News
Loading...

கடற் கொள்ளையர் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ., 20 ஆண்டுக்கு முன் எழுதிய வலம்புரி ஜான்!

கடற் கொள்ளையர் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ., 20 ஆண்டுக்கு முன் எழுதிய வலம்புரி ஜான்!

சிகலா அவரது கணவர் நடராஜன் உந்துதலின் பேரில், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி இந்த நாட்டின் பெரிய தலைவர்கள் வரிசையில் இடம் பெற களம் இறங்கியதை மீடியாக்களை காட்டிலும் சமூக ஊடகங்கள் பிய்த்து உதறிவிட்டன.

தன் நீண்ட கால எண்ணத்தை நிறைவேற்றி கொள்ள, ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன், அவரது தம்பி திவாகரன், உறவினர்கள் தினகரன், மகாதேவன், வெங்கடேஷ், ராவணன், என்று ஒரு படையை வைத்து முதற்கட்டமாக கட்சி பதவியில் அமர்ந்துவிட்டார்.

சசிகலாவின் பயணமே அதுதான். அந்த எண்ண வெளிப்பாட்டை எம் .ஜி.ஆரின் இதயத்தில் இடம்பிடித்த எழுத்தாளரும், எம்.பியுமான, வலம்புரிஜான் அப்போதே என்ன சொல்லியிருக்கிறார் பாருங்களேன்.

ஜெயலலிதா சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும், சச்சந்தனைப் போல் , தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார்.

அவர் படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா,நடராஜன் என்கிற கடற் கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத் தான் இருக்கிறார்.

ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழி வாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.

தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,திருச்சி சவுந்திரராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல் ஜெ., யை பார்க்கக்கூடது என்ற நிலைக்கு மாற்றினர்.

எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார்.

நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை,ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர்.

ஜெ.,யை தூக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, ’36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளனர் என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.

இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டு திட்டமே காரணம்.

தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்துவிட்டனர்.

இந்த சசிகலா எம்.ஜி.ஆர்., விசுவாசியுமல்ல, ஜெயலலிதா ஆளுமல்ல; சசிகலா,சசிகலாவின் ஆள்.

இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போதுகூட ஜெயலலிதா உணரமாட்டார்.

இப்படி,சசிகலா பற்றி 20ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரி ஜான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

வலம்புரி ஜான் எழுதியதை போல் இப்போது இவற்றை உணர ஜெ., இல்லையே..?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.