சென்னை: புயலை எதிர்கொள்ள 40 நபர்களை உள்ளடக்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வந்துள்ளதாக பெருகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
“நாடா” புயலை, எவ்வித சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட 108 மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளும், பொதுமக்களை தங்கவைப்பதற்காக 176 நிவாரண முகாம்களும், உணவு தயாரிப்பதற்காக 4 பொது சமையல் கூடங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 40 நபர்களுடன் 4 மிதவை மீட்பு படகுகள் அரக்கோணத்திலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள நாடா புயலால், பொதுமக்கள் அச்சப் படவோ, பயப்படவோ தேவையில்லை. மேலும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் தங்கள் புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 என்ற தொலைபேசி எண்களிலும், 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205 ஆகிய வாட்ச் அப் எண்களிலும், gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in, gccdm6@chennaicorporation.gov.in ஆகிய மின்னஞ்சல் வழியாகவும் புகாரினை பதிவு செய்யலாம்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.