News
Loading...

கார்டனில் யார் யார்?


கார்டனில் யார் யார்?

இளவரசி, அவர் மகன் விவேக், மகள் ப்ரியா மூவரும்தான் தற்போது சசிகலாவுக்குத் துணையாக கார்டனுக்குள் இருக்கிறார்கள்!

கார்டனில் யார் யார்?

பவர் யார்?

ஜெ. உயிருடன் இருந்த காலத்திலேயே சசிகலா உறவுகளில் யாராவது ஒருவர் பவராக இருப்பார். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், அக்கா மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தடாலடி சர்ச்சைகளில் சிக்கி பதவி இழக்க,  சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனான டாக்டர் வெங்கடேஷ் இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை வேறுவிதமான குற்றச்சாட்டுகளில் வீழ்த்தினார்கள். அவருக்குப் பிறகு சசிகலா சொந்தங்களுக்குக் கட்சியில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சசி சிக்கியபோது சிறையில் உதவுவதற்காக அழைத்துவரப்பட்டவர் இளவரசி மகன் விவேக். ஜெயலலிதாவால் மூன்று வயதில் இருந்தே தூக்கி வளர்க்கப்பட்டவர். விவேக்கின் நடவடிக்கைகள் ஜெ-வுக்கு மிகவும் பிடித்துப்போக, ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக அவரை அமரவைத்தார்கள். தனது உறவினர்கள் வட்டத்தில் இருந்து இந்த முறை அக்கா மகன் டி.டி.வி.தினகரனைக் கொண்டுவர நினைக்கிறார் சசிகலா. தினகரன் உடல்நலம் குறித்தும் வதந்திகள் பரவின. ஆனாலும் மனிதர் உற்சாகமாக இருக்கிறார்.

கார்டனில் யார் யார்?

உற்சாக உறவுகள்

சசிகலாவின் கணவர் எம்.நடராசன், அவருடைய தம்பி எம்.ராமச்சந்திரன் இருவரும் அதிகாரிகள் தரப்புக்குள் புகுந்து புறப்படும் அதிரடி ஆசாமிகள். மத்திய - மாநில அரசியலில் ஆழமான நட்பும் அனுபவமும் கொண்டவர் நடராசன். தி.மு.க உடனடியாக உடைப்பு வேலைகளைக் கையில் எடுக்கும் எனத் தெரிந்து, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை முதலிலேயே கையில் எடுத்துவிட்டார் நடராசன். கொங்கு மாவட்டத்தில் உடைப்பு வேலையை தி.மு.க செய்ய முடியாத அளவுக்கு செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் சசிகலா முன்னால் கொண்டுவந்து நிறுத்தியதன் பின்னணியிலும்  நடராசன் பெயரே அடிபடுகிறது. வட மாவட்டங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் வன்னியர் ஆதரவையும் வலுவாக்குகிறார்கள்.

அரசியல் நெளிவு சுளிவுகளை அதிகம் அறிந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். கட்சிக்காரர்கள் `பாஸ்' என்பார்கள். டெல்டா மாவட்டங்களில் கோலோச்சிய அ.தி.மு.க புள்ளிகள் பலரிடத்திலும் திவாகரன் பற்றிய பயம். அஞ்சலி மேடையிலேயே விரல் சொடுக்கி, குரல் உயர்த்தி அட்டகாசமாக முன்னே நிற்கிறார் திவாகரன். சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் மகாதேவன் இன்னும் ஒரு படி  மேலே எகிறினார். அஞ்சலி நிகழ்வின்போதே, `யோவ் ஓ.பி' என முதலமைச்சரை மரியாதையோடு அழைத்து, திகிலூட்டினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.