News
Loading...

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

மிழகத்துக்கு இது ஒரு ‘சோதனை’ காலம். ஆம்... வருமான வரித்துறையின் சோதனைக் காலம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய இந்தச் சோதனை, இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையையே அதிரவைத்திருக்கிறது.

அசால்ட் அன்புநாதன்!

‘இந்தப் பணம் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமானது. அவரது மகன் அமர்நாத் மூலம் அன்புநாதனுக்கு வந்தது’ என வருமான வரித்துறை அறிவித்தது. கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்புக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விசுவநாதனை நீக்கம் செய்வதாக அறிவித்தார் ஜெயலலிதா. இந்தப் பிரச்னையில் அன்புநாதன் மீது, அடுத்தடுத்து வருமான வரித்துறை மற்றும் காவல் துறையினர் வழக்குகள் பதிவுசெய்தனர். அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோது, தனது டிரைவருடன் தாய்லாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். ஆனால், கரூரில் வருமான வரித்துறையினரும் போலீஸாரும் அன்புநாதனைத் தேடி தவமிருந்தார்கள். மாதங்கள் கடந்தன. கடந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த அன்புநாதன், ‘செந்தில் பாலாஜியே வெற்றிபெறுவார்’ என பேட்டியெல்லாம் கொடுத்தார். முதன்முதலில் போலீஸும் அதிகாரிகளும் வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்தபோது, ‘சார், இதெல்லாம் சர்வ சாதாரணம்’ என்ற அன்புநாதன், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

நத்தம் விசுவநாதன் நடுக்கம்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, அ.தி.மு.க-வை தனது அசைவுக்கு ஏற்ப ஆடவைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது பி.ஜே.பி. 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, ஓரங்கட்டப்பட்ட ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகிய ஐவர் கூட்டணியிடம் இருந்து அ.தி.மு.க மேலிடம் 30 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றியிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உஷாரான மத்திய அரசு, உளவுத்துறையை முடுக்கிவிட்டு, இவர்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்துக்கொண்டது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஜி.எஸ்.டி மசோதாவில் தமிழக அரசு தனக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நினைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, அ.தி.மு.க-வின் செயல்பாடு அமைந்ததால் அதிருப்தி அடைந்தது பி.ஜே.பி தலைமை. அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீடு, சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வீடு, கீர்த்திலால் ஜுவல்லரி உள்ளிட்ட 40 இடங்களில் ரெய்டு நடந்தது.

ஐவர் அணியில் நத்தம் விசுவநாதனைத் தவிர மற்ற நான்கு பேர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில், விசுவநாதன் விஷயத்தில் மட்டும் ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை கடைசிவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. இதற்குப் பின்னணியில் சசிகலா இருந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதானி குழுமத்தினருடனான வியாபாரத்தொடர்புதான் சசிகலாவின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். இந்த நிலையில்தான், விசுவநாதன் வீடு மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நான்கு நாட்கள் இரவு பகலாக நடந்த இந்த சோதனையில் 65 லட்ச ரூபாய் பணமும், பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆதாரங்களும் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டன. இதில், பினாமி பெயர்களில் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கங்கள், சரக்குக் கப்பல்கள், நியூயார்க்கில் 386 கோடி ரூபாயில் ஹோட்டல், லண்டன் ஓக்லி பிராப்பர்டி சர்வீஸில் 400 கோடி ரூபாய் முதலீடு, மலேசியா மற்றும் சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு, நத்தத்தில் தனியார் கல்லூரியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைத்தது என பல்வேறு ஆவணங்களும் அடக்கம்.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

செப்டம்பர் 17-ம் தேதி, விசுவநாதனின் சென்னை வீட்டுக்கு வந்த அமலாக்கப் பிரிவினர், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள். இதனால், ‘விசுவநாதன் கைது’ என மீடியாவில் செய்தி பரவியதும், ‘நான் கைது செய்யப்படவில்லை’ என வாய்ஸ் கொடுத்தார் விசுவநாதன். அவர் மீதான விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகரும் நேரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தனது பிடியைக் கொஞ்சம் தளர்த்தியது. அதற்கு விசுவாசமாக பி.ஜே.பி-யினருடனான தனது நட்பை வளர்த்துக்கொண்டார் விசுவநாதன். ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணனுடன் விசுவநாதன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகரிக்கப் போவதை உணர்ந்துகொண்டதால், ‘விசுவநாதன் தனது ஆதரவாளர்களுடன் பி.ஜே.பி-யில் இணையப் போகிறார்’ எனவும் ஒரு தகவல் உலவியது. இந்த நிலையில், சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க-வினர் தீர்மானம் நிறைவேற்றி, அதை போயஸ் கார்டனில் சசிகலாவிடம் டிசம்பர் 19-ம் தேதி கொடுத்தனர். அப்போது கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துகொண்ட விசுவநாதன் வெளியே வந்தவுடன் சூட்டோடு சூடாக, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேட்டியளித்தார். சசிகலாவை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க விசுவநாதன் செய்யும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

எடப்பாடிக்கு வந்த சிக்கல்

கடந்த நவம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக விளங்கிய நெடுஞ்சாலைத் துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைப் பொறியாளர் ஜெயராமன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, கட்டுக்கட்டாக 50 லட்சம் ரொக்கப் பணத்தையும் ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். இது அமைச்சரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடுத்த அதிர்ச்சியாக, அமைச்சரின் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்தின் வீட்டில் கர்நாடக மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியது அமைச்சரை நிலைகுலைய வைத்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில், வாகன சோதனையின்போது 35 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் சிக்கியன. விசாரணையில், கர்நாடக காவிரி நீர்ப்பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிக்கராயப்பாவுக்கும், கர்நாடக மாநில நெடுஞ்சாலைத் துறை தலைமைத் திட்ட அதிகாரி ஜெயசந்திராவுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வீடு, மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. 

இதில், சிக்கராயப்பா மற்றும் ஜெயசந்திரா வீடுகளில் இருந்து 9 கிலோ தங்கக் கட்டிகள், 7 கிலோ தங்க ஆபரணங்கள், 5.7 கோடி ரொக்கப் பணம், விலை உயர்ந்த கார்கள் மற்றும் சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்கள் உட்பட கணக்கில் வராத 152 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சிக்கராயப்பா, ஜெயசந்திரா இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும், இந்த சொத்துகள் மற்றும் பணம் ஈரோட்டைச் சேர்ந்த என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் கம்பெனியின் உரிமையாளர் சிபி சக்ரவர்த்தியும் கொடுத்திருந்தது தெரியவந்தது.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

கர்நாடக மாநிலத்தில் கான்ட்ராக்ட் பணி செய்துவரும் நிறுவனம்தான் கண்ணன் போர்வெல்ஸ். சிபி சக்ரவர்த்தியின் பூர்விகம் நாமக்கல் மாவட்டம். கான்ட்ராக்டரான சிபி சக்ரவர்த்தி, கர்நாடக காவிரி நீர்ப்பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிக்கராயப்பாவுக்கு நெருங்கிய நட்பில் இருந்தார்.

அதே போல என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் கர்நாடகாவில், 3,600 கிலோ மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலையைப் புனரமைக்கும் பணிகளை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்கத்துக்கும் கர்நாடக நெடுஞ்சாலைத் துறை தலைமைத் திட்ட அதிகாரி ஜெயசந்திராவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கறுப்புப் பண விவகாரத்தில் சிபி சக்ரவர்த்தியைவிட என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கத்தின் பங்களிப்பே மிக மிக அதிகம். 5.4 கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் ராமலிங்கத்தின் மூலமாகத்தான் ஈரோட்டில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற பெயரில் ஈரோட்டில் கான்ட்ராக்ட் வேலைகளைத் தொடங்கிய ராமலிங்கம், எடப்பாடி பழனிசாமியின் நட்பு கிடைத்த பிறகு தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறையில் அதிகப் பணிகளை மேற்கொண்டார்.

ராமலிங்கத்தின் இரண்டாவது மகனான சூர்யகாந்த்துக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மருமகளின் தங்கையை திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆக, அமைச்சரின் சம்பந்திக்கு சம்பந்தி என்ற நெருங்கிய உறவு முறை ஆகிறார். அதாவது, எடப்பாடி பழனிசாமியும், ராமலிங்கமும் பெருந்துறை சுப்ரமணியன் என்பவரின் வீட்டில் பெண் எடுத்திருக்கிறார்கள். இப்படி நெருங்கிய உறவினர் ஆனதும், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியாகவும் ராமலிங்கம் இருந்துவந்தார். இந்த ராமலிங்கத்தின் வீட்டில்தான் கர்நாடக வருமான வரித்துறை ரெய்டு நடத்தி இருக்கிறார்கள்.

இவரது மூத்த மகன் சந்திரகாந்த் பெங்களூரு அலுவலகத்தில் இருந்து கர்நாடகாவில் நடைபெறும் பணிகளையும், சூரியகாந்த் சென்னை அலுவலகத்தில் இருந்துகொண்டு தமிழகத்தில் நடைபெறும் பணிகளையும் கவனித்து வருகிறார்கள்.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

கர்நாடக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு நவம்பர் 30-ம் தேதி புதன்கிழமை இரவு ஈரோட்டில் உள்ள வேலாங்காட்டு வலசு கிராமத்தில் உள்ள ராமலிங்கத்தின் வீடு, ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அலுவலகம், சென்னை அலுவலகம் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டார்கள். இந்த சோதனைகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்,  ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், பேங்க் ஆஃப் கர்நாடகா மற்றும் அஞ்சலகக் கிளைகளிலும் 5.4 கோடி ரூபாய் பெற்றிருப்பது மட்டுமல்லாமல்  தமிழ்நாட்டில் உள்ள 27 வங்கிகள் மூலம் 1,150 கோடி மதிப்புக்கு 1,000, 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி இருப்பதற்கான ஆவணங்களும், பல கோடி சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஜெயராமன் வீட்டில் ரெய்டு நடந்ததை அடுத்து அமைச்சருக்குச் சொந்தமான பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவே கர்நாடக அதிகாரிகளான ஜெயசந்திரா, சிக்கராயப்பாவிடம் கொடுத்திருப்பதாகவும் நினைத்தது மத்திய பி.ஜே.பி. தலைமை. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல்வர் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க நினைத்தார் சசிகலா. ஆனால், பி.ஜே.பி தலைமையோ முதல்வர் பொறுப்பை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கவே விரும்பியதாகவும், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த சசிகலாவுக்கு செக் வைக்கவே எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இதையடுத்து கர்நாடக அதிகாரிகளான ஜெயசந்திரா, சிக்கராயப்பா, ராமலிங்கத்தின் மூத்த மகன் சந்திரகாந்த் மற்றும் அவரது நண்பர்களான நசீர் அகமத், இஸ்மாயில் போன்றோரை சி.பி.ஐ. கஸ்டடி எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது தமிழகத்தில், சேகர் ரெட்டி மற்றும் ராம மோகன ராவ் ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

இதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் பேச முயன்றோம். அவரது உதவியாளர் அருண் பேசினார், ‘‘இந்த சம்பவத்துக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமைச்சர் மீட்டிங்கில் இருப்பதால் அவரை தற்போது தொடர்புகொள்ள முடியாது’’ என்றார்.

கரூர் டு கோட்டை! - ஆக்டோபஸ் ரெய்டு... அலறும் புள்ளிகள்

சேகர் ரெட்டி – பிரேம் - விஜயபாஸ்கர் சேர்ந்தது எப்படி?

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த சேகர் ரெட்டி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சரான ஓ.பி.எஸ் மூலம் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், பாலாறு உள்ளிட்ட இடங்களில் சப்-டீலராக மணல் குவாரிகளை எடுத்துள்ளார். அதில் காசு பார்த்தவர் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தங்களையும் விடவில்லை.

அடுத்து, கடந்த 2012-ல் ஆறுமுகச்சாமியிடம் இருந்த மணல் பிசினஸ், கார்டன் சப்போர்ட்டுடன் சேகர் ரெட்டி வசம் வந்தது. உடனே சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான புதுக்கோட்டை மணல் ராமச்சந்திரன், ஓ.பி.எஸ்-ஸின் மைத்துனர் எனச் சொல்லிக்கொள்ளும் பாஸ்கர், சித்திரைவேல், கடம்பங்குறிச்சி மனோ, கரிகாலன், மெய்யர் உள்ளிட்ட பலரை அதிகார மையங்களாக உருவாக்கி அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். (மணல் ராமச்சந்திரன், மணல் மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் லோடு கிராவல் மண் எடுக்கும் வேலைகளையும் தன்வசம் வைத்துள்ளார்.) மணல் குவாரிகளில் சம்பாதிக்கும் பணத்தை சேகர் ரெட்டி ஆந்திராவில் முதலீடு செய்துள்ளார்.

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடந்தபோதே, பிரேம், மணல் ராமச்சந்திரன் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஆனால், மணல் ராமச்சந்திரன் வீட்டில் நடந்த ரெய்டு அப்படியே மறைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் உள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலின் பார்ட்னரான சேகர் ரெட்டி, அங்கு முக்கிய நபர்களை வரவழைத்து ‘கவனித்து’ அனுப்புவாராம். இந்தக் கவனிப்புகள்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டுபோனது என்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன், முதல்வரின் இரண்டாம் நிலை செயலாளராக இருந்த ராம மோகன ராவுடனும் ரெட்டிக்கு நெருக்கம் உண்டானது. அது இப்போதுவரை தொடர்கிறது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.