சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை ஓரளவுக்கு சீராக இருந்தாலும் அவருக்கு நினைவு தப்பிவிட்டதாக பிரபல வார இதழ் ஒன்று கூறுகிறது.
இதனால்தான் அவர் பொதுக்குழுவுக்கு வரவில்லை என்றும், பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் அவரது உடல்நிலை இல்லை என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
மேலும் கருணாநிதிக்கு பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை என்றும் பேச்சும் இல்லை என்றும் வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை என்றும். திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை என்றும் கூறப்படுகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.