ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழ விடுதலைக்கான முன்னாள் ஆயுதப்போராட்டக்குழு ஒன்றின் முக்கியஸ்தரும் இலங்கையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மாத்திரமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளான வடகிழக்கில் நடாத்தப்படும் மாட்டு வண்டிச் சவாரி போன்ற நிகழ்வுகளையும் தடை செய்ய வேண்டும் இவை அனைத்தும் நாகரீகமற்ற மிருகவதை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் குறிப்பிட்டார் .
திரு டக்லஸ் தேவானந்த அவர்கள் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டக்குழுவான ஈழ மக்கள் விடுதலை முன்னணியில் இராணுவத் தளபதியாக இருந்தவர் பின்னர் அந்த இயக்கத்தின் தலைமையுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழமக்கள் ஜனநாயக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கி இலங்கையில் ஆழும் அரசுகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
மாணவர்களும் இளையவர்களும் தன்னெழுச்சியாக தமிழர் மரபு சார்ந்த உரிமைகளுக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் போது ஒரு முன்னாள் போராளியின் இக்கருத்து பல விதமான விமர்சனங்களுக்கு உட்படும் என்பது சந்தேகமில்லை
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.