News
Loading...

கமலஹாசனிடம் இருந்து சுருதிஹாசன் நெருக்கடியால் கவுதமி பிரிந்தாரா?

கமலஹாசனிடம் இருந்து சுருதிஹாசன் நெருக்கடியால் கவுதமி பிரிந்தாரா?

ரஜினிகாந்தின் ‘குருசிஷ்யன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கவுதமி.அதன் பிறகு கமல்ஹாசன் உள்பட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் கவுதமி நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் பிரபலமானார். 1998-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த நகை வியாபாரி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரே வருடத்தில் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர். கவுதமிக்கு அவரது கணவர் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். பிறந்த பிறகு தனியாக வாழ்ந்தார். தனியாக தவித்த அவருக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தார்.

கமல்ஹாசன் 1978-ல் வாணி கணபதியை திருமணம் செய்து 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு இந்தி நடிகை சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுருதி, அக்‌ஷரா என்ற குழந்தைகள் உள்ளனர்.

சரிகாவுக்கும், கமல்ஹாசனுக்கும் 2004-ம் ஆண்டு விவாகரத்து ஆகி விட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனும், கவுதமியும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். 13 ஆண்டுகள் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். கவுதமி மகள் இப்போது பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கமலை விட்டு பிரிந்து விட்டதாக கவுதமி அறிவித்து இருக்கிறார். வேதனையுடன் பிரிவதாகவும், மன நிம்மதி இருந்தால்தான் என் மகள் நினைப்பது போல தாயாக இருக்க முடியும். எனவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். சேர்ந்து வாழ முடியாது என்று பிரிந்த பிறகு வேறு வீட்டில் வசிக்கப்போகிறேன். தொடர்ந்து நடிப்பேன். கமல் ரசிகையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, ‘தசாவதாரம்‘, வர இருக்கும் 'சபாஷ்நாயுடு' படங்களுக்கு கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். மலையாளத்தில் நடித்து வருகிறார்.மார்பக புற்று நோயில் இருந்து மீண்டு வந்துள்ள கவுதமி, இது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கமலுக்கு இரண்டு பெண் குழந்தைகள், கவுதமிக்கு ஒரு பெண் குழந்தை என்றாலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தனர்.பொது நிகழச்சிகளில் பங்கேற்கும் போது கமலும் கவுதமியும் ஜோடியாக சென்று வந்தனர். சமீபத்தில் கமல் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இரவோடு இரவாக அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்து, அருகில் இருந்து கவுதமி கவனித்தார்.

நீண்ட இடைவெளிக் குப்பிறகு கமலுடன் கவுதமி நடித்த பாபநாசம் படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது, கமல் தயாரித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுருதிஹாசனும் நடிக்கிறார். ஆடை வடிவமைப்பது தொடர்பாக கவுதமிக்கும், சுருதிஹாசனுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இதை இரண்டு பேரும் மறுத்தார்கள்.

கமலும்-கவுதமியும் ஒன்றாக வாழ்வது பற்றி சுருதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது ‘ அவர் என் தந்தைக்கு பிடித் தமானவர். அது அவர்களின் தனிப்பட்ட வி‌ஷயம் என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார். ஆனால் கவுதமியை அம்மா என்று அழைப்பீர்களா? என்று கேட்ட போது, எனக்கு அம்மா சரிகா, நான் ஏன் கவுதமியை அம்மா என்று அழைக்க வேண்டும்? என்று திருப்பிக்கேட்டார்.

இதற்கிடையே சுருதிஹாசன் அடிக்கடி கவுதமியிடம் மோதுவதாக கூறப்பட்டது. ஆனால் இதை சுருதிஹாசன் மறுத்து வந்தார். இப்போது திடீர் என்று கமலை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு சுருதிஹாசனுடன் கவுதமிக்கு ஏற்பட்ட மோதல்தான் காரணம் எனவும் கடந்த 2 வருடங்களாகவே இந்த பிரச்சினை இருந்தது என்றும் இந்த நெருக்கடி காரணமாகவே கவுதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

வேதனையுடன் கமலைப் பிரிவதாகவும் எங்கிருந்தாலும் கமலுடன் உள்ள நட்பு மாறாது என்றும் டுவிட்டரில் கவுதமி கூறி இருக்கிறார். தனது மகளுக்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறி உள்ளார்.

ஆனால் சுருதிஹாசன் இதை ஆதரிப்பது போல தனது டுவிட்டர் பக்கத்தில், ''ஒருவருக்குள் ஏற்படும் மாற்றத்தை உணர்வது அருமையானது. அது புதிய புரிதலின் தருணம். புதிய கண்ணோட்டத்தை உணர்வது அருமை'' என்று குறிப்பிட்டுள்ளார்.இது இருவருக்கும் உள்ள மோதலை உறுதிபடுத்துகிறது என்று கூறப்படுகிறது. கவுதமிக்கும்,சுருதிஹாசனுக்கும் ஏற்பட்ட தொடர்மோதல் தான் இப்போது பிரிவாக மாறிவிட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

English Summary : kamal gautami separation shruti haasan for the reason

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.