News
Loading...

ஜெயலலிதா பெயரை கெடுத்ததே சசிகலாதான்! தமிழக போலீசை ஆட்டிப்படைக்கும் தாதா !

ஜெயலலிதா பெயரை கெடுத்ததே சசிகலாதான்! தமிழக போலீசை ஆட்டிப்படைக்கும் தாதா !

காஞ்சி தாதா ஸ்ரீதர்… அவர் தற்போது மேற்கத்திய நாடுகளில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தில் கொலை பிஸினசில் ஈடுபட்டுவருகிறார்.

இது தமிழக போலீசாரின் கருத்து. அவரை பிடிக்க காவல் துறையில் தனிப்படை அமைத்து, பிஸ்கோத்து டீ சாப்பிட்டு காலத்தை கடத்தினர்.

இப்படியிருக்க வெளிநாட்டில் இருந்து ஐ.பி.எஸ்.அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட ஸ்ரீதர் வார்த்தையில் அச்சிட முடியாத அளவுக்கு வசை பாடினார்.

அதற்கு காரணம், ஸ்ரீதரின் மகள் தமிழகத்தில் தேர்வு எழுதுவதற்காக லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார்.

ஸ்ரீதரைத்தான் பிடிக்க முடியல அட்லீஸ்ட் அவரது மகளையாவது பிடித்து அதன் மூலம் அவருக்கு மெருசல் விடுக்கலாம் என்று திட்டமிட்டார் அந்த ஐ.பி.எஸ்.

ஹும் திட்டமிட்டபடியே பிடித்துவிட்டார்கள். ஸ்ரீதரிடம் பேச வைத்து மிரட்டியும் பார்த்து கடைசியில் ஆடிவிட்டது காவல் துறை.

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் என் மகளை பத்திரமாக அனுப்பிவைக்கல மவனே உங்க பசங்களை………… என்று சினிமா பாணியில் மிரட்டினார் ஸ்ரீதர்.

ஆடிப்போன அந்த அதிகாரி, என் சர்வீசுல இப்படி என்னை யாரும் மிரட்டியது இல்லை என்று அச்சப்பட்டு, ஸ்ரீதரின் முழு ஹிஸ்டிரியை எடுக்க துவங்கினார். இடையே அவரது மகளை பத்திரமாக வழியனுப்பியும் வைத்தார்.

ஸ்ரீதரின் வரலாற்றில் அவரது முதல் கொலையே ஒரு பெண் தான். செத்தவரும் சாதாரண பெண் அல்ல. அவரது பெயர் மொட்டை அக்கா!

சென்னை, காஞ்சி வழியாக தமிழகம் முழுக்க சாராயம் சப்ளை செய்யும் தொழில் அந்த அம்மணிக்கு சொந்தம். ஸ்ரீதரும் அதே தொழிலுக்கு காலடி எடுத்து வைத்தார்.

மொட்டையுடன், ஸ்ரீதருக்கு மோதல் போட்டு தள்ளிவிட்டார் அந்த மொட்டையை. பின்னர் சாராய தொழிலுக்கு இவரே சக்கரவர்த்தி.

இவர் மீது 7 கொலை வழக்குகள் 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 43 வழக்குகள் உள்ளன.

இவரை பிடிக்கவே முடியவில்லை. அதனால் அரசு ரெட் நோட்டிஸ் கொடுத்து இன்டர்போல் போலீஸ் உதவியோடு தேடிக்கொண்டிருக்கிறது தமிழக போலீஸ்.

தற்போது இவருடைய பாஸ்போர்ட் வேல்யூ முடிவடைகிறது. எனவே அவர் வெளிநாட்டில் இனி வாழ முடியாது. இந்தியாவுக்கு திரும்பி வந்தாக வேண்டும்.

ஸ்ரீதரை அமுக்க  விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்கள் என இந்தியா முழுக்க  போஸ்டரை  ஒட்டி தேடி வருகிறார்கள்.

150 ஏக்கர் நிலம், துபாய் ஆயில் பிஸினஸ், டீசல் சப்ளையர். மாதம் 1.கோடி 20 லட்சம் லாபம்  கிடைக்கிறது. உலகத்திலேயே குழந்தைகளுக்கு தரமான கல்வியை பின்லாந்தில்தான் அளிக்கிறார்கள். அதற்கு நிகரான கல்வி நிறுவனங்கள் கட்ட உள்ளேன் என்று சில பேட்டியில் பந்தாவாக சொல்லும் ஸ்ரீதரை பிடிக்க தமிழக போலீசார் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரீதரோ, இந்தியாவில் மொத்தம் 5 பெண் சி.எம்.கள் அவர்களில் ஊழல் இல்லாத சி.எம்.ஜெயலலிதா தான்.

சசிகலா அது எல்லாம் நாம் சேர்க்கக்கூடாது.

ஜெயலலிதா அண்ணன் பொண்ணு, அண்ணன் பையன் எல்லாம் இருக்காங்க அவுங்க யாராவது ஊழல் செஞ்சிருக்காங்களா?

சசிகலா பேமிலியால தான் அந்தம்மாவுக்கு கெட்ட பேரு.

ஜெயலிலிதா பேரை சசிகலா தான் கெடுத்தாங்க. அந்த அம்மா எந்த ஊழலும் பண்ணலை என்று வெப் மீடியா ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

காஞ்சி ஸ்ரீதர் என்று யூ டியூபில் ஆங்கிலத்தில் போட்டால் வருகிறது.

தற்போது இந்த காஞ்சி டான் ஸ்ரீதருக்கு 25 ஆயிரம் கோடி சொத்து உள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.