மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் இறந்து போயஸ் தோட்டத்திற்கு உடல் எடுத்துச்சென்றதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.
உதராணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதியே சந்தேகப்படும் நிலையில் ஜெயலலிதாவின் இறப்பு நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவும்கூட தயங்மாட்டேன் என்றும், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருப்பது தற்போது தமிழக மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தற்போது நீதிபதியின் உத்தரவையடுத்து ஜெ. சாவில் சந்தேகம் இருப்பதாக உறுதியாகியுள்ளது.
எனவே, அவற்றை வெளிக்கொண்டுவர முதல்வர் பன்னீர்செல்வத்தை மீடியா வலியுறுத்த வேண்டும் என்றும், ஜெயலலிதா இறப்பின் மர்மத்தை உடைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதையே பலரும் வளைதளங்களிலும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மர்மம் குறித்து மு.க.ஸ்டாலின் திடீரென கிளப்பியிருப்பது அதிமுக மேலிடத்தில் தற்போது கிலியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 30, 2016
இதுபோன்ற பல்வேறு சூழல்கள் குறித்து முதல்வரிடம் விளக்கம் பெற்று, மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறையினருக்கு உண்டு pic.twitter.com/qYxv1CNqRJ
— M.K.Stalin (@mkstalin) December 30, 2016
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.