சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி ஐ காப்பிட்டு கிளை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. நெருக்கமான கட்டிடங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் எதிரே இந்த எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனம் அமைந்துள்ளது. இதில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பல லட்சம் மதிப்பிலான ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறையினர் தமிழக வங்ககளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஏற்ப்பட்ட இந்த தீவிபத்து, முக்கிய ஆவணங்களை அழிப்பதற்காக செயற்கையாக நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மற்றபடி யாருக்கும் எந்த காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. எஸ்.பி.ஐ காப்பீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.