News
Loading...

சினிமா டாக்கீஸ்

சினிமா டாக்கீஸ்

* ‘த கம்ப்ளீட் ஆக்டர்.காம்’ - இது மோகன்லாலின் அதிகாரபூர்வ வலைத்தளம். நாட்டு நடப்பிலிருந்து ‘மல்லுவுட்’ சினிமா வரை பல விஷயங்களை தனது ரசிகர்களுடன் அதில் பகிர்ந்து கொள்கிறார் மோகன்லால்.

* ‘வேலையில்லா பட்டதாரி’ பார்ட் - 2 அதன் தொடர்ச்சியாகவே படமாகிறது. அதே சமுத்திரக்கனி, அமலாபால் உண்டு. அனிருத் மட்டும் இல்லை.

* ரசிகர்களின் அன்பில் பூரித்துப்போயிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. ஃபேஸ்புக்கில் அவரை ஃபாலோ செய்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 25 மில்லியனைத் தாண்டியதே அந்த பூரிப்பிற்கான காரணம்.

* ‘பாகுபலி-2’வின் சில காட்சிகள் லீக் ஆகிவிட்டன. எரிச்சலான படக் குழு, இப்போது பாதுகாப்பை இறுக்கிவிட்டது.

* செல்வராகவன் தன் கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னார். ஆம் அல்லது இல்லை என்ற இரண்டு பதிலும் அவரிடம் இல்லை. பிறகு செல்வா சூர்யாவிடம் கதை சொல்ல, உடனே ஓகே ஆகிவிட்டது.

சினிமா டாக்கீஸ்

* தமிழில் நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கும் தன்ஷிகா, இப்போது பாலாவின் உதவியாளர் ஆனந்தமூர்த்தி இயக்கியிருக்கும் குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.

* த்ரிஷாவின் செல்போன் யாரோ ஒரு விஷமியால் ஹேக் செய்யப்பட்டுவிட, ‘‘என் செல்போன் எண் தெரிந்த ட்வீட்ஸ் மற்றும் நண்பர்கள் தயவுசெய்து உங்களின் பெயருடன் தொடர்பு எண்ணை எனக்கு வாட்ஸ்அப் செய்யவும். ஏனென்றால் யாரோ வேலையில்லா கோழை என் போனை ஹேக் செய்து அனைத்தையும் அழித்துவிட்டார்’’ என த்ரிஷா ட்விட்டி விட... ‘எனக்கு இதுபோல நடந்திருக்கிறது’ என ஹன்சிகாவும் சொல்ல... மற்ற நடிகைகள் பயத்தில் உள்ளனர்.

* கமல் தன்னை வளர்த்தெடுத்த ஏ.வி.எம். நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மெளலி டைரக்ட் செய்யும் அந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி. படத்தின் பெயர், ‘மெய்யப்பன்’.

* ஜாக்கி சானுடன் ‘குங்ஃபூ யோகா’வில் நடித்துவரும் ‘அனேகன்’ ஹீரோயின் அமைரா, இப்போது சந்தானம் ஹீரோயினாக பரபரக்கிறார். ‘‘ஜாக்கி சானுக்கு ‘கௌரவ ஆஸ்கர்’ விருது கிடைச்சது சந்தோஷமா இருக்கு. சந்தானம் டைமிங் ஜோக்ஸ் பிரமாதமா பண்றார்’’ என சர்டிபிகேட் கொடுக்கிறார்.

* சமந்தா, ரகுல், ரெஜினாவின் பர்சனல் காஸ்ட்யூம் டிசைனரான நீரஜா கோனா, ஐதராபாத்தில் ‘டி-கிரில்’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் ஒன்றைத் திறந்திருக்கிறார். திறப்பு விழாவில் கலந்துகொண்டு நீரஜாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார் சமந்தா.

* ‘கபாலி’ படத்துக்குப் பிறகு ராதிகா ஆப்தே எந்த தமிழ்ப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார். ‘‘ராதிகாவுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டது. பெண்களை மையப்படுத்தும் படமாக இது இருக்கும்’’ என்கிறார் ஆதித்யா.

* ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்காக நெட்டில் காத்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். எதுவுமே காட்டவில்லை. அதனால் படத்தைத் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

* புதிதாக வெப்சைட்டும், வலைத்தளமும் தொடங்கியிருக்கிறார் எமி ஜாக்‌சன். சமீபத்தில் ஹாலிடே ட்ரிப்பாக பாரீஸ் சென்று வந்ததை தனது ‘ப்ளாக்’கில் ரசித்து எழுதியுள்ளார்.

* பாரதிராஜாவின் அடுத்த படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

* கௌதம், விக்ரம் காம்பினேஷன் உறுதியாகிவிட்டது. சூர்யாவிடம் சொல்லி அவர் நிராகரித்த கதை. அந்த ‘துருவ நட்சத்திரமே’ இப்போது விக்ரம் நடிக்கத் தயாராகப் போகிறது.

* தெலுங்கில் கவனம் செலுத்தும் நீது சந்திராவை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் ஹரி. சூர்யாவின் ‘எஸ்3’யில் அறிமுக பாடலுக்கு நீது குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

* ‘காற்று வெளியிடை’ முடிந்ததும், ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த ‘எதிர்க் கட்சி’ ஸ்கிரிப்ட்டை ஆரம்பிக்கிறார் மணிரத்னம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.