நாமக்கல்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் ஈடுபட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தீபா ஆதரவாளர்கள் பேரவையை தொடங்கி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை நாமக்கல்லில் தீபா ஆதரவாளர்கள் தொடங்கி உள்ளனர். மோகனூர் அருகே உள்ள நெய்க்காரன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. நாமக்கல், மோகனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான தீபா ஆதரவாளர்கள் குவிந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
மறைந்த முன்னாள் முதல்வருக்கு இரங்கல் தெரிவித்தும், தீபாவை அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைமை ஏற்கவும், தீபாவிற்கு பிரதமர் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.