News
Loading...

இந்த வார ராசிபலன்! (18-12-2016 முதல் 24-12-2016 வரை)

இந்த வார ராசிபலன்! (18-12-2016 முதல் 24-12-2016 வரை)

ந்த வார ராசிபலன்! (18-12-2016 முதல் 24-12-2016 வரை)

மேஷம்:

பொது: செவ்வாய், கேது ஆகியோர் ராசிக்கு லாப ஸ்தானத்தில் உலவுவது சிறப்பாகும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு சீராக இராது. செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். மக்களால் சங்கடம் ஏற்படும். வேலையாட்களை நம்பி ஏமாற வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

நிலபுலங்கள்: வார முன்பகுதியில் சொத்துக்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: இயந்திரங்கள், எரிபொருட்கள், கட்டடப் பொருட்கள், செந்நிறப்பொருட்கள் ஆகியவை லாபம் தரும். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னைகள் சூழும். பொருளாதாரம் சம்பந்தமான தொழிலில் அதிக கவனம் தேவை.

மாதர்களுக்கு: எதிலும் விழிப்புத் தேவை. வீண்வம்பு கூடாது.

மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். குருவை வழிபடுவது நல்லது.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 21, 22.

ரிஷபம்:

பொது: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். அலைச்சல் வீண்போகாது. வாரப் பின்பகுதியில் மனத்துக்கினிய சம்பவம் நிகழும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கிலும், விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் இனிது நிறைவேறும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிகளும் ஆதரவும் பெறுவீர்கள். துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறுபலன்கள் உண்டாகும்.

நிலபுலங்கள்: புதிய சொத்துக்கள் சேரவும், சொத்துக்களால் வருவாய் பெறவும் வாய்ப்பு உண்டாகும்.

தொழில்: கலைஞர்கள் வெற்றி பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.

மாதர்களுக்கு: நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மன மகிழ்ச்சி பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பணம் வரும் தேதிகள் :டிசம்பர் 23, 24.மிதுனம்:

பொது: சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். பேச்சில் இனிமை கூடும். சிறு பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். முக்கியமான எண்ணம் ஒன்று ஈடேறும். நல்ல தகவல் கிடைக்கும். திறமை வீண்போகாது. உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். மகா கணபதியை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு அளவோடு இருக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். 

நிலபுலங்கள்: ஓரளவு லாபம் தரும். விநாயகரை வழிபடுவது நல்லது.

தொழில்: அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். திரவப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவிவரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். கல்லூரிகளில் மேற்படிப்புப் படிப்பவர்களுக்குத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும்.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 18 (முற்பகல்), 24.

கடகம்:

பொது: சூரியன், புதன் ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இதர கிரகநிலை சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடவும். வீண்வம்பு, சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகவும். நவக்கிரக வழிபாடு நலம் தரும். பராசக்தியை வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. குடும்பத்தில் கூச்சலும் குழப்பமும் உண்டாகும். தந்தையாலும், நண்பர்களாலும் ஓரளவு நலம் உண்டாகும். சகோதர நலம் பாதிக்கும். மக்களின் நடத்தையில் கவனம் தேவைப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான வழக்குகளில் ஈடுபட நேரலாம். சட்ட சிக்கல் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்: நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும்.

மாதர்களுக்கு: சங்கடங்கள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குருவுக்குப் பிரீதி செய்து கொள்ளவும்.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 19, 20, 

சிம்மம்:

பொது: குரு 2-ல் உலவுவது சிறப்பாகும். அவரது பார்வை 6, 8, 10-ஆம் இடங்களுக்குப் பதிவதும் நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி அனுகூலமாக இல்லை. என்றாலும் தெய்வ பலமும் குரு பலமும் உங்களைக் காக்கும் என்று சொல்லலாம். வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளவும். பிறரிடம் கோபப்படாமல் இருப்பது அவசியம் ஆகும். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: குரு பலத்தால் பண வரவு கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். மக்களால் மனம் மகிழ்ச்சி அடையும். குடும்பப் பெரியவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில்: ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சட்ட வல்லுனர்கள், உத்தியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கணிதத்துறையாளர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும். போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் இயந்திரப்பணியாளர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: சோதனைகள் அதிகரிக்கும். மன நிம்மதி குறையும். இறைவழிபாடு மூலம் அமைதி காணலாம்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 21, 22.

கன்னி:

பொது: செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். புதிய பொருள் சேரும். சூரியன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்களால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். உடன்பிறந்தவர்களால் நல்லதும் கெட்டதும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்புக் கூடிவரும்.

தொழில்: இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள், பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பயணம் சார்ந்த இனங்களால் அனுகூலமிராது. அரசுப்பணிகளில் கவனம் தேவை.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் கிட்டும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 23, 24.


துலாம்:

பொது: சூரியன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கு இடமிராது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். மனைவியால் நலம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். 5-ல் செவ்வாயும், கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் பாதிக்கும்.

நிலபுலங்கள்: புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். சொத்துக்களைப் பராமரித்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும்.

தொழில்: அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களது எண்ணம் ஈடேறும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பயண ஏற்பாடு, விடுதி நடத்துபவர்களுக்கு லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து கடமையாற்றுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

மாதர்களுக்கு: சுகமும் சந்தோஷமும் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் தேவை. விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும்.

பணம் வரும் தேதி: டிசம்பர் 18. 

விருச்சிகம்:

பொது: புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். சுபக் கிரகங்களின் நிலை சிறப்பாக இருப்பதால் சுப காரியங்கள் இனிது நிறைவேறும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பேச்சில் திறமை வெளிப்படும். பயணத்தால் நலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: தன யோகம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனமும் சாதுதரிசனமும் கிடைக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். என்றாலும் சிறுசிறு பிரச்னைகளும் ஏற்படும்.

தொழில்: கடல் வாணிபம் லாபம் தரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள், சட்ட வல்லுனர்கள், மேடைப் பேச்சாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: நல்ல தகவல் கிடைக்கும். அணிமணிகளும் ஆடைகளும் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.

மாணவர்களுக்கு: புதன், குரு ஆகியோரது பலத்தால் செழிப்பான சூழ்நிலை உருவாகும். 4-ல் கேது இருப்பதால் விநாயகரை வழிபடுவது நல்லது.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 18 (பிற்பகல்), 19, 20. 


தனுசு:

பொது: செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோர் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். சூரியனும் புதனும் ஜன்ம ராசியில் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். உடல் நலம் சீராக இருந்துவரும். புனிதமான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். முக வசீகரம் கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். விரயச் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: சுக்கிரன் 2-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் பண வரவு அதிகரிக்கும். கடனாகக் கேட்டிருந்த பணமும் கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்புக் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். தந்தையால் அளவோடு நலம் உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

தொழில்: கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு செழிப்புக் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். தொழிலாளர்களும் விவசாயிகளும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களால் சிக்கல் ஏற்படும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும்.

மாதர்களுக்கு: முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பொருள் வரவு கூடும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.

மாணவர்களுக்கு: தகுதிக்குரிய வளர்ச்சி காணலாம். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும்.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 21, 22. 

மகரம்:

பொது: குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தோற்றப்பொலிவு பளிச்சிடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கவனம் தேவை. உடலில் காயம்பட நேரலாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. துர்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். தந்தையால் செலவுகளும் பிரச்னைகளும் ஏற்படும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கும். என்றாலும் சொத்துக்களை வாங்கும்போது விழிப்புடன் இருக்கவும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனை தேவை.

தொழில்: கலைத்துறை ஊக்கம் தரும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காணக் குறுக்கீடுகள் முளைக்கும். பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை.

மாதர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும்.

மாணவர்களுக்கு: வாரப் பின்பகுதி நன்கு அமையும். ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 23, 24.

கும்பம்:

பொது: சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். நண்பர்கள் நலம் புரிவார்கள். வாழ்க்கை வசதிகள் கூடும். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். உழைப்புக்குரிய பயன் நிச்சயம் கிடைக்கும். எக்காரியத்தையும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்துச் செய்யவும். சுப காரியங்கள் நிகழத் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். ராகு, கேது, குரு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நலம் கவனிப்பின்பேரில் சீராகும். தந்தையால் நலம் உண்டாகும். உற்றார்-உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். புதியவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும்.

நிலபுலங்கள்: அளவோடு வருவாய் கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுப் புதியதை வாங்கும் நிலை சிலருக்கு ஏற்படும்.

தொழில்: அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம், எழுத்து, கலை சம்பந்தமான இனங்கள் ஆக்கம் தரும். இயந்திரபணியாளர்களுக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புடன் கடமையாற்றி வருவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கும் சக்தி பிறக்கும்.

மாணவர்களுக்கு: அறிவாற்றல்பளிச்சிடும். ஆசிரியரிடம் பணிவு தேவை.

பணம் வரும் தேதி: டிசம்பர் 18.

மீனம்:

பொது: சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பயணம் பயன்படும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். செவ்வாய்க்கு பிரீதியாக முருகனை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: குரு பலத்தால் பண வரவு கூடும் என்றாலும் செவ்வாய் 12-ல் கேதுவுடன் இருப்பதால் வீண்செலவுகளும் இழப்புக்களும் கூட ஏற்படும். கைப்பொருளைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்கள், மற்றும் வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் நலனில் அக்கறை தேவைப்படும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். என்றாலும் செவ்வாய் 12-ல் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

தொழில்: போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றால் வருவாய் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கூட்டுத்தொழில் வளர்ச்சி பெறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகமாகும். பொன்னும் பொருளும் சேரும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும். திறமை பளிச்சிடும்.

பணம் வரும் தேதிகள்: டிசம்பர் 18 (பிற்பகல்), 19, 20.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.