News
Loading...

சைத்தான் - திரை விமர்சனம்

saithan movie review

கரு : மனிதர்கள் மீதே மருந்து பரிசோதனை செய்யும் சட்டவிரோத கும்பலுக்கு துணை போகும் அபலைப் பெண்ணும் அவளால் தன் பூர்வ ஜென்மத்திற்கு போகும் கணவனும் ., அந்த சட்டவிரோத கும்பலின் பிடியில் இருந்து மீண்டு(ம்) வாழ்க்கையில் இணைந்தார்களா ?இல்லை அந்த கும்பலால் இறந்தார்ளா..? எனும் கருவை உள்ளடக்கி வந்திருக்கும் திரைப்படம் .

கதை : ஐ.டி .கம்பெனி ஒன்றில் சகலகலா வல்லவராக வேலை பார்க்கும் தினேஷ் -விஜய் ஆண்டனிக்கு ஐஸ்வர்யா -அருந்ததி நாயருடன் திருமணமாகிறது . திருமணமான சில நாட்களிலேயே, விஜய் ஆண்டனிக்கு அவரது மண்டைக்குள்ளிருந்து யாரோ கட்டளையிடுவது மாதிரி ஒரு குரல் கேட்கிறது. அதனால் அடிக்கடி அசம்பாவிதங்களையும்,, ஆபத்துக்களையும் .. சந்திக்கும் விஜய் ஆண்டனி ., அது சம்பந்தமாக மனோதத்துவ நிபுணரை சந்திக்கிறார் .அதன் பின் விஜய் ஆண்டனியின் தஞ்சாவூர் பூர்வ ஜென்மம் , அது சம்பந்தமான பழி வாங்கல், சட்டத்திற்கு புறம்பான மருந்து பரிசோதனை , ஆள் அறுப்பு - உறுப்புகடத்தல், என எங்கெங்கோ சென்று ஒரு மாதிரியாக முடிகிறது சைத்தான் படத்தின் கதை மொத்தமும் .

காட்சிப்படுத்தல் : விஜய் ஆண்டனி , நடித்து , இசைத்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம் தான் " சைத்தான் ". புதியவர் பிரதீப்கிருஷ்ணமூர்த்தியின் எழுத்து , இயக்கத்தில் ., "அவுரா சினிமாஸ் "மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி வெளியிட்டிருக்கும் இப்படம் .,வித்தியாசமும் விறுவிறுப்புமான யாரும் எதிர்பார்க்காத விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இப்படத்திற்கு பெரும் பலம்.

கதாநாயகர் : தினேஷாக விஜய் ஆண்டனி மருந்து உட்கொள்வதற்கு முன் சைலண்ட்டான சகலகலா சாப்ட்வேர் இன்ஜினியராகவும் , மருந்து உட்கொண்ட பின், சாதாரண நிலையில் இருந்து சைத்தானாகவும் மாறும் இடங்களில் மிரட்டலாகவும், தன் நடிப்பில் நல் முன்னேற்றம் காட்டியிருக்கிறார். "நான் நல்லாதான் இருக்கிறேன்னு உன்ட்ட நிருபிக்கனுமா ... என காதல் மனைவியிடம் கொஞ்சி குலாவுவதில் தொடங்கி . "நான் டாக்டர்ட்ட போகணும் ... என்ட்ட யாரோ பேசுறாங்க.." தன் மாற்றமான நிலை உணர்ந்து பேசுவது வரை விஜய் ஆண்டனி ரசிகன் வியக்கும் வகையில் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.. இவரது பிரம்மச்சாரி சர்மா கேரக்டரும் பிரமாதமாய் பேசியிருக்கிறது.

கதாநாயகி : "நான் வந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு இந்த மாதிரி எல்லாம் நடக்குது ..." என புலம்பியபடியே தன் காரியத்தில் கண்ணாக இருக்கும் கதாநாயகியாக அருந்ததி நாயர் , கலர்புல் மனைவியாகவும் கச்சிதமாக நடித்திருககிறார். சர்மா -விஜய்யின் , தஞ்சை மனைவியாகவும் அம்மணிகச்சிதம்

பிற நட்சத்திரங்கள் : "திரும்பியும் அந்தக் குரல் கேட்டா .,ஆள் இல்லை வெளியூர் போயிட்டதா சொல்லு ... " , ஆபிஸுக்கு போனா என் பாஸ் குரல் , வீட்டுக்கு வந்தா என் பொண்டாட்டி குரலு .. சில சமயத்துல பொண்டாட டி குரலே பாஸ் மாதிரி இருக்கும் ,கேட்கும் .... என்று ரசனையாக பேசியபடி திடீர் கார்விபத்தில் மரணமடையும் நாயகனின் நண்பனாக முருக தாஸ் , மற்றும் ஆபிஸர் ஒய்.ஜி.மகேந்திரன் , ரிட்டயர்டு, ஏட்டு ஆறுமுகமாக சாருஹாசன் , அம்மாமீரா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரமறிந்து பக்காவாக பளிச்சிட்டிருக்கின்றனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் : சக்தி சரவணன் சண்டை பயிற்சி நச்'சென்று இருக்கிறது . சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கமும் கவரும் இயக்கம். வீர செந்தில்ராஜின் படத தொகுப்பு 64 ஆண்டு முந்தைய பூர்வ ஜென்மத்திற்கும் இந்த காலத்திற்கும் அழகாய் அல்லாடியிருக்கிறது. பிரதீப் கலிபுரயாத் தின் ஒளிப்பதிவு 'சைத்தான்' காவியப் பதிவிற்கு ஓவியப்பதிவு.

"நான் சுடச் சுட நனைகிறேன் .. ,", "கொல்லு கொல்லு ... " , " நீ யார் தெரியு மா..." , " ஏதேதோ ஏதேதோ ஆகிப்போச்சே .." உள்ளிட்ட பாடல்கள் விஜய் ஆண்டனியின் இசையில் ஒவ்வொன்ரும் ஒரு வித ரசனை .பின்னணி இசையோடு ஜெயலட்சுமி .. எனும் வார்த்தையையும் மிக்ஸ் பண்ணி இழைத்திருப்பதில் நடிகர் விஜய் ஆண்டனி மாதிரியே இசையாளர் விஜய் ஆண்டனியும் கவனம் ஈர்க்கிறார்.

பலம் : யாரும் யூகிக்க முடியாத வகையில் க்ளைமாக்ஸ் , மிகவும் சஸ்பென்காகவும் ,திகிலாகவும் படமாக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரிய பலம்.

பலவீனம் : 'சைத்தான்' எனும் டைட்டில்.

இயக்கம் : பிரதீப்கிருஷ்ணமூர்த்தியின் எழுத்து , இயக்கத்தில் .,"பொண்டாட்டி மேல சந்தேகமுன்னு வந்துட்டாலே... வருத்தமும் கோபமும் அதிகமாயிடும் ஆம்பளைங்களுக்குத்தான் தெரியும் அந்த வலி ...." என்பது உள்ளிட்ட அர்த்தபுஷ்டி டயலாக்குகளும் ., சைத்தானின் வழக்கத்திற்கு மாறான கதையும் காட்சியமைப்புகளும் நிச்சயம் பேசப்படும் .

பைனல்" பன்ச்" : மொத்தத்தில் "சைத்தான்'- ரசிகனை கவருவான்!"

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.