘ரெமோ’, ‘தேவி’, ‘றெக்க’ என மூன்று படங்களிலும் காமெடியில் ஸ்கோர் செய்த ட்ரிப்பிள் கொண்டாட்டத்தில் இருக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் ‘பைரவா’, சதீஷின் 25வது படம். இது தவிர மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்தியுடன் ஐந்தாவது முறையாக ஃப்ரெண்ட் ஆகிறார். ‘‘ரொம்ப பில்டப் பண்ணிடாதீங்க ப்ரோ. நாம அடக்கியே வாசிப்போம்’’ என ‘ஸ்டார்ட் த மியூசிக்’லேயே ஜாலி வெடி வெடிக்கிறார் சதீஷ்.

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளிக்கு ‘கத்தி’ ரிலீஸ் ஆச்சு. அந்த தீபாவளி நிஜமாவே ஹேப்பி தீபாவளி. இந்த தீபாவளிக்கு ஒண்ணும் வரலைன்னு வருத்தமில்ல.  சமீபத்தில் ரிலீஸான மூணு படங்கள்லேயும் நானிருக்கேன். ‘பைரவா’ பொங்கலுக்கு வருது. பொங்கலைக் கொண்டாட இப்பவே ரெடியாகிட்டேன். இப்போ, சிவகார்த்தி படம் தவிர ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பறந்து செல்லவா’, ஜி.வி.பிரகாஷுடன் ‘4ஜி’னு நிறைய படங்கள் கைவசம் இருக்கு. லைஃப் ஹேப்பியா போயிட்டிருக்கு ப்ரோ!’’ 

‘‘சிவகார்த்தி - சதீஷ் கெமிஸ்ட்ரி செம வொர்க் அவுட் ஆகுதே?’’
‘‘அப்டீங்ளா ப்ரதர்! நிஜமாவே சந்தோஷமா இருக்கு. ‘மெரினா’, ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’, ‘ரெமோ’னு அவரோட பயணிக்கறேன். முதல் படத்துல பார்த்த அதே கடின உழைப்பு இன்னும் அவர்கிட்ட இருக்கு. ஸ்பாட்டுல சின்னச் சின்ன பன்ச்சஸ் தோணினா, உடனே தயங்காம சிவாகிட்ட சொல்லுவேன். அதை அழகா டெவலப் பண்ணி, ஃப்ரேம்ல கொண்டு வந்திடுவார். ‘ரெமோ’ என் லைஃப் டைம்ல கிடைச்ச பெஸ்ட் கேரக்டர்னு சொல்லுவேன். 

பைரவா ஸ்பாட்டில் மனம் உருகிய விஜய்!

அதோட ஷூட்டிங்ல சுவாரஸியமான விஷயங்கள் நிறைய நடந்தது. ‘மொட்டை’ ராஜேந்திரன் சாருக்கு காபி ரொம்ப பிடிக்கும். பிரேக் கிடைக்கும்போது எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிட்டிருப்போம். ஒரு நாள் அவர் காபி குடிக்கும்போது, ‘அடிக்கடி காபி குடிக்காதீங்க. முடி கொட்டும்’னு சொன்னேன். ‘அய்யய்யோ அப்படியாப்பா!’னு சீரியஸா தலையைத் தடவினார்! அப்புறம் சுதாரிச்சவர், ‘என்னப்பா! என்னையே கலாய்ச்சிட்டீங்களேப்பா’னு சொல்லி சிரிச்சார். இன்னொரு நாள் விக் வச்சு நடிச்சுக்கிட்டிருந்தார். அப்போ விக்ல இருந்து முடி கொட்டுச்சு. ‘பாத்தீங்களா? காபி குடிக்காதீங்கனு சொன்னா கேட்க மாட்டேங்குறீங்க. விக் போட்டா கூட முடி கொட்டுது பாருங்க’னு கலாய்ச்சேன். மனிதர் நிஜமாகவே கன்ஃப்யூஸ் ஆகிட்டார். ஸ்பாட்டுல இப்படி நிறைய காமெடிகள் நடக்கும்...’’

‘‘ ‘தேவி’யில ரொம்பவே சின்ன கேரக்டர்தானே பண்ணியிருந்தீங்க?’’
‘‘ஆமாம் ப்ரோ. டிராமாவில நடிச்சிட்டிருந்த என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினவர் டைரக்டர் விஜய் சார்தான். ‘தேவி’க்காக கேட்டதும் உடனே ஓடிப்போய் பண்ணினேன். அவர் கூப்பிட்டா சும்மா ஃப்ரேம்ல ஒரு ஓரத்துல வந்துட்டு போற சீனாக இருந்தா கூட ஜாலியா போய் நிப்பேன். ஒரே நாள் ஷூட்டிங்னாலும் பிரபுதேவா சாரோட காம்பினேஷன்ல நடிச்சிட்டேன். ‘அடுத்தும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு நம்பிக்கை கொடுத்திருக்கார் பிரபுதேவா சார். விஜய்சேதுபதியோட சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். ‘றெக்க’ ரத்தினசிவா என்னோட நண்பர் என்பதால, அதுல வாய்ப்பு அமைஞ்சது.’’  

‘‘ ‘தொடர்ந்து ஹீரோ ஃப்ரெண்டாவே நடிச்சிட்டிருந்தா சீக்கிரமே உங்க மேல சலிப்பு தட்டிடும்’னு மனோபாலா ஒரு முறைஉங்களுக்கு அட்வைஸ் கொடுத்திருந்தாரே?’’
‘‘குங்குமம்ல வந்த ‘நான் உங்கள் ரசிகன்’ தொடர்ல அப்படிச் சொல்லியிருந்தார். ஆனா, இன்னிக்கு டிரெண்ட் அப்படித்தான் இருக்கு. இந்த  டிரெண்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் நானும் ஃபாலோ பண்றேன். இப்போ படங்கள்ல தனி ட்ராக் காமெடிகள் வர்றதில்ல. வந்தா நாமளும் அப்படி முயற்சி பண்ணலாம். இப்போ இருக்கற டிரெண்டை மாத்தக்கூடிய அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. டிரெண்ட் மாறும்போது நானும் என்னோட ரூட்டை மாத்திக்குவேன்.’’ 

‘‘விஜய்யோட குட் புக்ல நீங்களும் இருக்கீங்க போல...’’
‘‘கடவுளோட ஆசீர்வாதம்தான் காரணம். ‘கத்தி’ டைம்லேயே விஜய் சாரோட ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நானும் சேர்ந்துட்டேன். பரதன் சார், ‘பைரவா’வுக்கு கூப்பிட்டதும் சந்தோஷமாகிடுச்சு. மறுபடியும் விஜய் சாரை சந்திக்கப்போறோம்னு குஷியாகிட்டேன். பாடல் காட்சியை கலர்ஃபுல்லா ஷூட் பண்றவர் பரதன் சார். அவரோட டயலாக் எல்லாம் ரசிக்க வைக்கும்.  

விஜய் சாருக்கு என்மேல ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. ஒரு தடவை அவர் ஜாகுவார் காரை எடுத்துட்டு வந்திருந்தார். சாயங்காலமா அவர் கிளம்பும்போது, ‘பக்கத்துலதானே நீங்களும் போகணும்? வாங்களேன், நானே ட்ராப் பண்ணிடுறேன்’னு சொன்னார். அவரோட கார்ல பேசிக்கிட்டே போகும்போது நான் இறங்க வேண்டிய இடத்தை கவனிக்கல. அதைத் தாண்டி வந்துட்டோம். ‘பரவாயில்ல... ஈ.சி.ஆர்.ல இறக்கிவிடுறேன்’னு இன்னும் கொஞ்சம் ட்ராவல் ஆனோம். அப்புறம், ‘இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. அப்படியே வீட்டுக்கும் வந்திடுங்க’னு இன்வைட் பண்ணினார். ஹேப்பி மொமன்ட். 

விஜய் சார்கிட்ட பேசிக்கிட்டிருந்தா, நிறைய விஷயங்கள் நமக்குக் கிடைக்கும். சின்னச் சின்ன பன்ச்சையும் நல்லா என்கரேஜ் பண்ணுவார். ஒரு நாள் ஷூட்டிங் பிரேக்ல பேசிக்கிட்டிருக்கும்போது ரசிகர்களைப் பத்தி நெகிழ்ந்து ஒரு விஷயம் சொன்னார். ‘நம்மளோட சுகதுக்கங்கள்ல சொந்தக்காரங்க பங்கெடுக்கிறது பெரிய விஷயம் இல்ல. ஏன்னா, அவங்க நம்ம சொந்தம். அதே மாதிரி நமக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போய் நண்பர்கள் வர்றதும் பெரிய விஷயம் இல்ல. 

ஏன்னா... அவன் நம்ம நண்பன். ஆனா, ரத்தசொந்தம் எதுவும் இல்லாம, நாம அழுதா அழுறதுக்கும் சிரிச்சா சிரிக்கறதுக்கும் இருக்கற ரசிகர்களோட அன்பை நினைக்கும்போது அது ரொம்ப பெரிய விஷயமா இருக்கு. அவங்களோட அன்புக்கு நான் ரொம்பவே கடன்பட்டிருக்கேன்’னு மனம் உருகி சொன்னது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.