News
Loading...

2016 டாப் 25 பரபரா

2016 டாப் 25 பரபரா

செல்ஃபி வெடி!

‘வர்லாம் வர்லாம் வர்ர்ர்ர்லாம் வா…’ என ஆண்டு முழுவதும் ரிவர்ஸ் கியரிலேயே இருந்தார் நாஞ்சில் சம்பத். வாயில் பட்டாசைக் கவ்விக்கொண்டு சேனல் சேனலாகப் போய் செல்ஃபி வெடி வெடித்தார் சித்தப்பு. மூஞ்சி முழுக்க பாம்பு டான்ஸ் ஆட, ‘இப்ப நான் கொலைப் பசியில இருக்கேன்’ என இவர் தட்டிய அத்தனை பேட்டிகளும் ‘வர்தா’ வைரல்கள். ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’ என சேம் சைடு செய்வினை வைத்தார். ‘எறும்புகள் சாகின்றனவே என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா?’ என சோறாக்கும் வீட்டுக்கே சூனியம் வைத்தார். உச்சகட்டமாக, ‘சாவு விழுந்துவிட்டதே என்பதற்காக, கல்யாணம் வைக்காமல் இருக்க முடியுமா?’ என வெள்ள நேரத்தில் இவர் வாயடிக்க... வெறியான கார்டன், கட்டம் கட்டிக் காயடித்தது. அசராமல், குற்றாலத் துண்டோடு கட்டஞ்சாயா குடித்தபடி நாகர்கோவிலில் இருந்து பேர்பாடி பேட்டிகள் தட்ட, வீட்டிலேயே ஒரு வேளை சாப்பாட்டை கட் பண்ணினார்கள். விடாமல் விசுவாச வெங்கலச் சொம்புகளை உருட்டித்தள்ள, மறுபடியும் கார் அனுப்பியது கட்சி. ‘டீசலைப் போடு… டீ சொல்லு…’ என மறுபடி சம்பத் கிளம்ப, ‘மீம்ஸ் மாமு… மீம்ஸ் மாமு...’ என ஜாலியானார்கள் நெட்டிசன்கள்.

2016 டாப் 25 பரபரா

விமானநிலையக் கூரை 50 தரம்... 100 தரம்!

சென்னை விமானநிலையம்தான் சென்ற வருடத்தின் கொலவெறி ஸ்பாட். விமானநிலையத்தின் மேற்கூரைக் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுந்து ஸ்க்ரோலிங் ஆக, ‘இது என்னய்யா புது இம்சையா இருக்கு!’ என டென்ஷன் ஆனான் தமிழன். பல விமானநிலையங்கள் அழகுக்கும் சுத்தத்துக்கும் பிரபலமாக, கூரைக் கண்ணாடிகள் உடைவதில் அகில உலக ஃபேமஸாகி மானபங்கப்பட்டது நம்ம சென்னை விமானநிலையம். ‘ஃப்ளைட்ல போறவனுக்கு எதுக்குய்யா ஹெல்மெட்டு?’ என்ற அளவுக்குப் பயணிகள் பயந்து திரிந்தார்கள். ‘66-வது தடவையா… 67-வது தடவையா?’ என கின்னஸ்காரன் நோட்பண்ணினான். ‘சர்வதேசியத்துக்கு முன்னாடி இது தமிழனுக்குத் தலைக்குனிவு…’ என டி.வி விவாதப் பார்ட்டிகள் கொந்தளித்தார்கள். இது, ஒரு தினுசான கூத்தாக இருந்தது. மனித உரிமை ஆணையம் வரை போய் விளக்கம் கேட்க, ‘கோழிமுட்டை ஸ்டைலில் ஏர்போர்ட்டைக் கட்டினதால இப்படி உடையுதோ?’ என, தாடையைச் சொறிந்தார்கள் அதிகாரிகள். ஆசியாவின் கேவலமான ஏர்போர்ட்களில் ஏழாவது இடம் பிடித்து, ஹிட்டடித்தது சென்னை ஏர்போர்ட். ஆனால், ஊரே கிறுகிறுத்த வர்தா புயலில் ஏர்போர்ட்டின் மேற்கூரைக் கண்ணாடி விழவில்லை என்பது ரொம்ப்ப்ப்ப முக்கியமான பிட்டு.

2016 டாப் 25 பரபரா

அணிலா... ஆமைஸா?

தல-தளபதி ரசிகச் சண்டைகள்தான் நான்சென்ஸ் ஆஃப் 2016. ‘ஸ்டேட்டஸ், கமென்ட், மீம்ஸ் என எதற்கெடுத்தாலும் இவர்கள் மாறி மாறி மண்ணைத் தூத்த, ‘இருக்குற பிரச்னையில இதுவேற…’ எனக் கடுப்பானது தமிழகம். ஃபர்ஸ்ட் லுக் வந்தால் சாணி அடிப்பது, டீஸர் வந்தால் சட்டையைக் கிழிப்பது, ட்ரெய்லர் வந்தால் கூலிப்படை வைப்பது, படம் வந்தால் பப்படமாக்குவது என வருடம் முழுக்க ரெண்டு குரூப்களும் குண்டுவைத்துக்கொண்டே இருந்தன. #Six-years-of-surada என விஜய் வெறியர்கள் ‘வாடா… வாடா…’ வலை விரிக்க, #ten-years-of-janada என அஜித் விழுதுகள் கிளம்பி வர, இந்த ட்ரெண்டிங் பாண்டிகளிடம் சிக்கிச் சின்னாபின்னமானது நெட்டுலகம். தெரியாமல் வந்து சிக்குகிறவர்களையும் உரித்து உப்பு மிளகாய் தடவினார்கள். கீபோர்டைத் தட்டினோமா... கெட்ட வார்த்தை பேசினோமா என வேலையைப் பார்க்காமல், ‘நான் தளபதி ரசிகன்’ என ட்வீட்டினார் ஜி.வி.பிரகாஷ். கூடவே, நக்கலடித்து தல ரசிகர்களுக்கு ஸ்க்ரூ போட்டார். ‘கமான்... கமான்…’ எனக் கிளம்பிய தல குரூப், ஜி.வி.பி-யை தொம்சம் பண்ணியது. அஜித் பல்கேரியாவில் பாராசூட்டில் பறக்க, விஜய் ‘கறுப்புப் பணம் ஒழிப்புல ஒரு பாய்ன்ட்டு…’என அரசியல் ஸ்கெட்ச் போட… ‘போங்கடா, போய் புள்ளக்குட்டிகளைப் படிக்கவைங்கடா…’ என எவன் சொன்னாலும் கேட்காமல், அலகுக் காவடி தூக்கிக்கொண்டே இருந்தார்கள் அப்பாவி ரசிக ரௌடிகள்.

2016 டாப் 25 பரபரா

வதந்திடா... பரப்புடா!

வாட்ஸ்அப்தான் வருடத்தின் சிறந்த வதந்தி வாகனம். பதஞ்சலி பக்தர்களில் இருந்து சன்னி லியோன் பித்தர்கள் வரை, வகைதொகை இல்லாமல் வாட்ஸ்அப்பில் குரூப் ஆரம்பித்து, குரல்வளையைக் கடித்தார்கள். அவனவன் எதையாவது கிளப்பிவிட, மெசேஜ் டோன் கேட்டாலே மெர்சலானான் தமிழன். ‘அவனா இவனா... உண்மையா பொய்யா’ என எதுவும் புரியாமல் பூராப் பயலுகளும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் திரிந்தார்கள். ‘உலகையே அழிக்கும் புயல் ஒன்று சென்னையை நோக்கி வருது ஓடுங்க!’ என நடுச்சாமத்தில் ஓலை வரும். ‘காந்தப் புயல் வந்தால் செல்போன் எல்லாம் அவுட்’ என மட்ட மத்தியானம் கிளப்பிவிடுவார்கள். ‘ரயிலில் தொலைந்துபோன இந்தச் சிறுமியைப் பார்த்தால் சொல்லுங்க’ என மெசேஜ் வரும். ‘பாஸு… இதை எல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே கண்டுபிடிச்சு ஒப்படைச்சுட்டாங்க. அந்தப் புள்ள இப்போ காலேஜ் போகுது…’ என பின்னாலேயே பின்னியெடுப்பார்கள். ‘ப்ளஸ் டூ மார்க்‌ஷீட்டை மாலதி இன்னும் தேடிட்டிருக்கு’, ‘யுனெஸ்கோ, இந்த வருஷமும் சிறந்த பிரதமர் என மோடியைச் சொல்லிடுச்சு. ‘ஓம் சாய்ராம்’ மெசேஜை 100 பேருக்கு ஃபார்வேர்டு பண்ணலைன்னா, கக்கத்துல கட்டி வரும்’ எனச் சுழற்றி அடித்தார்கள். இதில் வாய்ஸ் மெசேஜ்கள்தான் கிடுகிடு இம்சைகள். ‘அப்போலோவில் இருந்து அம்மாவின் குரல் பதிவு’, ‘சசிகலாவுக்கு எதிராக சசிகலா புஷ்பாவின் பகீர் ஆதாரங்கள்’, ‘பெண் போலீஸுக்கு எஸ்.பி-யின் மிட்நைட் ஸ்பீச்’, ‘ராஜராஜசோழன் எங்க சாதிங்கிறதுக்கு ஆதாரம்டா...’, ‘ஸ்வாதி கொலை வழக்கு ரகசியங்கள்’, ‘புது 2,000 ரூபாய் நோட்டுல டூப்ளிக்கேட்’ என மிமிக்கிரியிலும் மிரட்டலிலும் போட்டுப்பொளந்தார்கள். ஜெயலலிதாவுக்குக் கிச்சடி கொடுத்ததில் இருந்து, திண்டுக்கல் லியோனிக்கு டெத் சர்ட்டிஃபிகேட் எடுத்தது வரை வரிசை கட்டி வந்த வதந்திகளால் வருடம் முழுக்க ஜாம் ஆகிக்கொண்டே இருந்தது சிக்னல். 

2016 டாப் 25 பரபரா

ஓடி... ஓடி... ஒட்டணும்!

2016-ம் ஆண்டின் அராஜக அட்ராசிட்டி இது. மிக்ஸி, கிரைண்டரில் தொடங்கி ஆட்டுக்குட்டி, பாப்பா ஜட்டி வரை, சிக்கும் இடங்களில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை அடித்து ஒட்டினார்கள் அ.தி.மு.க-வினர். ‘தெக்குத் தெரு முக்குல சுக்குப் பாட்டி மண்டையப் போட்ருச்சு… எடுக்கிறதுக்கு முன்னால அது நெத்தியில ஸ்டிக்கரை ஒட்டிருங்கடா!’ என ஊருக்கு ஊர் ஆவேசமாக அலைந்தது அம்மா படை. சென்ற வருடம் நிவாரணப் பொருட்களில் எல்லாம் ஸ்டிக்கரை ஒட்டி விசுவாச வெறி காட்டியவர்கள், சென்ற ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடந்த கல்யாணத்தில் மணமக்கள் நெற்றியில் கட்டிக் கலவரப்படுத்தினார்கள். ‘பால் சொம்புல ஒட்டுங்கடா!’ என ஃபாலோ பண்ணிப் போக, தெறித்து ஓடினார்கள் ஜோடிகள். உச்சகட்டமாக அம்மாவின் பிறந்த நாளுக்கு 668 உருப்படிகளைப் பிடித்து, அம்மாவின் உருவத்தை நெஞ்சிலும் கையிலும் கதறக் கதறப் பச்சை குத்தியது எல்லாம் தெறி பேபி டெர்ரரிசம்.

2016 டாப் 25 பரபரா

நாங்க வேற லெவலுங்க!

டி.ஆர் - சிம்பு, சென்ற வருடமும் ‘கலக்கப்போவது யாரு?’ ரவுண்டிலேயே இருந்தார்கள். யானைக்கவுனியில் பூந்திக்கடை போட்ட சேட்டுப் பையன் மாதிரி டெவலப் ஆகியிருந்தார் சிம்பு. ‘உடம்பைக் கொற தலைவா!’ என ரசிகர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். `‘தள்ளிப் போகாதே’ பாட்டு ஷூட்டிங்குக்கு வர மாட்றாப்ல’ என கௌதம் மேனன் கொடும்பாவி கொளுத்தினார். ‘டைம்கிறது ஒரு சயின்ஸ். நான் சீக்கிரம் வருவேன்; லேட்டா வருவேன். ஆனா, கரெக்ட்டா வர மாட்டேன். ஏன்னா, டைம்கிறது ஒரு சயின்ஸ்…’ என சிம்பு கசக்கி ஊத, ‘எங்கேயோ போய் ஆசி வாங்கிட்டு வந்துட்டாப்ல’ என ஜெர்க்கானது கோடம்பாக்கம். ‘நான் போட்டியிலேயே இல்லைங்க. ஜீரோங்க. கிரிவலம் போறேங்க. என்ன ஏன் கூப்பிடுறீங்க?’ என சிம்பு செதறடிக்க, விஜய் டி.வி டிடி-க்கே கிறுக்கு பிடித்தது. பையனுக்கு உல்ட்டாவாக, ‘இன்னும் நான் போட்டியிலதான் இருக்கேன். மூவ்மென்ட்ஸ் பாரு…’ என இறங்கிக் குத்தினார் டி.ஆர். சன் டி.வி-யில் நீதிபதி கெட்டப், விஜய்யில் சதாவோடு யூத் செட்டப் என டி.ஆர் எப்பவும் ‘கலக்கு சித்தப்பு’தான். 

2016 டாப் 25 பரபரா

உடல் டப்ஸ்மாஷுக்கு... உயிர் லைக்குக்கு!

சென்ற வருஷம் ஓவராகவே எகிறிக் குத்தினான் இணையத் தமிழன். சாவை கன்ஃபர்ம் பண்ணாமலேயே ஆர்வக்கோளாறு ஃபீலிங்கில் `RIP’ போட்டு, பல பேர் அசிங்கப்பட்டார்கள். ஆனாலும் அடுத்த ஸ்டேட்டஸிலேயே ‘புஜ்ஜிம்மா சி.ஆர்.சரஸ்வதி, குட்டிம்மா வளர்மதி எல்லாம் வாங்க வாங்க’ என ஃபுல் ஜாலி ஆனார்கள். முட்டுச்சந்து, அடுப்படி, மொட்டைமாடி என எங்கெங்கும் மூஞ்சை நீட்டி நீட்டி டப்ஸ்மாஷ் என்ற பெயரில் கொரவளையைக் கடித்தார்கள். ஷாப்பிங் செய்தபடி ஃபேஸ்புக் லைவ்வில் பேசுவது, டவுசர் மாட்டியபடி டான்ஸ் ஆடுவது என அடுத்த கட்டத்துக்குத் தவ்வினார்கள். படம் பார்ப்பவர்களைவிட, விமர்சனம் செய்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பினார்கள். ‘படம் மொக்க… குறுக்கப் போட்டு அறுக்குறாய்ங்க’ ‘வி.எஃப்.எக்ஸ் சரியில்லை’ ‘காப்பிரைட் வாங்காம காப்பி பண்ணிட்டா’ என, இந்த வெள்ளிக்கிழமை ராமசாமிகளின் டார்ச்சர் ஓவரோ ஓவர். இருக்கிற இம்சையில், ஜியோக்காரன் இலவசமாக ஜீபி-க்களை அள்ளிவிட, அவனவனும் ஆறேழு அவதாரங்களுடன் திரிந்தார்கள். ட்விட்டரில் ஆர்டி பிச்சை எடுப்பது, நியாயம் கிடைக்கும் வரை ஷேர் பண்ணுங்க என முழங்கிவிட்டு ஆஃப்லைன் போவது, சிக்குகிற டாப்பிக்குகளில் எல்லாம் டாப்பைப் போடுவது என ‘எதை எடுத்தாலும் அஞ்சு நிமிஷம்… எதை எடுத்தாலும் அஞ்சு நிமிஷம்…’ எனப் போய்க்கொண்டே இருந்தான் கணினித் தமிழன்.

2016 டாப் 25 பரபரா

டிவிரவாதிகள்!

2016-ன் அதிபயங்கரவாதம், செய்தித் தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகள்தான். எங்கே என்ன நடந்தாலும் நான்கைந்து பேர் கூடி, கட்டம் கட்டிக் கதற, தமிழ்நாட்டுக்கே காது அடைத்தது. ‘ஸ்டுடியோலயே டிபன் இருக்குங்க… ஷெர்வானி இருக்குங்க… ரோஸ் பவுடர் இருக்குங்க’ என போன் அடித்ததுமே கால் டாக்ஸிகளில் கிளம்பிவரும் 20 பேரால், தினசரி திருவிழா கொண்டாடினான் தமிழன். ‘என் கருத்தைப் பதிவு பண்ணவிடுங்க...’, `இருங்க முடிச்சுர்றேன்’ என ஒருவர் கதற, ‘உங்களுக்கு என்ன தெரியும்... ஆதாரம் இருக்கா?’ என ஒருவர் எகிற, ‘அடேய்… புள்ளைங்களைப் படிக்கவிடுங்கடா’ என டென்ஷன் ஆனார்கள் குடும்பத் தலைவிகள். மனுஷ்யபுத்திரனின் ஒயிலாட்டம், ஆவடி குமாரின் காவடியாட்டம், சி.ஆர்.சரஸ்வதியின் கரகாட்டம், ராகவனின் பால்குடம்… என மை முறுக்கு பார்ட்டிகள் அட்டகாசம். ‘நீங்க உண்மையைச் சொல்லுங்க சொல்லாமப்போங்க... ஊழலைத் தடுங்க தடுக்காமப்போங்க... எங்களுக்கு விஜயதரணியும் ஜமீலாவும் மொளப்பாரி தூக்கியே ஆகணும்’ என ஜாலியானது வருத்தப்படாத வாக்காளர் சங்கம். பத்திரிகையாளர் மணி, ஓய்வுபெற்ற சுப்பிரமணி, சமூக ஆர்வலர் சாந்தி… என புள்ளிவிவர குரூப்பின் புலியாட்டம் வேறு. நெறியாள்கை என்ற பெயரில் குணசேகரன்,  ரங்கராஜ் பாண்டே, கார்த்திகைச்செல்வன் செய்தவை எல்லாம்… டி.ஆர்.பி தாதாயிசம்.

2016 டாப் 25 பரபரா

ஓட்டு போட வரலையே!

இதுதான் போங்கு 2016. ‘ஓட்டு போடுங்கோ… ஓட்டு போடுங்கோ…’ என லக்கானி அண்ட் கோ அடித்த கூத்து, செம ஊத்து. தேர்தலையொட்டி ‘மறக்காம ஓட்டு போடுங்க’ என விதவிதமாக விளம்பரம் செய்து, மாஸ் காட்டியது தேர்தல் ஆணையம். கார்ட்டூன்கள், பேனர்கள், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் என இந்தப் பிரசாரமும் பின்னியெடுத்தது. ஹாக்கி பேட் மீசையோடு வந்து, ‘ஓட்டு போடுறது உங்க கடமை…’ என சூர்யா உருக, தினேஷ் கார்த்தி குடும்பத்தோடு கோரிக்கைவைக்க, அஸ்வின் அறிவுரை சொல்ல, கமல் வார்த்தைகளை மாற்றிப்போட்டு கரகரக்க… ‘போடுறோம் பாஸு… போடுறோம் பாஸு!’ என தம்ஸ்அப் காட்டினான் தமிழன். ஆனால், தேர்தல் அன்று இப்படி கருத்துச் சொன்னவர்களிலேயே மூன்று பேர் ஓட்டுபோட வராமல் போக, ‘பகத்சிங்க அவுத்துவிட்ருவேன் பாத்துக்க!’ எனக் கடுப்பானது பப்ளிக்.

2016 டாப் 25 பரபரா

சந்தோஷமா வாங்க... சட்டையைக் கிழிச்சுக்கிட்டுப் போங்க!

2016-ம் ஆண்டின் பஞ்சர் பஞ்சாயத்து. ‘வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என ‘சொல்வதெல்லாம் உண்மை’க்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இன்னொரு பக்கம் ‘நிஜங்கள்’ என குபீர் என்ட்ரி கொடுத்தார் குஷ்பு. குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் இவர்கள் செய்தவை எல்லாம், கொடுமை… கொடுமை. ‘உன் புருஷன் இந்தப் பொண்ணை வெச்சிருந்தாரா?’, `அவரு தம்பி உன்னைக் கட்டாயப் படுத்தினாரா?’, `மாமனாரே அப்பிடியா… பயப்படாமச் சொல்லு’ என ஃபுல் மேக்கப்பில் அப்பாவிகளை உருட்டி எடுத்தனர். ‘அடிச்சிருவியா… தூக்கிப்போட்டு மிதிச்சிருவியா… சங்கக் கடிச்சிருவியா?’ என இவர்கள் டி.ஆர்.பி-க்கு ஏற்றிவிட, சமாதானம் பேச வந்தவர்களே சண்டையில் மண்டையைப் பொளந்துகொண்டனர். உச்சகட்டமாக, ‘டேய்... நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ எனப் பஞ்சாயத்துக்கு வந்தவனை குஷ்பு சட்டையைப் பிடித்து சவட்ட, சுந்தர்.சி-க்கே கிறுகிறுத்தது.  `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா!’ என ஸ்ரீப்ரியா கருத்துச் சொல்ல, ‘நான் பண்றது பொதுசேவை’ என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். தட்ஸ் ஆஃப்டர் தி பிரேக்.

2016 டாப் 25 பரபரா

அப்ரூவர் அய்யாசாமி!

பழ.கருப்பையாதான் சென்ற வருடத்தின் முந்திரிப்பருப்பையா. அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான அண்ணாச்சி, `கட்சியில என் மனசு புண்ணாச்சி…’ என திடீர் ஸ்டேட்மென்ட் தட்டினார். துக்ளக் மேடையில் ஏறி, ‘அந்த அம்மா வேஸ்ட்… அ.தி.மு.க-வே ஊழலாகிருச்சு. சீல் வெச்சுருச்சு…’ எனப் பற்றவைக்க, ‘பழம் என்ன திடீர்னு வெம்புது?’ என மெகா காமெடிக்கு ரெடியானது தமிழகம். ‘அவிய்ங்க மோசம்யா…’ என விகடனில் அப்ரூவர் பேட்டி தட்டினார். ‘கெண்டைக்கால் நரம்பை அறுத்துருவோம்மா?’ என அல்லக்கைகள் கொதிக்க, ‘பொறுத்துப் போடுவோம்…’ என கேட்டை மூடியது கார்டன். சொம்பு நிறைய காபி குடித்துவிட்டுத் தெம்பாகக் கிளம்பியவர், ரங்கராஜ் பாண்டேவிடம் சிக்கினார். ‘திடீர்னு எங்கே இருந்து வந்தது ரோஷம்?’ என பாண்டே கோழியை உரித்து அடுப்பில் காட்ட, சட்டியில் குதித்துப் பொரிந்தார் கருப்ஸ். போறவன் வர்றவன் எல்லாம் கதவிலும் காரிலும் கல் எறிய, ‘அறிவாலயத்துக்கு ஊபர் புக் பண்ணுப்பா’ என, கலைஞரைப் பார்த்து சமூகநீதி சீஸன் டூவில் ஐக்கியம் ஆனார் அண்ணாச்சி.

2016 டாப் 25 பரபரா

ரணகள பாண்டே

ரங்கராஜ் பாண்டேதான் சென்ற ஆண்டின் ரணகள பாண்டே. பேட்டி என்ற பெயரில் பல பேருக்குப் பட்டி டிங்கரிங் பார்த்தார். `வாங்க பாஸு... பப்ளிசிட்டி பின்னிருவோம்’ எனப் பலரை பார்சல் பண்ணிக்கொண்டுவந்து டவுசரைக் கழட்டினார். `பேரு பாண்டே... வாயைக் கட்டணும் தாயே’ எனக் காசு வெட்டிப்போட்டார்கள் கட்சிக்காரர்கள். வாக்அவுட் செய்த பழ.கருப்பையா எல்லாம் வயநாடு வரை போய் செய்வினை வைத்தார். `நான் நடுநிலை. நடுவுல உட்கார்ந்திருக்கேன் பாருங்க’ எனக் கூவியவர், சட்டமன்ற நேரத்தில் பொசுக்கென அம்மா ஸ்டிக்கர் ஒட்டினார். அம்மா பதவியேற்பு விழாவில், பச்சை நிறச் சட்டை போட்டுக்கொண்டு போக, `நம்மள காலி பண்ணிருவான்போலிருக்கே’ என அமைச்சர்களே பதற்றம் ஆனார்கள். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாதபோது, ஒரு ஜோசியரைக் கூட்டிவந்து, `அம்மா எப்போ குணமாவாங்க?’ என இவர் கருத்து கேட்டது எல்லாம் காமெடி யாவாரம்.  அப்போலோவில் ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வருவதற்கு முன்னரே செய்தியாக்கிச் சிக்கிக்கொண்டு, `போடா... போடா சூனாபானா...’ எனத் துண்டைச் சுழற்ற, `நீ நல்ல்ல்லா வருவ தம்பி’ என வியந்தது அரசியல் அரங்கம்.

2016 டாப் 25 பரபரா

டாப் வரப்புத் தகராறு!

இன்னும் குஞ்சே பொரிக்கலை, அதுக்குள்ள லெக்பீஸுக்கு அடிச்சுக்கிற கதையாக, எடுக்காத படத்தின் கதைக்காக பங்காளிச் சண்டையில் இறங்கினார்கள் பாரதிராஜாவும் பாலாவும். 

வேல.ராமமூர்த்தியின் `குற்றப்பரம்பரை’ நாவலை பாலா படமாக எடுக்கப்போவதாகச் செய்தி வந்தது. இதைப் பார்த்து, `குற்றப்பரம்பரை என் பரம்பரைக் கதை. தட் இஸ் மை ட்ரீம் புரொஜெக்ட். என் எச்சிலை பாலா தின்ன மாட்டான்’ என மூக்கு விடைப்புப் பேட்டி தட்டினார் பாரதிராஜா. உடனே மண்டை ஓட்டு மாலையோடு எகிறிவந்த பாலா, `எச்சரிக்கிறேன்’ என பிரஸ்மீட் வைக்க, `இன்னிக்கு ட்ரெண்டிங் இரை சிக்கிருச்சு’ என ஜாலியானான் தமிழன். இங்கிட்டு வேல.ராமமூர்த்தி, அங்கிட்டு ரத்னகுமார் என, பின்கள ஆட்டக்காரர்கள் வேறு `எனக்கு ஒரு பிட்டு... எனக்கு ஒரு பிட்டு’ என வர, `சீக்கிரம் முடிங்க பாஸு. அஸ்வின் ஆறு விக்கெட் எடுத்துட்டாப்ல. அங்கே போகணும்’ என அடுத்த வேலைக்குக் கிளம்பியது பப்ளிக்.

2016 டாப் 25 பரபரா

சீமானின் ‘சிரிப்புடா’

‘எளையவனே… மூத்தாருக்கு வழுக்கையா ஒரு தேசிய பானம் வெட்டு’ என இளநீர் கடைக்காரரை இதயநிறுத்தம் பண்ணியதில் தொடங்கியது சீமான் தாக்குதல். சட்டமன்றத் தேர்தலில், ‘234 தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்துறோம்... ஒரு அள்ளு அள்றோம்’ என ஸ்கெட்ச் போட்டார். ‘அண்ணா, 200 பேர்தானே இருக்கிறோம். 34 பேருக்கு எங்கே போவோம் அண்ணா?’ என தம்பிகள் கேட்க, ‘போற வழியிலே பிடித்துக் கொள்வோம்டா’ எனக் கறுப்பு காரில் கிளம்பினார் சிவகங்கை சே குவேரா. போகிற வழி எல்லாம் முன் ஸீட்டில் இருந்து பின் ஸீட்டுக்குத் திரும்பி, `நம்ம ஆட்சியிலே திருச்சி தலைநகரம், மதுரை கலைநகரம், மட்டக்களப்பு மற்றொரு நகரம். வெளங்குதுதானே!’ எனப் பேசிக்கொண்டே வர, அதை ஃபைவ் டியில் எடுத்து, இணையத்தைத் தெறிக்கவிட்டார்கள் தம்பிமார்கள். ‘மத்தியான வெயிலிலே சனம் எப்படிடா வரும்… சாயங்காலம் வரலாம். அந்த மீன் குழம்பை இரவு உணவுக்கு எடுத்துவைடா’ எனப் பின்னியெடுத்தது பிரசாரம். ‘ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என அண்ணன் விட்ட தேர்தல் அறிக்கையும் செம ஹிட். டி.வி விவாதத்தில் அருணனை ‘யோவ்… லூஸாய்யா நீ?’ என ஒரண்டை இழுக்க, அதுவும் காமெடி வைரல்.

2016 டாப் 25 பரபரா

வைகோ... 2.0 தந்திரன்!

‘கொடி பறக்குதா… கொடி பறக்குதா…’ என வருடம் முழுக்க பார்ட்டி கொந்தளித்துத் திரிய, ‘கொடிலாம் பறக்கலை… அடி கருகுது பாருங்க’ என டென்ஷனானது மிச்சசொச்சக் கட்சி. ‘வி கேன் சேஞ்ச்’ எனத் தேர்தலுக்கு மக்கள் நலக் கூட்டணி கட்டினார். முறுக்கு மீசை திருமா, மூக்குமுட்டி முத்தரசன், ஃபுல் ஷேவிங் ஜி.ஆர் என செம காம்பினேஷன் சிக்க, ‘ஸ்டார்ட் ம்யூஜிக்’ எனக் கிளம்பினார் வைக்ஸ். ‘தலைவா... உன் காலடியில் எத்தனையோ மணிவிளக்கு…’ என விஜயகாந்த்தைத் தேடிப் போக, ‘மக்க கலங்குதப்பா... மடி புடிச்சு இழுக்குதப்பா…’ என பின்னாலேயே மாலை கட்டிப் போனது திருமா அண்ட் கோ. கேப்டனும் வாசனும் வந்து சிக்க, கலவர ஃபார்முக்குப் போனார் கலிங்கப்பட்டியார். `72-லே… அண்ணா சாலையிலே…’ என ஸ்டேஜுக்கு ஸ்டேஜ் தலைவன் தம் கட்ட, கூட்டாளிகள் ஸ்டேஜிலேயே கோமா ஸ்டேஜுக்குப் போனார்கள். கடைசி நேரத்தில் கோவில்பட்டியில் பேக்கடிக்க, அதுவும் சூது. தேர்தலில் ம.ந.கூ வாஷ்அவுட் ஆக, ‘தி.மு.க ஆட்சிக்கு வரலைல்ல… அதான் என் ராஜதந்திரம்’ என்றார். ஃபர்ஸ்ட் ஆஃப்ல காமெடியன், செகண்ட் ஹாஃப்ல வில்லன் என அது புது ட்விஸ்ட். ‘கொண்டுபோய் செஞ்சுட்டாப்ல…’ எனக் கிறுகிறுத்தது கேப்டன் கூடாரம். கொஞ்ச நாளைக்கு பச்சை முண்டாசுக் கட்டி அலைந்தது சைடு டிஷ் காமெடி. கலைஞரை சாதி சொல்லிக் கலாய்த்து, பிறகு மன்னிப்பு கேட்டது மெயின் டிஷ் காமெடி. அம்மாவைப் பார்க்க அப்போலோ போய், ‘லண்டன் டாக்டர் விசிட்டிங் கார்டு குடுத்தாரு’ என்றது, காவேரி ஆஸ்பத்திரி முன்பு வலுவாக சிக்கியது… அத்தனையும் வண்டு முருகன் காமெடிகள்.

2016 டாப் 25 பரபரா

கிக்கிக்கி மொழி!

`நிம்டா... போஸ்ரா... கோஸ்ராஸ் தெல்மீ... உன்னா கஸ்ட்ட்டாக்க்க்...’ என்ற `பாகுபலி’ மொழியை எல்லாம் லெஃப்ட்டில் அடித்தது கேப்டன் லாங்வேஜ். தி.மு.க-வுக்குப் பழத்தை உருட்டி உருட்டி விளையாடி, மடாரென ம.ந.கூ-வில் முதலமைச்சர் வேட்பாளர் ஆனது சிரிப்பு ட்விஸ்ட். அப்புறம் மேடைக்கு மேடை அவர் அடித்தது எல்லாம் கோழிக்கறி காமெடி. ‘என்ன... வொயர் எல்லாம் வந்து மாட்டுது மக்கழே!’ எனக் கொழகொழத்தார். ‘ழேய்... யார்றா அங்கே? இருக்கிறவன் எல்லாம் சொம்பைகளா?’ என வெளுவெளுத்தார். பொசுக்கென கண்ணீர்விட்டுக் கரகரத்தார். ‘கிங்கா... கிங் மேக்கரா சொல்லுங்க மக்களே!’ என பிரேமலதா அண்ணியார் கேட்க, ‘சில்ல்லுனு ஒரு கிங் ஃபிஷர் தலைவா…’ எனக் கூறி, உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடம் வழங்கினார்கள் மாண்புமிகு மக்கழ். 

2016 டாப் 25 பரபரா

முக்குக்கு முக்கு முதலமைச்சர் வேட்பாளர்... முடியலை!

‘முடியட்டும் விடியட்டும்’ எனக் கிளம்பினார் மு.க.ஸ்டாலின். ‘மொதல்ல உங்க அப்பாவோட சி.எம் ஆசை முடியட்டும். அப்புறம்தான் உங்களுக்கு விடியும்’ எனக் கடுப்பானார்கள் எடுப்புகள். ‘முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான். ஆனா, முதலமைச்சர் நான்தான்’ எனக் கலைஞர் வேலையைக் காட்ட, பேராசிரியரிடம் குமுறிவிட்டு பேன்டை மாட்டிக்கொண்டு கிளம்பினார் தளபதி. போற இடத்தில் எல்லாம் அவர், ‘புலவர் சொன்னதும் பொய்யே… பொய்யே...’ எனப் பாட, ‘உங்களை பி.எம்-கூட ஆக்குறோம். பாடாதீங்க தளபதி’ என எகிறியது ஏரியா. ஒரு டஜன் ஏ.சி-க்களை வைத்துக்​கொண்டு மேடையில் ஜெயலலிதா தனியாக உட்கார, கீழே வேட்பாளர்கள் நின்றது எல்லாம் அவல நகைச்சுவை. `அன்புமணியாகிய நான்...’ என மாம்பழ ஏரியா மஞ்சள் நோட்டீஸ் ஒட்டியதுதான் மகாமெகா காமெடி. ‘முதல் நாள் முதல் கையெழுத்து’ என சி.எம் கனவிலேயே அன்பு அலைய, ரூம் போட்டுச் சிரித்தார்கள் மக்கள். ‘முதலமைச்சர்னா… ஹரியானாவா இருந்தாலும் ஓக்கே, பீகாரா இருந்தாலும் ஓக்கே மக்கழே…’ என சுழற்றியடித்த விஜயகாந்த், ‘தள்ளு தள்ளு… நாளைய முதலமைச்சர் வர்றாரு’ என ஜிம்பாய்ஸ்களோடு பில்டப் கொடுத்த சீமான் என எல்லாமே ‘என்னமோ போடா மாதவா.’  

2016 டாப் 25 பரபரா

சசிகலா புஷ்பாக்கா…  2016-ம் ஆண்டின் சொர்ணாக்கா!

வகைதொகை இல்லாமல் அதிரடிகளை அள்ளிப்போட்டார் சசிகலா புஷ்பா. தலைநகரத்தில் இருந்தபடி கலவரங்களைக் கிளப்பியதில் இவருக்கே முதல் இடம். வாட்ஸ்அப் ஆடியோ, மழை டான்ஸ், பைக் ரைடு என, தினம் தினம் பதறவைத்தன ஒவ்வொன்றும். இந்த வருடம் திருச்சி சிவாவுடன் இவர் இருந்த போட்டோக்கள் ரிலீஸாக, `அது போட்டோஷாப்’ எனக் கதறினார்கள். கேப்பே விடாமல் டெல்லி ஏர்போர்ட்டில் சிவாவை எகிறி அறைய, மறுபடி பத்திக்கிச்சு. கார்டனுக்குக் கூப்பிட்டு ஒரு காட்டு காட்ட, பார்லிமென்ட்டையே அலறவைத்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘சசிகலா கட்சியைக் கைப்பற்றப் பார்க்கிறார். விட மாட்டேன் நான்…’ என இவர் கேஸ் போட, சசிகலா வெர்சஸ் சசிகலா செம பப்ளிசிட்டி. அப்புறம் ஆ.வி., ஜூ.வி., டி.வி எல்லாம் புஷ்பாக்காதான்.

2016 டாப் 25 பரபரா

தெறி பாட்டி!

ஆக்சுவலி கஸ்தூரி பாட்டி, சினிமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். தேர்தல் விளம்பரத்துக்காக தி.மு.க குரூப் கொண்டுபோய், ‘வானத்துல பறக்கிறவங்களுக்கு நம்ம கஷ்டம் எப்படிப் புரியும்? போதும்ம்மா… முடியட்டும் உங்க ஆட்சி’ எனக் கோப ஆக்ட் கொடுக்கவைத்தார்கள். மேட்டர் தெரியாமல் அடுத்த நாளே அ.தி.மு.க பார்ட்டிகள் தூக்கிப் போய், ‘பெத்தபுள்ளகூட சோறு போடலை. எனக்கு சோறு போட்ட தெய்வம் புர்ச்சித் தல்வி அம்மாதான்’ எனக் கதறவைத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களும் வர, ‘என்னங்க சார்... ஒங்க திட்டம்?’ எனக் கொந்தளித்தது ஏரியா. ‘அவங்க 1,000 குடுத்தாங்க... இவங்க 1,500 குடுத்தாங்கப்பா…’ என பாட்டி கையெடுத்துக் கும்பிட, ‘எங்களுக்கும் அப்படித்தான்!’ எனக் காசுக்கு ஓட்டைக் குத்திவிட்டு `மகிழ்ச்சி’ என சூப்பர் சிங்கர் பார்க்கப் போனது பொதுஜனம்.

2016 டாப் 25 பரபரா

சபையக் கூட்றோம்... படத்த ஓட்றோம்!

‘யாருய்யா அந்த மூணு பேரு… எனக்கே பார்க்கணும்போல இருக்கே!’ என வார்னர் பிரதர்ஸில் இருந்து ஆள் அனுப்பும் அளவுக்கு அத்தனை படங்களிலும் சிரிப்ஸ் காட்டினார்கள் இந்த பாய்ஸ். ‘கேமரா இல்லாமக்கூட ஷூட்டிங் கிளம்பலாம். ஆனா,  மொட்டை ராஜேந்திரனும் யோகிபாபுவும் ரோபோ சங்கரும் இல்லாமக் கிளம்ப முடியாது’ என புது ரூல் போட்டது கோடம்பாக்கம். வெளியாகும் பேய் படங்களில் எல்லாம் பேய் இருக்கோ இல்லையோ... இவர்கள் இருந்தார்கள். அதுவும் ஸ்க்ரீனில் மொட்டை ராஜேந்திரன் வந்தாலே, யூத்துகள் அப்ளாஸ் அள்ளியது. கரகரக் குரலில் ஸ்பூஃப் டயலாக்ஸ் பேசிப் பின்னியெடுத்தார். பம்பத் தலையும் பக்கா கலாசலுமாக யோகிபாபு செம ஸ்கோர் அடித்தார். ரோபோ சங்கர் மிமிக்ரி, மோனோ ஆக்டிங் டான்ஸ் எனக் கலந்துகட்டிக் கலங்கடித்தார். அஜித், விஜய் படங்களில் இருந்து உப்புமா படங்கள் வரை அத்தனையிலும் இவர்கள் வந்து வந்து லந்தடிக்க, கெக்கேபிக்கேலாகின தியேட்டர்கள்.

2016 டாப் 25 பரபரா

சதுரங்க வேட்டை... செம சேஸிங்!

‘நான் சூசைட் பண்ணிக்கப்போறேன்... நான் சூசைட் பண்ணிக்கப்போறேன்’ என எழுதி வைத்துவிட்டு ‘வேந்தர் மூவீஸ்’ மதன் எஸ்கேப்பாக, பரபரத்தது மீடியா. மெடிக்கல் ஸீட் மீடியேட்டராகப் பல கோடிகளைப் பதம் பார்த்த பார்ட்டியை வலைவீசித் தேடியது போலீஸ். ஃபேன்ல தொங்கிருப்பாரோ, ஆத்துல முங்கிருப்பாரோ என ஆளாளுக்கு யோசிக்க, வாரணாசி, கோவா, மேகாலயா என ஜாலி டூரில் இருந்தார் மாப்ளே. இன்டர் கட்டில் இது சம்பந்தமாக ஐ.ஜே.கே தலைவர் பச்சமுத்துவை காக்கிகள் விசாரிக்க, வேந்தருக்கே வேர்த்தது. இந்தக் களேபரங்களுக்கு நடுவே கீதாஞ்சலியோடு பிக்னிக், நிஷாவோடு டேட்டிங் என சாங் மான்டேஜ் கட் பண்ணிக்​கொண்டிருந்தார் மதன். கடைசியாக திருப்பூர் சிநேகிதி வீட்டுப் பாதாள ரூமில் பதுங்கி இருந்தவரை, ‘பெரிய பின்லேடன்… வாடா’ என பொடங்கையில் போட்டுத் தூக்கியது போலீஸ். ‘புது 2,000 நோட்டாவே சில கோடிங்க வெச்சிருந்தாப்ல’ என நியூஸ் வர, ‘எங்க கார்டுக்கு மட்டும் ஒரு நோட்டுக்கு மேல வர மாட்டுதேடா!’ எனக் கொலவெறியானார்கள் மக்கள்.

2016 டாப் 25 பரபரா

காமெடி காம்ரேட்!

‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...’ ரிங்டோனை உடனடியாக மாற்றி, ‘சின்னம்மா என்றழைக்காத தா.பா இல்லையே’ என செட் பண்ணினார் தோழர். அம்மா விசுவாசத்தில் பன்னீருக்கே தண்ணி காட்டிய தாப்ஸ், சேப்புக் கட்சியிலேயே ஸ்லீப்பர் செல்லாக இருந்தார். மக்கள் நலக் கூட்டணியில் அவனவன் தலை காய்ந்து அலைய, இவர் மட்டும் ஃபுல் ஏ.சி-யிலேயே இருந்தார். தேர்தலில் கூட்டணி குடை சாய, ‘நாங்க கூப்பிட்ட இடத்துக்கு வந்திருக்கலாம்ல…’ எனத் தோழர்களை வெறுப்பேற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘கட்சில எவனுக்குமே இல்லாத ஒரு கெட்ட பழக்கம் எனக்கு இருக்கு’ என இம்மிடியேட்டாகக் கிளம்பி கார்டன் போனவர், ‘கும்புடுறேன் சின்னம்மா’ என சரண்டரானார்’. `சின்ன அம்மாவுக்குப் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது’ என ஆவேசப் பேட்டி வேறு தட்ட, ‘வேட்டியக் கட்டு பெரியப்பு…’ எனக் கடுப்பானார்கள் காம்ரேட்ஸ்.

2016 டாப் 25 பரபரா

ஆதீனம் எண் 289!

மதுரை ஆதீனம்… அதே ஆசீர்வாதம், அதே அலப்பறை, அதே காமெடி.

வழக்கமாக மடத்தில் இருந்தே அரசியல் பண்ணும் ஆதீனம், இந்த முறை தெருவுக்கு வந்து அ.தி.மு.க பிரசாரத்தில் இறங்கினார்.  ‘மானம் அவமானத்தைப் பார்த்தால் மக்கள் பணி பண்ண முடியுமா?’ எனப் பிரசார மேடையில் பேச, ‘ஆமா சாமி… ஆமா சாமி…’ என ஜாலியானது கூட்டம். ‘கடவுள்தான் திருப்பரங்குன்றம் வேட்பாளராக ஏ.கே.போஸ் பெயரை அம்மாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்’ என அடுத்த பிட்டைப் போட, ‘போடு சாமி… போடு சாமி’ எனத் திகுதிகுத்தது. ` ‘ஆல் மணி பிராப்ளம் ஜனவரில சால்வ்டு’னு சிவன் கனவுல சொல்லிட்டாரு’ எனப் போட, ‘கெளப்பு சாமி… கெளப்பு சாமி’ எனக் கலகலத்தது. ‘திருஞானசம்பந்தர் சைவம் வளர்க்க ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்துக்கு 289-வது ஆதீனமாக வந்த  அருணகிரிநாதர் அந்தக் காலத்து சினிமா நிருபர். அதனாலேயே சினிமா விழாக்களில் எல்லாம் சிறப்பு சேர்த்தார். கூடவே இப்தார் விருந்தில் கஞ்சி குடித்தார். அதனால ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குகிறோம்….’ என இந்து அமைப்புகள் கொளுத்திப்போட, ‘போங்க ராஸ்கேல்ஸ்…’ என கியர் போட்டு போய்க்கொண்டே இருந்தது சாமி.

2016 டாப் 25 பரபரா

சின்னம்மா... காமெடி ட்ராஜடி!

‘அம்மா… அம்மா…’ என அலகு குத்திய அத்தனை பயலுகளும் ஓவர்நைட்டில் ‘சின்னம்மா… சின்னம்மா…’ எனத் தீச்சட்டி தூக்க ஆரம்பித்தார்கள். அம்மாவைக் கண்டாலே அத்தனை ஆசனங்களும் போடும் அமைச்சர்கள், இனிமேல் திருந்துவார்கள் என நினைத்தோம். ‘அப்படி எல்லாம் மானம் ரோஷம் வந்திருமா…’ என ‘சசிகலா பணிவு ஜிம்’மைத் தொடங்கி பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தார் பன்னீர். ‘புதுச் செயலாளரா வாங்கம்மா…’ என தம்பிதுரை, செங்கோட்டையன் எல்லாம் புரண்டு வர, ‘முதலமைச்சரா வாங்கம்மா…’ என பொன்னையன், வளர்மதி எல்லோரும் உருண்டு வர… ‘காலைக் காட்டுங்கம்மா… காலைக் காட்டுங்கம்மா…’ எனக் கொள்ளப் பேர் திரண்டு வர… அம்புட்டும் காமெடி. கிழக்கு பார்க்க நின்ற மகாதேவன், தெக்கால நின்ற திவாகரன், தலைமாட்டில் நின்ற பாஸ்கரன்… எவன் எப்போ வருவானோ என மக்கள் திகிலடித்துக் கிடக்க, அத்தனை ஃப்ளெக்ஸ் களிலும் சிரிக்கிறார் சின்னம்மா. ஜெயா டி.வி-யைத் திருப்பினாலே ‘சின்னம்மா... சின்னம்மா…’ எனக் காதில் கடப்பாறையை விடுகிறார்கள். `நீங்க பீச்சுல மொட்டை அடிங்க, மன்னார்குடியில வெள்ளை அடிங்க, எங்க வயித்துல அடிக்காதீங்கடா சாமிகளா!’ என ஏ.டி.எம் க்யூவில் நின்றபடியே புலம்புகிறான் தமிழன்.

2016 டாப் 25 பரபரா

ரெய்டு ரெங்குடு! 

நம் கைகளில் இல்லாத 2,000 ரூபாய்த் தாள்களைக் கட்டுக்கட்டாகக் காண நேர்ந்தால் யாருக்குத்தான் காண்டாகாது. ரெய்டுவிட்ட இடங்களில் எல்லாம் அதுதான் கிடைத்தது. ஆளை அசைத்துப்பார்க்க அடிக்கடி ரெய்டுவிட்டு அலறவிடுவதுதான் இந்த ஆண்டின் அசால்ட் பாலிடிக்ஸ். தேர்தல் நேரத்தில் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு உற்சவம், தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு வரைக்கும் கன்டினியூ ஆனது. `ரெய்டுவிட்ட வீடு முழுவதும் கட்டிக்கட்டியாகத் தங்கம், கெட்டிக்கெட்டியாக புத்தம் புது 2,000 ரூபாய்த் தாள்கள்’ என பொதுஜனத்தின் மனசாட்சியில் முரட்டுக் குத்து குத்தின ரெய்டு செய்திகள். `படிச்சவங்க ஊழல் பண்ண மாட்டாய்ங்கனு இனி யாராச்சும் சொன்னீங்க... வாய்ல கத்திய வுட்டு ஆட்டிடுவேன்’ என்று மக்கள் கொந்தளிக்க... இன்னொரு பக்கம் `இதெல்லாம் எதுக்குத் தெரியுமா? மத்திய அரசு மாநில அரசைக் கட்டுப்படுத்த பண்ற டெக்னிக்கு’ என அரசியல் பேசி அலறவிட்டது அறிவுஜீவிகள் வட்டாரம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.