News
Loading...

2017ல் சனிபகவான் குறி வைத்திருப்பது உங்கள் ராசியின் மீதா?

2017ல் சனிபகவான் குறி வைத்திருப்பது உங்கள் ராசியின் மீதா?

ருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை. அந்த வகையில் இவ்வருடம் சனி மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தல் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தில் மிகவும் அச்சம் கொண்டு காணப்படும் பலன் என்றால் அது சனி பலன் தான். இந்த வருடம் சனியின் பலன்கள் யார் யாருக்கு என்ன நன்மை, தீமையை விளைவிக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்.

மேஷம்

இந்த வருடம் சனி உங்களுக்கு சிறப்பான பயனளிக்கும். அஷ்டம சனியில் இருந்து வெளிவந்துள்ள உங்களுக்கு, சனி அதிஷ்டத்தை அளிக்கும். துன்பங்கள் கழியும், பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்த உயர்வுகளை காண்பீர்கள்.

ரிஷபம்

உங்களுக்கு அஷ்டம சனி. இதை எண்ணி நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். ரிஷப ராசிக்கு சனி யோகம். கெடுதல், தீமைகள் என பெரிதாக தாக்கம் இருக்காது. மேலும், இந்த வருடம் சனி தாக்கத்தால் குடும்ப பிரச்சினைகள் தீரும், திருமண தடை நீங்கும், குழந்தை செல்வம் கிட்டும் வாய்ப்புகள் உண்டு, வெற்றியும், புகழும் தேடி வரும்.

மிதுனம்

மிதுன ராசிக் காரர்களுக்கு இது சப்தம சனி. கடன் தீரும், கல்வி மூலம் நன்மை அடைவீர்கள், திட்டமிட்டவை எல்லாம் சிறப்பாக அமையும். புதிய தொழில், வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் நன்மைகள் கைகூடும்.

கடகம்

இவ்வருடம் உங்களுக்கு இராஜயோகம். சனியின் பலன் உங்களுக்கு நல்லதாகவே உள்ளது. திட்டமிட்டு செய்தால் வெற்றிகள் குவியும். வீண் செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். புது நட்புகளும், அவர்கள் மூலம் நன்மைகளும் அமையலாம். செலவில் மட்டும் சற்று ஜாக்கிரதை அவசியம்.

சிம்மம்

இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அர்த்தாஷ்டம சனி விலகியுள்ளது. கவலைகள் விலகும், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். குடும்ப குழப்பங்கள் முடிவுக்கு வரும், கனவுகள் நிறைவேறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இது அர்த்தாஷ்டம சனி காலம். இது கொடுமைகள் விளைவிக்கும் என சிலர் அச்சுறுத்தலாம். ஆனால், பயப்படத் தேவையில்லை. ஜென்ம ராசியில் சனி பகவான் பார்வை செய்வதால் ஆரோக்கிய பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் தீரும். புதிய வேலை கிடைக்கும், மந்தமான தொழில் சிறக்கும், கையில் காசு தங்கும்.

துலாம்

இத்தனை நாள் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த சனி, இனிமேல் நிம்மதி அளிக்கும். எதிர்பாராத செலவும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். சொந்த வீடு வாங்கும் நேரம் வரும், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

ஜென்ம ராசியில் இருந்த சனி உங்களை விட்டு விலகுகிறார். ஆரோக்கியம் மேம்படும், கல்வி சிறக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும், வேலையில் மேலதிகாரிகளுடன் கவனமாக பழகுங்கள்.

தனுசு

ஏழரை சனியுடன், ஜென்ம சனியும் சேருகிறது. சுக்கிரன் உடன் இருப்பதால் நன்மை விளையும் அச்சம் வேண்டாம். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல யோகம். தொழில், வேலையில் லாபம் கிடைக்கும், வெற்றிகள் அமையும். வரா கடன் வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி. நன்மைகள் சிறிதளவு அமையும். கடன் தொல்லை நீங்கும், நீண்டநாள் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். இல்லறத்தில் சுப நிகழ்சிகள் அமையும்.

கும்பம்

உங்களுக்கு லாபகரமாக அமையும் இந்த வருட சனி பலன். யோகமயமாக எல்லாம் அமையும், தொட்டவை எல்லாம் வெற்றி அடையும். ராஜ வாழ்க்கை அமையலாம். கஷ்டமும், நஷ்டமும் தீரும். எதிலும் சற்று பொறுமையாக செயல்பட வேண்டும்.

மீனம்

நோய்நொடி தீரும், மன சங்கடங்கள் விலகும், மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுக நிகழ்வுகள் நடக்கும், கையில், வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையவேண்டாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.