News
Loading...

ரூ.30 கோடி இல் இருந்து ரூ.1800 கோடியை 5 ஆண்டுகளில் அடைந்த பிக்பாஸ்கெட்- வளர்ச்சிக் கதை!

ரூ.30 கோடி இல் இருந்து ரூ.1800 கோடியை 5 ஆண்டுகளில் அடைந்த ‘பிக்பாஸ்கெட்’- வளர்ச்சிக் கதை!
பிக் பாஸ்கெட் நிறுவன குழு

ஷாருக்கான் உண்மையிலேயே பிக்பாஸ்கெட்டிலிருந்து பொருட்கள் வாங்குகிறாரா என்று கேட்டதும் ’அவர் ஆர்டர் செய்யும் பொருட்களை யார் டெலிவரி செய்வது என்று எங்களது மும்பை அலுவலகத்தில் சண்டையே நடக்கும்...’ என்றார் ஹரி மேனன். இந்த டிசம்பர் மாதத்தோடு இந்த ஆன்லைன் மளிகை ஸ்டார்ட் அப் ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது. இந்த மிகப்பெரிய பயணத்தையும் கடந்து வந்த பாதையையும் குறித்து அவர் விவரிக்கிறார்.

ஆன்லைன் மளிகை துறையில் முன்னிலையில் இருப்பதற்கு அவர்களது ப்ராண்டின் பிரதிநிதியாக விளம்பரம் செய்பவர்கள் மட்டுமே காரணம் அல்ல. எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுக்கு இணைய வர்த்தகம் உதவ முடியாது எனும் நம்பிக்கையை தகர்த்து எரிந்தது பிக்பேஸ்கட். மிகக்குறைவான தள்ளுபடியுடனும் வலுவான வணிக மாதிரியுடனும் மெதுவாக அதே சமயம் நிலையாக உயர்ந்துள்ளது. 

இன்று பிக்பாஸ்கெட்டிற்கு 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், பரிவர்த்தனைகளில் ஈடுபடும் 2.5 லட்ச வாடிக்கையாளர்களும், ஒரு மாதத்திற்கு 150 கோடிக்கு விற்பனையும் உள்ளது. பிக்பாஸ்கெட்டின் தலைமையகம் பெங்களூருவின் தோம்லூரில் உள்ளது. அங்குள்ள சிறிய அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஹரி மேனன்யுடனான உரையாடலில் பிக்பேஸ்கட்டின் ஐந்து வருட கால வளர்ச்சியை நினைவு கூர்ந்தார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இவர்களது குழு Horeca எனும் பி2பி பிரிவை தனிக்குழுவுடன் அறிமுகப்படுத்தியது.

புதிய பாதை அமைத்த ’பிக் பாஸ்கெட்’

சராசரியாக ஒரு முழு அளவு ஸ்டாக் 1,500 ரூபாய்க்கும், எக்ஸ்பிரஸ் டெலிவரிக்கு 650 ரூபாயாகவும் கொண்டுள்ள பிக்பாஸ்கெட, இந்த முறை நிதி ஆண்டு இறுதிக்குள் 1800 கோடி ரூபாய் வருவாயை எட்டிவிடும். அவர்கள் 2020-ல் ஒரு பில்லியன் டாலர் வருவாயை எட்ட திட்டமிட்டிருந்தாலும் மளிகை வணிகத்துறையில் இது மிகவும் கடினமானதாகும். இது குறித்து ஹரி கூறுகையில்,

”இந்த வணிகத்தை தொடங்கி ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நாங்கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 12.30 வரை பணிபுரிகிறோம்.” 

கடந்த வருடம் ’Delyver’ நிறுவனத்தை வாங்கிய பிறகு, பிக்பேஸ்கட் அதன் எக்ஸ்பிரஸ் வணிகத்தை உருவாக்கத் தொடங்கியது.  ‘கோல்ட் செயின்’ முறையில் முதலீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவின் விஜயவாடா மற்றும் அனந்தபுராவில் பெரிய கிடங்குகளை திறந்து,  2017-ல் சேவையைத் தொடங்க உள்ளனர்.

பிக்பேஸ்கட் இன்று 25 நகரங்களில் உள்ளது. சந்தையில் மேலும் ஊடுருவி விரிவுபடுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மொத்த வருவாயான 1800 கோடி ரூபாயில் 18 சதவீதம் பழங்கள் மற்றும் காய்கறிகள், 15 சதவீதம் பிக்பேஸ்கட் பிரதான பொருட்கள், 20 சதவீதம் ப்ராண்டட் பொருட்கள், 45 சதவீதம் எஃப்.எம்.சி.ஜி ஆகியவை இதில் பங்களிக்கிறது. தற்போது இவர்களது குழு 120 நபர்களுடன் எட்டு நகரங்களில் இயங்கி, செயல்பாட்டு   சமநிலையை அடுத்த ஆறு மாதங்களில் அடையும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

ரூ.30 கோடி இல் இருந்து ரூ.1800 கோடியை 5 ஆண்டுகளில் அடைந்த பிக்பாஸ்கெட்- வளர்ச்சிக் கதை!

தொழிலில் அதிவேக வளர்ச்சி இருந்தாலும் மொத்த பணியாளர்களில் 75 சதவீதமுள்ள தொழிலாளர்களுடன் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. 30 நபர்கள் பணிக்கு வரவில்லையெனினும் மொத்த வணிகமும் சரிந்துவிடும்.  இது குறித்து ஹரி குறிப்பிடுகையில்,

”எங்களால் இதை முழுவதுமாக சரிசெய்ய முடியவில்லை. நிறைய நபர்களை பணியில் அமர்த்தியுள்ளோம். ஒரு டிரஸ்டை நடத்தி வருகிறோம். அதன் மூலம் அவர்களது குழந்தைகளின் படிப்பிலும் மருத்துவ நலன்களிலும் பங்கெடுத்து வருகிறோம். இருந்தும் அவர்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.”

அருகிலிருப்பவர்கள் அனைவரையும் அணுகியாகிவிட்டது. இந்த வருடம் மேலும் சிறிய நகரங்களிலுள்ளவர்களை வரவழைத்து அவர்களை முயற்சி செய்ய உள்ளோம். அவர்களால் அனுசரித்துச் செல்ல இயலவில்லையெனில் திரும்பச் சென்றுவிடுவார்கள்,” என்றார்.

எந்தெந்த குழுக்களில் தேவைக்கும் குறைவான வேலையாட்கள் உள்ளார்களோ அவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேசவேண்டும். பண்டிகை சமயத்தில்தான் அதிக கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் குழு தனது திறனை குறைத்துவிடும். அதனால் ஒரு வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை கொடுக்கும்போது இரண்டு நாட்கள் கழித்து அவரது ஆர்டரை பூர்த்தி செய்யும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

”வாடிக்கையாளர்கள் மளிகைப் பொருட்களுக்காக இரண்டு நாட்கள் காத்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக இது எங்களுடைய மிகப்பெரிய குறையாக உள்ளது. நாங்கள் இதை சமாளித்து வருகிறோம்” என்கிறார் ஹரி. 

பண மதிப்பு நீக்கம் சமயத்தில் இவர்களது குழுவினர் சந்தித்த பிரச்சனை இதுதான். “நம்மால் செய்ய முடியாது எனும் விஷயத்தையோ அல்லது செய்யக்கூடாது எனும் விஷயத்தையோ முயற்சி செய்யக்கூடாது என்பது எங்களது திடமான நம்பிக்கையாகும். உங்களால் கொண்டு சேர்க்க முடியாது எனும் பட்சத்தில் அதிக ஆர்டரை எடுத்துக்கொள்ளக் கூடாது. நிச்சயம் முடியாது என்றால் டெலிவரிக்கான தேதியை ஒத்துக்கொள்ளாமல் எங்களால் முடிந்த தேதியையே வாடிக்கையாளர்களுக்கு ஒத்துக்குவோம்.” என்கிறார் ஹரி.

முதல் வெற்றி

இணைய வர்த்தக சந்தையில் மூத்தவர்களான இவர்களது தொழில்முனைவின் இரண்டாவது முயற்சி இதுதான். இவர்களின் ஃபேப்மார்ட் வணிகம் ஆன்லைனிலிருந்து மாற்றுப்பாதையான நேரடியான மளிகை வணிகத்தை நோக்கி பத்தாண்டுகளுக்கு முன் நகர்ந்தது. தயாரான மற்றும் வலுவான வர்த்தக சூழல்தான் இணைய வர்த்தகத்திற்கு நிச்சயம் உதவும் என்கிறார் ஹரி. 

1999-ல் அவர்கள் துவங்கியபோது இணையம் அப்போதுதான் சலசலப்புடன் சத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியருந்தது. உண்மையான பரிவத்தனைகளைவிட சத்தம் சற்று அதிகமாகவே இருந்தது.” என்றார்.

டயல்-அப் இணைப்புகளும் மோசமான ஆன்லைன் கட்டண வசதிகளும் இருந்ததால் இணைய வர்த்தகத்தை உகந்ததாக மாற்ற அப்போது எதுவும் இல்லை. விற்பனையாளர்கள் நம்பமாட்டார்கள். தற்போது இருப்பதுபோன்ற வெளிப்படை தன்மையுடன் அப்போது இல்லை. கையில் பணத்தை கொடுத்தவுடன் டெலிவரி செய்யும் முறை மட்டும்தான் அந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்தது.

”மூலதனத்தை பெற்றுவிட முடியும். அதைத்தான் நாங்கள் செய்தோம். ஆனால் உங்களுக்கு பக்கபலமான தொழில் சூழல் இல்லையெனில், வணிகம் செழிக்காது”, என்கிறார் ஹரி.

எங்கள் குழு ஒரு ஆன்லைன் மளிகை ஸ்டோரை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. 2011-இல் இணைய வர்த்தக சந்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை  காட்டத் துவங்கியது. ஆன்லைன் பரிவர்தனைகள் நடைபெறத் தொடங்கியது. 2011-ல் அதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டபோது முதல் சுற்று நிதியிலேயே 10 மில்லியன் டாலருடன் தொடங்கிய ஸ்டார்ட் அப் பிக்பாஸ்கெட்தான். ஏற்கெனவே இந்த வணிகத்தில் அனுபவமும், அதிலுள்ள குழப்பங்கள் குறித்த புரிதலும் இருக்கும் குழு அமைந்ததால் முதலீட்டாளர்கள் சற்றும் தயங்கவில்லை.

இருந்தும் இவர்களது குழு முதலீட்டாளரை அணுகியபோது வெற்றிகரமான மாதிரியை காட்ட வலியுறுத்தினார்கள். மளிகை பகுதி மட்டும்தான் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. ஓரளவுக்கு வெற்றியைத் தழுவியிருந்த UK-வின் ஒகாடோ-வை உதாரணமாக பயன்படுத்தினர். இது குறித்த ஸ்லைடுகளையே குழுவினர் முதலில் பயன்படுத்தினர்.

ரூ.30 கோடி இல் இருந்து ரூ.1800 கோடியை 5 ஆண்டுகளில் அடைந்த பிக்பாஸ்கெட்- வளர்ச்சிக் கதை!

”முதலில் மூலதனத்தை உயர்த்தி தொடங்க நினைத்தோம். ஏனெனில் தொழிலுக்கு முதலீடு அவசியம். ஆன்லைன் மளிகையை பொருத்தவரை சுய நிதியில் தொடங்கவேண்டிய அவசியமில்லை. முதல் நாளிலிருந்தே வளர்ச்சியை சந்திக்க நேரிடலாம் அல்லது சந்திக்க முடியாமலே போகலாம். எப்படியிருப்பினும் சிறிய அளவில் தொழில் புரியமுடியாது. பெரிய அளவில் மட்டும்தான் தொழிலில் இறங்கமுடியுமே தவிர குறுகிய அளவில் செய்யமுடியாது.” என்றார் ஹரி.

தைரியமாக எதிர்கொள்வது

பிகபாஸ்கட்டின் பழங்கள் மற்றும் காய்கறிகளின் லாபம் 35 சதவீதம். ஆனால் சிறிய அளவாக இருக்கும்போது ஒருவருக்கு 10 முதல் 12 சதவீதம்தான் கிடைக்கும். அதிகமான அளவை எட்டவில்லையெனில் ஒரு பொருட்கிடங்கை கூட திறக்கமுடியாது. ஜஸ்ட்-இன்- டைம் மாதிரியைத்தான் பின்பற்றவேண்டியிருக்கும். ஆன்லைன் மளிகைக்கு மிகப்பெரிய தேவை இருப்பதாக நம்புகிறார் ஹெலியன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் பிக்பாஸ்கெட்டின் போர்ட் உறுப்பினராகவும் உள்ள சஞ்சீவ் அகர்வால்.

இந்தியாவின் 2 ட்ரில்லியன் டாலர் சில்லறை சந்தையில் 300 பில்லியன் டாலர் மளிகைக்கானது. தற்போது மிகக் குறைந்த சதவீதமே ஆன்லைனில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதாலும் வாகனங்களை நிறுத்தும் பிரச்சனை இருப்பதாலும் ஆன்லைன் சேவை அதிக வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் சஞ்சீவ். அவர் கூறுகையில்,

”வாடிக்கையாளர்கள் பிக்பாஸ்கெட்டில் வாங்குவதற்கு முக்கியக் காரணம் வசதி மற்றும் தாங்களே தேர்வு செய்யும் நிலை. மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் வாங்குவதிலிருந்து ஆன்லைனில் வாங்க எளிதாக மாறிவிடுவார்கள். எனினும் ஆன்லைன் வர்த்தகத்தின் அளவு குறைவாக இருப்பதால் முதிர்ச்சியான கட்டத்தை எட்டிவிடவில்லை. உலகின் மற்ற பகுதிகளில் 10 முதல் 15 சதவீத சில்லறை வர்த்தகம் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. சீனாவிலும் அலிபாபாவில் மளிகை பிரிவுதான் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது,” என்றார்.

முதல் நாளிலிருந்தே ஃப்ரெஷ்ஷான தயாரிப்புகளுக்கு பிக்பாஸ்கெட் முக்கியத்துவம் அளித்து வருகிறது. “தரம் என்கிற கருத்தே பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்துதான் வருகிறது. சர்ஃப் எக்ஸல் போன்ற பொருட்களிலிருந்து வருவதில்லை.” என்கிறார் ஹரி. ஃப்ரெஷ் தயாரிப்புகளை மக்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை வாங்குவார்கள்  என்பதால் இந்தப் பகுதிதான் ப்ராண்டை உருவாக்கும் என்று இவர்களது குழு நினைத்தார்கள்.

ஆதாயம் நிறைந்த மாதிரி

இவர்களது சரக்கு இருப்பளவு மாதிரிக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் உள்ளது. தயாரிப்பாளர்களுடனும் விற்பனையாளர்களுடனும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் வசதி சரக்கு இருப்பளவு மாதிரியில் உள்ளது. இதனால் தரக்கட்டுப்பாட்டுடன் செலவும் குறையும் என்கிறார் டெக்னோபாக் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அர்விந்த் சிங்கால். 

“கணிசமான குறைந்த விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு ப்ரைவேட் லேபிளுடன் கொடுக்க முடிவது ஒரு தனிப்பட்ட ஆதாயமாகும்.” என்கிறார் அரவிந்த். பிக்பாஸ்கெட் ஒரு பிராண்டாக சிறந்த லாபம் அளிப்பதன் மூலம் விற்பனையாளர்களிடம் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. இருப்பினும் இதில் கடினங்கள் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஹரி,

”முதலில் அதிக அளவில் வாங்காததால் எங்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கமுடியவில்லை. மண்டியிலிருந்து வாங்கவேண்டியிருந்ததால் குறைவான லாபத்தில் தொடரவேண்டியிருந்தது. எங்கள் தொழிலில் ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரைப்பதன் மூலமாகமே தொழில் வளர்ச்சியடையும் என்பதால் தர உத்தரவாதம் முக்கிய அம்சமாகும்.”

உங்கள் சேவை சிறப்பாக இருக்குமெனில் வாடிக்கையாளர்களை தக்கவைப்பது சிரமமல்ல. அத்தியாவசிய பொருட்களை அறுமுகப்படுத்தியதும் மக்கள் மாறியதையும் வசதிக்கேற்ப தேர்ந்தெடுப்பதையும் பார்க்கமுடிந்தது. 

கொகெய்ன் மாடல்

தேசிய அளவில் பாதுகாத்து வைத்து விநியோகிப்பது என்பது மளிகைப் பொருட்களுக்கு சரியாக இருக்காது. “இது போன்ற தொழிலுக்கு உற்பத்தி, கையாள்வது, விநியோகிப்பது போன்றவைக்கு உள்ளூரிலேயே வசது செய்வது அவசியமாகும். ஆகவே நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்துவது என்பது நான்கு தனித்தனி தொழிலை உருவாக்குவதற்கு சமமாகும்.” என்கிறார் டெக்னொபாக்கின் அரவிந்த்.

ஒரே நேரத்தில் பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்துவது அவர்கள் வெற்றியடைவதற்குள் அவர்களை அழித்துவிடும். தங்களை நிலைப்படுத்திக்கொள்ள 25 வெவ்வேறு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை விட மெட்ரோக்களில் கவனம் செலுத்துவதே சிறந்தது. மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களிடம் வாங்காமல் ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் வாங்குகிறார்கள் என்று பிக்பாஸ்கெட் குழுவினர் கவலை கொள்கின்றனர். வெறும் பழக்கம் காரணமாகவே மக்கள் தங்களது வழக்கமான வாங்கும் முறையிலிருந்து மாறுவதற்கு தயங்குகிறார்கள் என்கிறார் ஹரி.

”வசதியை முன்னிறுத்தியே அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், பொருட்கள் தவறிவிடும் என்றும் அல்லது சரியான நேரத்தில் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் என்றும் வாடிக்கையாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள்” என்கிறார் ஹரி. 
இதனால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உருவாக்குவது பிக்பாஸ்கெட்டிற்கு கடினமாக இருந்தது. மூன்று முதல் ஆறுமாத கால இடைவெளியில் இரண்டு முறை எங்களிடமிருந்து வாங்கினால் அவர்களை வாடிக்கையாளர் எனலாம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவதை உறுதிசெய்ய இந்தக் குழுவினர் ’கோகெய்ன்’ மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதில் வாடிக்கையாளர்கள் ஒன்று, இரண்டு, மூன்று, சில்வர், கோல்ட், ப்ளாடினம் என்று பல்வேறு ட்ரையல்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.

ட்ரையல் ஒன்று என்பது முதல் ஆர்டர், இரண்டாவது ஆர்டர் ட்ரையல் இரண்டு மற்றும் மூன்றாவது ஆர்டர் ட்ரையல் மூன்று எனவும் அழைக்கப்படும். நான்காவது ஆர்டரில் வாடிக்கையாளர் சில்வர் என்று வகைப்படுத்தப்படுவார். இப்படி இந்த குழு ஒரு வாடிக்கையாளர் இருப்பதை உறுதி செய்துகொள்வார்கள். 

ட்ரையல் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றிலிருப்பவர்கள் தொடர்ந்து பொருட்களை வாங்கி ப்ளாடினம் வகையை அடைந்தபின் அவர்களை தக்கவைத்துக்கொள்ளும் விகிதம் 95 சதவீதமாகும். ஆகவே வாடிக்கையாளர்களை வகைகளில் ஒன்றிலிருந்து அடுத்தடுத்து முன்னேற ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது இவர்களது குழு. இவர்களது வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் ஒட்டுமொத்த விகிதம் 35 சதவீதமாகும். 

வாடிக்கையாளர்கள் என்னென்ன பொருட்களை வாங்கினார்கள் என்பதை புரிந்துகொண்டு அந்த டேட்டாவின் உதவியுடன் அவர்களை தக்கவைத்துக்கொள்வதே இவர்களின் திட்டமாகும். ”வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு சலுகைகளை கொடுக்கிறோம். முதல் நபரை தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தும் திட்டம் இரண்டாவது நபரை தக்கவைத்துக்கொள்வதிலிருந்து மாறுபட்டிருக்கும்” என்கிறார் ஹரி.

கடந்த வருடம் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தி வந்தோம் என்கிறார் ஹரி. வரப்போகும் ஆண்டில் அவர்கள் இயங்கும் நகரங்களில் அதிக கவனம் இருக்கப்போவதாக கூறினார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.