News
Loading...

இளம் தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்!

இளம் தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்!

நீங்கள் தொழில்முனைவோர் என்பதை இன்னும் நீங்களே உணரவில்லை ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணவோ அல்லது ஒரு சவாலை எதிர்கொள்ளவோ புதிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை நீங்கள் கண்டறிந்தால் தொழில்முனைவோராக இருப்பதற்கான திறன் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

“நாமே நம்முடைய முதலாளியாக இருக்கலாம்” என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால் அந்த திசையை நோக்கி ஏற்கெனவே அடியெடுத்து வைத்துவிட்டீர்கள் எனலாம். தொழில்முனைவிற்காக தயாராகி நிபுணத்துவம் பெற நேரம் செலவிடவும், எண்ணங்களை பரீசிலிக்கவும், மக்களுடன் ஒருங்கிணையவும் அனைவரும் உங்களை வலியுறுத்துவார்கள். எனினும் நீங்கள் ஒரு நிறுவனத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்த பின்னரே உண்மையான சவால் தொடங்குகிறது.

செயல்முறைகளை அமைப்பது, சந்தையை புரிந்துகொள்வது, குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது, துணிந்து செயல்பட முற்படுவது, நீங்கள் எதிர்பார்த்திராத பல விஷயங்களைச் செய்வது என்று இறுதியில் மேலும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சவால் விட்டுக்கொள்வீர்கள்.

தங்களை மேம்படுத்திக் கொண்டிருப்பவர்கள், கனவுகளை மெய்பிக்க போராடுபவர்கள், தங்களது நோக்கத்திற்காகவும் மாற்றத்திற்காகவும் உழைக்கும் இளம் தொழில்முனைவோருக்கு சில குறிப்புகளை பட்டியலிட்டுள்ளேன்.

புதிய முயற்சியை தொடங்குவது களிப்பூட்டும் விஷயம். ஆனால் தொழிலில் முன்னேறும்போது பல வெற்றிபெற்ற தொழில்முனைவோர் கூட குழப்பமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை தவிர்ப்பது சாத்தியமற்றதாகும். ஆனால் நீங்கள் அவற்றை கடந்து செல்ல இந்த குறிப்புகள் உதவும்..

எதிர்பார்ப்புகளுக்கு அப்பால்

வாடிக்கையாளார்கள், முதலீட்டாளர்கள், ஊழியர்கள் போன்றோரை கவரவேண்டும். உங்களால் நிச்சயம் செய்ய முடியாது என்று தெரிந்த விஷயங்களைச் செய்துமுடிப்பதாக வாக்குறுதி அளிக்காதீர்கள். ஏனெனில் உங்கள் வார்த்தைதான் உங்களது அடையாளம். உங்கள் நிறுவனத்தை விவரிக்கையில் 'மிகப்பெரிய', 'அதிவேகமான', 'மிகச்சிறந்த' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தத் தோன்றும். ஆனால் அப்படிப்பட்ட வார்த்தை உண்மையாக பொருந்தாத நிலையில் அவற்றை பயன்படுத்தவேண்டாம். 

உதவி தேடுங்கள்

ஒருவரின் குழு அதன் தலைவரை பிரதிபலிக்கிறது. தொழில்முனைவோரான நீங்கள் அனைத்து வேலையும் முழுமையாக நிறைவடைவதை உறுதிசெய்யவேண்டும். அதற்காக நீங்களே அனைத்து வேலையையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இவற்றை நினைவில் கொள்க. பொதுவாக ஒருவரிடம் உதவி கேட்டோமானால் அது அவரது அறியாமையைக் குறிக்கும். ஆனால் விளக்கங்கள், தகவல்கள் போன்றவற்றை நிபுணர்களிடமும், வழிகாட்டிகளிடமும் குழுவினரிடமும் கேட்டு தெரிந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆழ்ந்த அறிவு கிடைக்கும். 

நீங்கள் பணிபுரியும் துறையைப் பற்றி நன்கறிந்த நம்பகமான வழிகாட்டியை கண்டறியுங்கள். நிதி விவரங்களை கவனித்துக் கொள்ள தனி குழுவை அமைத்திடுங்கள். எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருங்கள் முதலில் உருவாக்கிய யோசனை, கோட்பாடுகள், அணுகுமுறை, பார்ட்னர், மாடல் போன்ற அம்சங்களை நேரடியாக சோதனை செய்தபின் அதில் மாற்றம் தேவைப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். பெரிய அளவிலான ஆபத்துகள் ஏற்படாதவரை ஆய்வு செய்வதில் தவறில்லை.

செலவுகள் அதிகரிக்காதவரை ஆய்வுகள் மூலம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் போன்றோர் அளிக்கும் பரிந்துரைகளை வரவேற்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு இக்கட்டான விமர்சனத்தை யாராவது வெளிப்படுத்துகையில் “இது என் நிறுவனம். எனக்குத் தெரியும்” என்று எளிதாக தற்காத்துக்கொள்ளலாம். ஆனால் விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக்கொண்டால் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

போர்க்களத்தை தேர்ந்தெடுங்கள்

உங்களது இலக்கை தீர்மானித்ததும் எதிர்த்து சண்டையிட தகுந்த போர்க்களத்தை தேர்ந்தெடுங்கள். சின்னச்சின்ன நடைமுறை சவால்களுக்கு தூக்கமின்றி வருந்துவதற்கு மாறாக உங்களது நோக்கத்தை நிறைவேற்ற உதவும் முக்கிய உந்துசக்தியை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் பார்வை உங்களுடைய பார்வையிலிருந்து வேறுபட்டிருக்கும். உங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்களைத் தேடிப் பிடித்து அவர்களை திருப்திப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

பொறுமையாக இருங்கள்

ஸ்டார்ட் அப்கள் தோல்வியடைவதில்லை. அதன் நிறுவனர்கள் மனமுடைந்து போவதனால்தான் அவை அழிந்துவிடுகிறது. நீங்களும் உங்களது யோசனைகளும் தெளிவு பெற கால அவகாசம் அளியுங்கள். எவ்வளவு பெரிய தடங்கல்களாக இருந்தாலும் ஒரே நாளில் உருவாவதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் அடிமட்டத்திலிருந்து துவங்கும்போது கால அவகாசம் தேவைப்படும். போராட்டங்கள் பன்மடங்காகும். இவை செயல்முறையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். 

மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறையை கண்டறியுங்கள்

நீங்களே அனைத்து பணிகளையும் செய்து முடிக்கப் போவதில்லை. இருந்தும் அது குறித்து தொடர்ந்து கவலையுடன் இருப்பீர்கள் அல்லவா? அனைத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க நினைக்கையில் எதிர்பார்த்தைவிட அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் வகுத்த பாதையிலிருந்து மாறாமல் இருக்க சில நேரங்களில் அனைத்திலிருந்தும் எப்படி விடுபட்டு உங்களுக்கான பிரத்யேக நேரத்தை செலவிடவேண்டும் என்று சிந்தியுங்கள். இப்படி சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு அதிகம் வருந்தி அதனுள் மூழ்கிவிட்டால் மிகப்பெரிய சாதனைகளை அடைவது தடைபட்டுவிடும். 

திட்டமிடல் – மறுஆய்வு – திரும்பச்செய்தல்

ஒரு நிறுவனத்தை நடத்துகையில் பல சவால்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேரும். இதிலிருந்து விடுபட சிறிய மற்றும் பெரிய அளவிலான திட்டமிடல் அவசியம். அதே போல் அவற்றை முறையான கால இடைவெளியில் மறு ஆய்வு செய்வதும் அவசியம். அதுமட்டுமல்லாமல் மற்றவரையும் இந்த மறு ஆய்வில் இணைப்பதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் உங்களது செயல்திறன் சிறப்பாக உள்ளதெனவும் எந்தெந்த பகுதிகளில் கவனம் செலுத்தி மேலும் கடுமையாக உழைக்கவேண்டுமெனவும் தெரிந்துகொள்ளலாம். உங்களது ஆற்றலை எவ்வாறு நிர்வகிப்பது என்று தெரிந்துகொண்டீர்களானால் நேரத்தை நிர்வகிப்பது தானாகவே சீரடையும். கடுமையாக உழைக்க பயப்படவேண்டாம். உங்களது படைப்பாற்றல் எந்த நேரத்தில் அதிகமாக உள்ளதென்று கண்டறிந்து அந்த நேரத்தை பயன்படுத்துங்கள். அதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் குழுவைச் சேர்ந்த அனைவரும் விரும்பி ஒன்றாக செயல்பட வலியுறுத்துங்கள். அவர்களை உங்கள் கவனம் சிதறுவதற்கு காரணமாக்காமல் உங்கள் பணிக்கு துணை நிற்பவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள். பணிவுடன் இருங்கள். உங்கள் அணுகுமுறையை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளுங்கள். எப்படிப்பட்ட சூழலிலும் மனம் தளர்ந்து போகாதீர்கள். விமர்சகர்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆனால் அவர்களின் விமர்சனங்களிலும் கருத்துகளிலும் கவனம் செலுத்துங்கள்.

உங்களால் மற்றவர்களுக்காக பணிபுரிய முடியாது என்பதற்காகவோ, 25 வயதிலேயே பெரிய மில்லியனராக வேண்டும் என்பதற்காகவோ, ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுவதைவிட ஸ்டார்ட் அப்பை நடத்துவது வேடிக்கையாக இருக்கும் என்பதற்காகவோ அல்லது எல்லோரையும் விட தனித்து தெரியவேண்டும் என்பதற்காகவோ தொழில்முனைவோராக இருக்கவேண்டாம்.

ஒரு திடமான திட்டமிடுதல் இல்லாமல், சரியான நேரம் வராமல் நீங்கள் தொழில்முனைவோராக அவசரப்படக்கூடாது. இன்று பல இளம் தொழில்முனைவோர் தங்களது முயற்சி புதுமையானது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் வேறு ஒருவரது யோசனையைத்தான் மற்றொருவர் ஏற்கெனவே பின்பற்றிய வழியைத்தான் தாமும் பின்பற்றிவருகிறோம் என்பதை பலர் உணர்வதில்லை. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.