News
Loading...

ஜெ. போல் வாழ்ந்த ஏவா! எம்பாமிங் முறையில் பதப்படுத்திய உடல்!

ஜெ. போல் வாழ்ந்த ஏவா! எம்பாமிங் முறையில் பதப்படுத்திய உடல்!

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போன்றது, அர்ஜென்டினாவின் இரும்புப் பெண்மணி ஏவாவின் வாழ்க்கையும்.  பேரழகியான ஏவா, ஒரு நடிகை. பிற்காலத்தில் அரசியலுக்கு வந்த அவர், பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர். 

சினிமாவில் நடித்துவந்த அவரை அரசியலுக்கு அழைத்து வருகிறார் அர்ஜென்டினாவின் அதிபர் பெரோன். அரசியலில் மக்கள் நலன் ஒன்றையே தன் மூச்சாகக்கொண்டு உழைத்த ஏவா, ஏழை மக்களின் இதயக்கனி ஆகிறார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிடுகிறார். இறந்த பிறகு அவரது உடலை ‘எம்பாமிங்’ முறையில் பதப்படுத்தி வைத்தனர். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல... 20 வருடங்கள் அவரது உடலை அப்படியே பாதுகாத்தனர். ஜெயலலிதாவைப் பற்றி அதிகம் பேசப்படும் இந்த காலகட்டத்தில் நம் நினைவுக்கு வரும் ஏவாவின் வாழ்க்கையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டில், லாஸ் டால்டாஸ் என்ற சிற்றூரில், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஏவா. குடும்பச் சூழல் காரணமாக தன் வீட்டைவிட்டு அர்ஜென்டினாவின் தலைநகரான ப்யுனஸ் ஏர்ஸ்க்கு இடம்பெயர்ந்தார். ஒரு நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்ற விருப்பமே வீட்டை விட்டு அவர் வெளியேறியதற்கு முக்கியக் காரணம். அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. இயற்கையிலேயே பேரழகியான அவருக்கு நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிட்டியது. அப்போதிருந்தே பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று குரல் எழுப்பினார். அர்ஜென்டினாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்காகப் பேசத் தொடங்கினார். ‘எவிட்டா’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

மேடை நாடகங்கள், ரேடியோ,  திரைப்படங்கள் என தன் நடிப்புத் திறமையால் மக்களைக் கவர்ந்தார் ஏவா. அந்த நாடகங்கள், திரைப் படங்கள் வாயிலாக பெண்கள் நலனுக்குக் குரல் கொடுக்கவும் செய்தார். அந்த சமயத்தில்தான், ஏவாவின் பேரழகையும், மக்களுக்குச் சேவைசெய்யும் மனப்பான்மையையும் கண்ட அரசியல் தலைவர் யுவான் பெரோன், ஏவா மீது காதல் கொண்டார். தன் முதல் மனைவியை இழந்த சோகத்தில் இருந்த பெரோனுக்கு  ஆறுதல் தந்து, நேசித்து, 1945-ல் அவரையே திருமணம் செய்துகொண்டார் ஏவா. திருமணம் முடிந்து ஆறே மாதங்களில் அர்ஜென்டினாவின் அதிபராகப் பொறுப்பேற்றார் பெரோன்.

அர்ஜென்டினா நாட்டின் ‘ஃபர்ஸ்ட் லேடி’ என்ற பெருமையைப் பெற்ற ஏவா, அந்த செல்வாக்கை பெண்கள் உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காகவும், ஏழைகள் நல்வாழ்வு செழிக்கவும் பயன்படுத்தினார். மக்கள் அவரை தங்களைக் காக்க வந்த தேவதையாகப் பார்த்தனர். ராணுவமும், அரசியல் தலைவர்கள் பலரும் அவரை ஒரு முட்டுக்கட்டையாகப் பார்த்து வந்தனர். தன் கணவர் அதிபராக நீடிக்க வேண்டி, மக்களுக்கு சேவை செய்வதுபோல் நடிப்பதாகக் குற்றம்சாட்டினர். இன்னும் சிலர், பெரோனின் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று குறிப்பிட்டனர். ஆனால், அவருடைய ஆதரவாளர்களோ, இந்த எதிர்வினையாளர்களின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளினர்.

ஜெ. போல் வாழ்ந்த ஏவா! எம்பாமிங் முறையில் பதப்படுத்திய உடல்!

மீண்டும் 1952-ல் தேர்தல் வந்த சமயத்தில், ஏவா அதிபராக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை புன்னகையுடன் நிராகரித்தார் ஏவா. பெரோன் இரண்டாவது முறையாக அதிபரானார். ஏவாவை நாட்டின் மதத்தலைவராகப்  பிரகடனம் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஏவா இறந்தார். பெரோனின் விருப்பப்படி ஏவாவின் உடல் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவின் ‘சுதந்திர தேவி’ சிலையைவிட உயரமான ஏவாவின் சிலை ஒன்றையும் நிறுவி, அவருடைய உடலை என்றும் மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

1955-ல் நாட்டில் ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு, யுவான் பெரோன் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். ஏவாவின் இறந்த உடலைத் தாங்கியிருந்த பெட்டி அகற்றப்பட்டது. அவரது பெயர் மக்கள் மனதிலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் புகைப்படங்கள், அவரைப் பற்றிய சுவரொட்டிகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்தனர். ‘பெரோனிசம்’ பேசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரோன் மற்றும் ஏவா பெயர்களை உச்சரித்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளானார்கள். 1955 முதல் 1971 வரை 16 வருடங்கள் அவரது உடல் எங்கே இருந்தது என்ற தகவல் எதுவும் இல்லை. 1973-ல் ராணுவ ஆட்சி முறியடிக்கப்பட்டு பெரோன் மீண்டும் அர்ஜென்டினா திரும்பினார்.  மூன்றாவது முறையாக அதிபரானார். மிலனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏவாவின் உடல் திரும்பக்கொண்டு வரப்பட்டது.

ஜெ. போல் வாழ்ந்த ஏவா! எம்பாமிங் முறையில் பதப்படுத்திய உடல்!

ஏவாவின் உடலை பெரோன் தன்னுடைய இல்லத்திலேயே பத்திரமாக வைத்துக்கொண்டார். பெரோன் இறந்த பிறகு அர்ஜென்டினா நாட்டின் அதிபராகப் பதவியேற்ற பெரோனின் மூன்றாவது மனைவி இசபெல், பெரோனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஏவாவின் உடலையும் அடக்கம் செய்தார். ஏவா வாழ்க்கையைப் பற்றி ‘எவிட்டா’ என்ற பெயரில் 1996-ல் திரைப்படம் வெளியானது. மடோனா நடிப்பில் வெளியான அந்தப் படம் ஏவாவின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது. இன்னொரு படமான ‘Eva Doesn’t Sleep’ என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படம் கடத்தப்பட்ட ஏவாவின் உடல் என்ன ஆனது என்ற மர்மத்துக்கு விளக்கம் கொடுத்தது. ஏவா இன்னும் துயில் கொண்டிருக்கிறார் என்றே அர்ஜென்டினா மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.      

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.